Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் சச்சின்... அவரு பிளான் என்ன தெரியுமா?
சச்சினின் உலகக் கோப்பை ஆட்டங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அவர் இந்த உலகக் கோப்பையில் கலந்து கொள்ளப் போகிறார். அப்படி என்ன செய்யப் போகிறார் என்பத
கிரிக்கெட்டின் கடவுள் என்றும் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற, உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அந்த இடம் சச்சினை தவிர வேறு யாருக்கும் கிடையாது.

இந்தியாவுக்கே உலக விளையாட்டு அரங்கில் பெருமைத் தேடிக் கொடுத்த வீரர் நம்ம சச்சின் தான். அதனால் தான் கடந்த உலகப் கோப்பையை இந்திய வீரர்கள் சச்சினின் ஓய்வுக்கான காணிக்கையாக வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

சச்சின்
சச்சின் கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என பல பட்டங்களைப் பெற்று, உலக அளவில் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாகவும் ரோல் மாடலாகவும் திகழ்பவர் தான் சச்சின் தெண்டுல்கர்.
சச்சினின் ஏராளமான சாதனைகளை திரும்பவும் அவரே தான் முறியடித்திருக்கிறார். சாதனைகளின் நாயகனான சச்சின் கடந்த உலகக் கோப்பை தான் அவர் கடைசியாக விளையாண்டார். அவருக்காகவே இந்தியா உலகக் கோப்பையை வென்று அவருடைய கையில் கொடுத்து ஆனந்தப்பட்டது.

உலகக்கோப்பை சாதனைகள்
சச்சின் தன்னுடைய கிரிக்கெட் விளையாட்டு அனுபவத்தில் இதுவரை எந்த வீரரும் விளையாடாத அளவுக்கு ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக பெருமை சேர்ந்திருக்கிறார்.

உலகக் கோப்பை
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களாக 673 ரன்கள் எடுத்து, சாதனைப் படைத்துக் காட்டினார். தான் விளையாடிய ஆறாவது உலகக் கோப்பை போட்டிகளில் 2278 ரன்கள் குவித்து சாதனை புரிந்தார்.

முதல் உலகக் கோப்பை
சச்சின் தன்னுடைய முதல் சர்வதேச தொடரில் கொண்டது 1989 ஆம் ஆண்டு. அவர் கலந்து கொண்ட முதல் சர்வதேச தொடரில் அவர் கலந்து கொள்ளும்போது அவருடைய வயது 16. இந்த தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அடைந்தார்.

ரன்கள் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ங பெருமையை 15,921 ரன்கள் குவித்துப் பெற்றுத் தந்தார்.
அதேபோன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில், 18426 ரன்கள் குவித்திருக்கிறார்.

2013 இல் ஓய்வு
இப்படி யாராலும் மிஞ்ச முடியாத ஆயிரக்கணக்கான சாதனைப் புரிந்த இவர் 2013 ஆம் ஆண்டு தான் ஓய்வு பெறப் போவதாக தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

2019 உலகக் கோப்பையில் சச்சின்
என்னங்க! நம்பவே முடியலயா? நிஜமாதாங்க... 6 வருஷத்துக்கு முன்னாடி ஓய்வு அறிவிச்சவரு எப்படி விளையாட முடியும்? அதுவும் பட்டியல்ல கூட எந்த அறிவிப்பு இதுபற்றி இல்லையே என்று நினைக்கிறீங்களா?
இந்த 2019 ஆண்டு உலகக் கோப்பையில் சச்சின் கலந்துக்கிறார்னு சொன்னோமே தவிர அவரு கிரவுண்டுல இறங்கி விளையாடப் போறார்னு சொல்லலயே. ஆமாங்க. அவரு இறங்கி விளையாடப் போடறது கமெண்ட்ரி ஸ்டுடியோ ரூம்ல தான். ஆமாங்க... மற்ற வீரர்கள் எல்லோரும் பெரும்பாலும் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு சில நாட்களிலேயே கமெண்ட்டிரியன்களாக களத்தில் இறங்கிவிடுவது வழக்கம். ஆனால் சச்சின் மட்டும் அப்படி வரவில்லை.

ஸ்பெஷல் ஷோ
இந்த உலகக் கோப்பையில் அதை ஒரு கை பார்த்துவிட முடிவு செய்திருக்கிறார் சச்சின். தன்னுடைய சக வீரர்களும் நண்பர்களுமான சவுரவ் கங்குலி மற்றும் விரேந்திர சேவாக் ஆகியோருடன் சேர்ந்து 31.5.19 இல் தொடங்குகிற உலகக் கோப்பையின் முதல் போட்டியான இங்கிலாந்துக்கும் தென் ஆப்பிரிக்காவுக்குமான போட்டியில் முதல் நாள் கமெண்ட்ரியைத் தொடங்குகிறார்.
இப்படி இவர்களுடன் சேர்ந்து ஆட்டத்தை வர்ணனை செய்வதோடு மட்டுமல்லாமல் சச்சின் மட்டும் தனியாக தன்னுடைய கொஞ்சம் குரலால் ஆட்டத்தின் போக்கு பற்றி வர்ணனை செய்ய SACHIN OPENS AGAIN என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்வை பிசிசிஐ ஏற்பாடு செய்திருக்கிறது. அப்புறம் என்ன? இந்த உலகக் கோப்பை சச்சினோட சேர்ந்து நாமும் கொண்டாட வேண்டியது தான்.



Click it and Unblock the Notifications











