Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா?
சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார்.
அகத்திய முனிவர் எழுதிய ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இராமாயணத்தில் இராமர் இறுதி போரின் போது இராவணனுக்கு எதிராக போராடிய போது இராமரின் ஆற்றல் குறைந்த போது இதனை இயற்றியதாக கூறப்படுகிறது.

இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் குறிப்பிட்ட கடவுள்கள் மட்டுமே அனைவராலும் வணங்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் பல கடவுள்களின் மகிமையும், ஆற்றலும் நமக்கு தெரியாமல் இருப்பதுதான். அப்படி நாம் அதிகம் வழிபடாத ஆனால் அதிக ஆற்றலுடன் அருள்பாலிக்கும் கடவுள்தான் சூரிய பகவான். இந்த பதிவில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என்று பார்க்கலாம்.

இராமருக்கு அருள்
இராமர் விஷ்ணுவின் அவதாராமாகவே இருந்த போதிலும் மனித உருவத்தில் இருந்தபோது இராவணனுக்கு எதிரான போரில் அவர் சோர்வடைவதை பார்த்த அகத்தியர் சூர்ய பகவானின் அற்புத சக்திகளை நியாபகப்படுத்தி அவரை வழிபட அறிவுறுத்தினார். சூரியபகவானுக்கு ஆதித்யர் என்ற பெயரும் உள்ளது.

பிரபஞ்சம்
இராமருக்கு முன்பு அகத்தியர் முழு பிரபஞ்சம், உயிரினங்கள், மலைகள் மற்றும் அனைத்து பொருட்களையும் வரைந்து காண்பித்தார். பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரினத்தின் உயிர்வாழ்விற்கும் சூரியனின் ஆற்றல் இன்றியமையாதது என்று அவர் ராமரிடம் கூறினார்.

இருளை நீக்கும்
இந்த ஆதித்ய ஸ்தோத்திரத்தில் சூரிய பகவான் பல வடிவங்களில் உருவகப்படுத்தப்படுகிறார். தீமைகளை அழிப்பவர், அனைத்து தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வாழ்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குபவர் என கூறப்படுகிறார்.

அறியாமை
இந்த ஸ்தோத்திரத்தின் படி நமக்குள் இருக்கும் இருள்தான் நம்மை வஞ்சகத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக்குகிறது. அந்த இருளை போக்கிவிட்டால் நாம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த இருளை போக்க சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.

ஒற்றை வடிவம்
அகத்தியர் இராமரிடம் சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார். வெற்றிக்காக எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்த இராமருக்கு அகத்தியர் சூரியனை வழிபட வேண்டும் என்று கூறினார். சூரியனை வழிபடுவது நமது வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கும் என்று அகத்தியர் கூறுகிறார்.

தெரிந்த கடவுள்
சூரிய பகவான் அனைவரின் கண்களுக்கும் தெரிந்த கடவுளாக இருக்கிறார். அனைத்து பரிமாணங்களின் ஒருங்கிணைந்த கடவுளாக இருப்பதால் சூரிய பகவானை வழிபடுவது அனைத்து கடவுள்களையும் வணங்குவதற்கு சமமாகும்.

சூரியனிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
இன்றைய உலகில் அனைவரும் நேரமின்றி விரைந்து கொண்டிருக்கிறோம். அமைதியாக அமர்ந்து நம்மை பற்றி சிந்தித்து மூச்சு விடுவதற்கு கூட யாருக்கும் நேரமில்லை. நமக்கான முக்கியத்துவத்தை நாமே இழந்து கொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் பன்முகத்தன்மை கொண்ட சூரியனிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக ஒருங்கிணைப்பு மற்றும் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது எப்படி என்று சூரியனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஒழுங்கமைப்பு
இந்த ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் கூறுவது உங்களின் உள் அமைப்பை ஒழுங்கமைப்பதோடு, உங்களுள் அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது.

இராமரின் வெற்றி
அகத்தியர் கூறிய இந்த ஸ்தோத்திரத்தை கேட்ட பிறகு இராமர் புது ஆற்றலால் தூண்டப்பட்டு இராவணனுடன் போர் புரிந்தார். மேலும் சூரிய பகவான் தனது அருள் மூலம் இராமருக்கு வெற்றி கிடைக்குமென ஆசீர்வதித்தார்.

குணப்படுத்தும் பண்புகள்
மனிதர்களை பொறுத்தவரை சூரியனின் ஒளிக்கதிர்கள் பல நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக கண்கள் மற்றும் சருமத்திற்க்கு இது பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்து மதத்தில் சூரியபகவான் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார்.



Click it and Unblock the Notifications