இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை மரணம் நெருங்கிவிட்டதாக சிவபுராணமும், கருடபுராணமும் கூறுகிறது...

நமது வேதங்களும், சாஸ்திரங்களும் நமது செயல்களுக்கு ஏற்ப நமது மரணம் எப்படி நிகழும் என்பது பற்றி சில தகவல்களை கூறியுள்ளது.

வாழ்க்கையில் மறுக்க முடியாத ஒரு உண்மை என்னவெனில் அது மரணம்தான். பூமியில் பிறந்த அனைவருமே ஒருநாள் மரணிக்கத்தான் போகிறார்கள். ஆனால் அது எப்போது, எப்படி என்பதை நம்மால் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.

மரணம் எப்போது அழைக்கிறதோ அப்போது நாம் இந்த பூமியை விட்டு சென்றுதான் ஆக வேண்டும். நமது மரணம் எப்படி இருக்கும் என்பதை நாம் செய்த பாவபுண்ணியங்களே நிர்ணயிக்கும்.

How Will You Die According to Shiva and Garuda Purana?

ஒருவன் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் பாவம் புரிந்தவனாக இருந்தால் அவனின் மரணம் அகோரமாகத்தான் இருக்கும். நமது வேதங்களும், சாஸ்திரங்களும் நமது செயல்களுக்கு ஏற்ப நமது மரணம் எப்படி நிகழும் என்பது பற்றி சில தகவல்களை கூறியுள்ளது. கருட புராணத்தில் கிருஷ்ணர் எந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இறப்பான் என்பது பற்றி கூறியுள்ளார். இந்த பதிவில் சிவபுராணத்தில், கருட புராணத்திலும் உங்களின் மரணம் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிதான மரணம்

எளிதான மரணம்

கருட புராணத்தின் படி மரணமானது அனைவருக்கும் சோகமானது, ஆனால் இறப்பவருக்கு கிடையாது. நீங்கள் பிறரை கஷ்டப்படுத்த பொய் கூறாமல் தர்மத்தை கடைபிடித்து, கடவுள் நம்பிக்கையுடன் நல்லவராக வாழ்ந்திருந்தால் உங்களின் மரணம் துயரங்களும், வலிகளும் நிறைந்ததாக இருக்காது. மற்றவர்களை மதிக்காது, பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் வாழ்பவர்களின் மரணம் மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும்.

குற்றங்கள்

குற்றங்கள்

தர்மத்திற்கு மாறான குற்ற செயல்களான கொலை, கற்பழிப்பு, பிறரின் சொத்துக்களை சூறையாடுவது, காயப்படுத்தவுது போன்றவர்களின் மரணம் கொடியதாக இருக்கும். இவர்களின் உயிரை இழுத்து செல்ல எமதர்மன் வரும்போது அவரின் மனநிலை மிகவும் மோசமாகவும், கோபமாகவும் இருக்கும்.

மரணம்

மரணம்

வலி நிறைந்த மரணத்தை அனுபவிப்பவர்கள் சாவதற்கு முன் சில கஷ்டங்களை அனுபவிப்பார்கள். குழறும் பேச்சுக்கள், மூளை செயலிழப்பு, வாய் வறண்டு போவது, அதீத தாகம், இதய துடிப்பு அதிகமாகுதல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் மரணத்தை அடைவார்கள்.

சிவபுராணம்

சிவபுராணம்

கருட புராணத்தை போலவே சிவபுராணத்திலும் மரணத்தை பற்றிய பல தகவல்களும், மரணம் வரபோவதற்கான அறிகுறிகளை பற்றியும் பல தகவல்கள் உள்ளது. சிவபுராணத்தின் படி ஒருவரின் உடலில் வெளிர் நிறத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றினால் அவர் அடுத்த 6 மாதத்திற்குள் இறந்துவிடுவார். மரணத்திற்கான மேலும் சில அறிகுறிகள் சிவபுராணத்தில் உள்ளது.

உணர்விழப்பு

உணர்விழப்பு

சிவபுராணத்தின் படி ஒருவர் வாசனை மற்றும் தொடு உணர்வை இழந்தால் அவர் விரைவில் இறக்கப்போகிறார் என்று அர்த்தம். அதேபோல சூரிய வெப்பத்தை உணர முடியாமல் போனாலும் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்களாம்.

உடல் அறிகுறிகள்

உடல் அறிகுறிகள்

ஒருவரின் பார்வை திறன் பாதிப்பும் அவரின் மரணத்தின் அறிகுறிதான். வண்ணங்கள் தெரியாமல் பார்க்கும் அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தெரிந்தால் அவர்கள் விரைவில் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம். அதேபோல இடது கையில் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.

நிழல்கள்

நிழல்கள்

ஒருவர் கண்ணாடி, எண்ணெய் மற்றும் நீர் போன்றவற்றில் தனது உருவத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர்கள் வெகுவிரைவில் இறந்து விடுவார்கள். மரணம் அவர்களை நெருங்கும் போது அவர்களால் முற்றிலுமாக தங்கள் நிழலை எங்கும் காண முடியாது. அதுமட்டுமின்றி மரணம் நெருங்குகிறவர்கள் கண்ணனுக்கு வானம் நீல நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

நீல பூச்சிகள்

நீல பூச்சிகள்

சிவபுராணத்தின் படி ஒருவர் திடீரென நீலப்பூச்சிகள் சூழ்ந்து கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என அர்த்தமாகும். அவர்கள் ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைவான காலமே வாழ்வார்கள். மரணத்திற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நல்ல செயல்கள்

நல்ல செயல்கள்

நல்ல கர்மாவை அடைவது என்பது ஒரே நாளில் அடையக்கூடிய காரியமல்ல. அதனை வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒரு செயலாகும். நீங்கள் மரணம் அடைய போகிறீர்கள் என்று மரணம் அடைய போகிறீர்கள் என்று தெரிந்து விட்டால் முடிந்தளவு நல்ல காரியங்களை செய்ய தொடங்குங்கள். இது உங்களுடைய பாவங்களுக்கு ஓரளவு தீர்வாக அமையும்.

அன்புக்குரியவர்கள்

அன்புக்குரியவர்கள்

இறக்கும் முன்பு, ஒருவர் தன் அன்புக்குரியவர்களை அழைத்து அவர்களிடம் மனம் விட்டு பேசவேண்டும். நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று எடுத்து கூறுங்கள். தன் மரணத்தின் போது யாரும் துயரப்படக்கூடாது என்று கூற வேண்டும். இது அவர்களை கடவுளின் இடத்திற்கு அழைத்து செல்லும்.

கடவுளை வழிபடுதல்

கடவுளை வழிபடுதல்

மரணம் நெருங்குவதை உணர்ந்து விட்டால் ஒருவர் அதிகம் பேசுவதை குறைத்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக கடவுளை வழிபடுவதை அதிகரிக்க வேண்டும். இது வழியில்லை மரணத்தையும், மரணத்திற்கு பிறகு நல்ல வாழ்க்கையையும் வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion