Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
பெண்களின் இந்த செயல்கள் அவர்கள் குடும்பத்தில் நிரந்தர வறுமையை ஏற்படுத்துமாம் தெரியுமா?
ஆண்கள் பொருள் ஈட்டினாலும் குடும்பத்தை அழகாக நடத்துவது என்பது பெண்களால் மட்டுமே முடிந்த காரியமாகும்.
வீட்டின் பராமரிப்பாளர்கள், குடும்பத்தை வழிநடத்துவர்கள் என்றால் அது பெண்கள்தான். ஆண்கள் பொருள் ஈட்டினாலும் குடும்பத்தை அழகாக நடத்துவது என்பது பெண்களால் மட்டுமே முடிந்த காரியமாகும். அதனால்தான் பெண்களை வீட்டின் மகாலக்ஷ்மி என்று கூறுகிறார்கள்.

அதேபோல " ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " என்றும் கூறுவார்கள். ஏனெனில் பெண்கள் செய்யும் சில தவறுகள் குடும்பத்தையே நிலைகுலைய செய்யும். வாஸ்து சாஸ்திரத்தின் படி பெண்கள் அஜாக்கிரதையாக செய்யும் சில செயல்கள் அவர்கள் குடும்பத்தில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும். இந்த பதிவில் பெண்கள் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வீட்டை சுத்தப்படுத்துவது
ஒரு பெண் தானாக வீட்டை சுத்தப்படுத்த முயன்றால் சாஸ்திரங்களின் படி அதனை சூரிய உதயத்திற்கு முன் செய்துவிட வேண்டும். சூரிய உதயத்திற்கு பிறகு வீட்டை சுத்தம் செய்வது வறுமைக்கு வழிவகுக்கும்.

குளியல்
வீட்டை செய்வதாக இருந்தால் வீட்டை சுத்தம் செய்து முடித்தவுடனேயே குளித்து விட வேண்டும். தாமதமாக குளிப்பது வீட்டில் வறுமையையும், துன்பத்தையும் ஏற்படுத்தும்.

சமையல்
குடும்பத்துக்காக சமைப்பது என்பது கடவுளுக்காக சமைப்பது போன்றதாகும். எனவே சமைக்க தொடங்குவதற்கு முன் பெண் கண்டிப்பாக குளித்து முடித்திருக்க வேண்டும். குளிப்பதற்கு முன் சமயலறைக்குள் நுழையக்கூடாது.

தலை சீவுவது
பெண்கள் ஒருபோதும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தலையை சீவக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது மிகவும் துரதிர்ஷ்டமான செயலாகும். இவ்வாறு செய்வது உங்கள் குடும்பத்தின் மீது லட்சுமி தேவிக்கு கோபத்தை உண்டாக்கும்.

கோபப்படுவது
காரணமே இல்லாமல் எப்போதும் கோபமாகவும், வெறுப்பாகவும் பெண்கள் இருக்கும் பட்சத்தில் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. கோபப்படுவது நியாமானதுதான் ஆனால் தகுந்த காரணங்களோடு கோபப்படவேண்டும். உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நீர்நிலைகள்
நீர் அதிகம் இருக்கும் இடங்களான நீச்சல் குளம் மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றை வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்காதீர்கள். இல்லையெனில் இது உங்கள் வீட்டில் வறுமையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பணப்பெட்டி
உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தை எப்பொழுதும் வடக்கு திசையில் இருக்கும்படி வையுங்கள். அதேபோல பணம் வைக்கும் இடத்திற்குள் குபேரர் படத்தை வைப்பது உங்கள் வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்தும்.

வெளிச்சம்
உங்கள் பணப்பெட்டி அதிக பிரகாசமான இடத்திற்கு கீழே இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் உங்களுக்கே தெரியாமல் வெளியே செல்ல வழிவகுக்கும். இவ்வாறு இருப்பதால் உங்களுக்கு அதிக வீண்செலவுகள் ஏற்படும்.

கண்ணாடியை வைக்கவும்
அதிக செல்வத்தை ஈர்க்கும் மற்றொரு எளிய முறை கண்ணாடியை வைப்பதாகும். உங்கள் பணப்பெட்டிக்கு நேரெதிரே ஒரு கண்ணாடியை வையுங்கள். இது பணப்பெட்டியை எதிரொளிக்கும் போது அது உங்கள் செல்வத்தையும் இருமடங்காக அதிகரிக்க செய்யும்.

நெரிசலான இடம்
உங்கள் வீடு முழுவதையுமே எப்பொழுதும் நெரிசல் இல்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக உங்கள் வீட்டின் வடகிழக்கு மூளையை நெரிசல் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோல இந்த திசையில் மாடிப்படிகள் கட்டக்கூடாது.

வளைந்த சுவர்கள்
உங்கள் வீட்டின் எல்லை சுவர்கள் என்று வரும்போது அது நேராக இருக்க வேண்டும், உங்கள் கற்பனை திறனை இதில் காட்டாதீர்கள். வளைந்த மற்றும் முழுமைபெறாத சுவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் அதிர்ஷ்டத்தை கூட திருப்பி அனுப்பிவிடும்.

கீழே செல்லக்கூடாது
உங்கள் வீடு எப்பொழுதும் சாலை மற்றும் பக்கத்துக்கு வீடுகளின் அளவிற்கோ அல்லது அவற்றிற்கு மேலேயோதான் இருக்க வேண்டும். ஒருபோதும் அவற்றுக்கு கீழே இருக்க கூடாது என்பது உருது செய்து கொள்ளுங்கள். சாலைக்கு கீழ் இருக்கும் நிலையில் ஒருபோதும் இல்லத்தை கட்டாதீர்கள்.

வீட்டின் மையம்
உங்கள் வீட்டின் மையம் எப்பொழுதும் நெரிசல் இல்லாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். வீட்டின் மையத்தில் எதுவும் புதிதாக கட்டாதீர்கள். வேண்டமென்றால் உங்கள் பூஜையறையை வீட்டின் மையத்தில் கட்டிக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications