அனைவரும் கண்டு பயப்படும் சனிபகவானையே இராவணன் ஏன் சிறையில் அடைத்தார் தெரியுமா?

கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருமே கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அவர் சனிபகவன்தான்.

கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருமே கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அவர் சனிபகவன்தான். ஏனெனில் ஒருவரின் ராசிக்கு சனிபகவான் வந்துவிட்டால் அவர்களை படாதபாடு படுத்தி விட்டுத்தான் செல்வார். நாம் படும் துயரங்கள் யாவும் கடந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களுக்காக சனிபகவானால் வழங்கப்படுவதாகும்.

Interesting Story of Shani Dev and Ravana

அனைவரும் கண்டு நடுங்கும் சனிபகவானையே ஒரு மன்னன் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தான். அது எப்படி?. அதேபோல ஆஞ்சநேயரை வணங்குபவர்களை சனிபகவான் அதிகம் சோதிக்க மாட்டார். அது ஏன்?. மற்ற கிரகங்கள் எல்லாம் ஒரே ஆண்டில் நம் ராசியை விட்டு நகர சனிபகவான் மட்டும் ஏன் ஒவ்வொரு ராசியிலும் ஏழரை ஆண்டுகள் நிற்கிறார்? என சனிபகவானை சுற்றி நமக்குள் எழும் கேள்விகள் ஏராளமாகும். இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராவணன்

இராவணன்

சனிபகவானை சிறையில் அடைத்து துன்புறுத்தியது வேறு யாருமல்ல அசுரகுல சக்கரவர்த்தி இராவணன்தான். உண்மைதான் மூவுலகையும் அடிமைப்படுத்திய இராவணன் நவகிரகங்களை தன கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டிப்படைத்தான்.

மேகநாதன்

மேகநாதன்

இராவணன் சனிபகவானை சிறைபிடித்து கொடுமைபடுத்த காரணம் அவனின் மகன் மேகநாதன்தான். மேகநாதன் பிறக்கும் நேரம் வந்த பொது இராவணன் நவகிரகங்கள் அனைத்தையும் 11ஆம் வீட்டில் இருக்கும்படி கூறினார். அதன் மூலம் மேகநாதன் சாகவரத்தை அடைய முடியும் என்று இராவணன் எண்ணினான். ஆனால் அதற்கு சனிபகவான் ஒப்புக்கொள்ளவில்லை.

சனிபகவானின் திட்டம்

சனிபகவானின் திட்டம்

மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தி என்று தெரிந்தும் சனிபகவான் இராவணனை எதிர்த்து அவன் சொல்வதை கேட்கமாட்டேன் என்று கூறினார். இதனால் கோபமுற்ற இராவணன் சனிபகவானை பிடித்து 11ஆம் வீட்டில் வைத்து அழுத்தி னார். மேகநாதன் பிறக்கும் சமயம் சனிபகவான் தன் காலின் சிறுபகுதியை 12ஆம் வீட்டில் வைத்துவிட்டார். இதனால் மேகநாதனின் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

இராவணனின் கோபம்

இராவணனின் கோபம்

சனிபகவானின் சதிச்செயலை அறிந்து கோபமுற்ற இராவணன் அவரை துன்புறுத்த தொடங்கினான். மற்ற கிரகங்களிடம் இருந்து அவரை பிரித்து இலங்கையின் மையத்தில் இருந்த சிறையில் யாராலும் விடுவிக்க முடியாத வண்ணம் சனிபகவானை அடைத்து வைத்துவிட்டான். இதனால் கோபமுற்ற சனிபகவான் தீர்த்த யுகத்தில் இராவணனின் பொன்னிலங்கை தீக்கிரையாகும் என்று சாபமிட்டார்.

அனுமன் பெற்ற வரம்

அனுமன் பெற்ற வரம்

சனிபகவான் சாபமிட்டபடியே இலங்கை எரியும் நாள் வந்தது. அது வாயுமைந்தன் அனுமனால் நடத்தப்பட்டது. சீதையை தேடி அனுமன் இலங்கை வந்தபோது இராவணனனால் அனுமனின் வாலில் தீ வைக்கப்பட்டது. அதையே பயன்படுத்தி பாதி இலங்கையை எரித்தார் ஆஞ்சநேயர். அவர் இலங்கையை எரித்து விட்டு திரும்ப முயன்றபோது சிறையில் சனிபகவான் இருப்பதை கண்டார். கடுமையான முயற்சிகளுக்கு பின் அவரை விடுவித்தார். சிறையை வெளியே வந்த சனிபகவான் தன்னை விடுவித்த அனுமனுக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அனுமன் என்னை வணங்குபவர்களை தாங்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்று கேட்டார். சனிபகவானும் அதற்கு சம்மதித்தார். அதனால்தான் அனுமனை வழிபடுபவர்களை சனிபகவான் எதுவும் செய்வதில்லை.

சனிதிசை

சனிதிசை

சனி கிரகம் மற்ற கிரகங்களை விட அதிக நீள்வட்ட பாதையை கொண்டுள்ளது, இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 29.457 ஆண்டுகள் எடுக்துக்கொள்ளும். இந்த காலத்தில் சனிபகவான் அனைத்து ராசிக்கும் சென்று வந்து விடுவார். ஒவ்வொரு ராசியிலும் சனிபகவான் ஏழரை ஆண்டுகள் இருப்பார், இதுவே சனிதிசை எனப்படும். ஒருவரின் வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று சனிதிசை ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் வாழ்பவர்களுக்கு 4 சனிதிசை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏன் சனிபகவான் ஏழரை ஆண்டுகள் இருக்கிறார்?

ஏன் சனிபகவான் ஏழரை ஆண்டுகள் இருக்கிறார்?

மற்ற கிரகங்கள் விரைவில் ராசியை கடந்து செல்லும்போது சனிபகவான் மட்டும் ஏன் ஏழரை ஆண்டுகள் இருக்கிறார் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்கு காரணம் சனிபகவான் மற்ற கிரகங்களை விட மிகவும் மெதுவான கிரகம் ஆகும். உண்மையில் சனிபகவான் ராசியில் 2.5 ஆண்டுகள் இருப்பார். சனிபகவானின் தாக்கம் சனி உங்கள் ராசிக்கு வருவதற்கு முன் 2.5 ஆண்டுகள் உங்கள் ராசியில் இருக்கும்போது 2.5 ஆண்டுகள் மற்றும் செல்லும்போது 2.5 ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகள் உங்கள் ராசியில் இருப்பார்.

மற்ற மதங்கள்

மற்ற மதங்கள்

சனிபகவான் இந்து மதத்தில் மட்டும் வணங்கப்படும் கடவுள் இல்லை. மற்ற மதங்களிலும் சனிபகவானை வழிபடுகின்றனர். புத்த மதம் மற்றும் ஜெயின் மதத்திலும் சனிபகவானை வழிபடுகின்றனர். புத்தமதத்தில் சனிபகவான் காகத்திற்கு பதிலாக ஆமையை வாகனமாக கொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion