For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு அமிலம் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 48 சதவீதம் குறைக்கும் தெரியுமா?

நம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடிய ஒரு அமிலம் நமக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 48 சதவீதம் குறைக்கக்கூடும். அந்த அமிலம்தான் ஒலீயிக் அமிலம்.

|

மாரடைப்பு என்பது தற்போது வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாக மாறிவிட்டது. அதற்கு காரணம் நம் இளைஞர்களிடையே பரவிவரும் பல தவறான பழக்கவழக்கங்களும், மோசமான உணவுப்பழக்கமும் தான். இந்த சூழ்நிலையில் நம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடிய ஒரு அமிலம் நமக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 48 சதவீதம் குறைக்கக்கூடும். அந்த அமிலம்தான் ஒலீயிக் அமிலம்.

Health benefits of oleic acid

இந்த அமிலத்தை பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நமக்கு எதெல்லாம் ஆரோக்கியமோ அதை பற்றி நம்மை தெரிந்துகொள்ள விடாமல் இருப்பதுதான் தற்போதைய ஊடகம் மற்றும் சமூத்தின் வேலையாகும். இந்த பதிவில் ஒலீயிக் அமிலம் உங்களுக்கு வழங்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒலீயிக் அமிலம்

ஒலீயிக் அமிலம்

ஒலீயிக் அமிலம் என்பது ஒற்றை ஒமேகா 9 கொழுப்பு அமிலமாகும், இது இயற்கையாகவே சில விலங்குகள் மற்றும் தாவரங்களிடம் இருந்து கிடைக்கிறது. ஒலீயிக் என்னும் பெயர் பொதுவாக ஆலிவ் ஆயிலில் இருந்து பெறப்பட்டது என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆலிவ் ஆயிலில் இந்த அமிலம் அதிகளவு உள்ளது. இது ஆரோக்கியம் மட்டுமின்றி உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக்கூடியது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

ஒலீயிக் அமிலத்தின் முக்கியமான பயன்களில் ஒன்று இது இரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் உங்களின் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடும். மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம் சர்க்கரை நோய், அதீத மனஅழுத்தம் மற்றும் ஹைபர்லிபிடிமியா. ஒலீயிக் அமிலம் இந்த மூன்று பிரச்சினைகளையுமே கட்டுப்பாட்டில் வைக்கக்கூடும். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 48 சதவீதம் குறைகிறது.

கொழுப்பை குறைக்கும்

கொழுப்பை குறைக்கும்

உங்கள் உணவில் கொழுப்பின் அளவை குறைக்க விரும்பினால் ஒலீயிக் அமிலம் அதிகம் உள்ள தானியங்கள் மற்றும் எண்ணையை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துகொள்ளளவும். மற்ற அமிலங்களுடன் ஒப்பிடும்போது ஒலீயிக் அமிலத்தில் கொழுப்புகளை குறைக்கும் பண்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் இது HDL கொழுப்புகள் என்னும் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதுடன் ட்ரிகிளிசரைடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.

டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது

டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது

ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது உங்கள் உணவில் அதிக ஒலீயிக் அமிலம் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரமாகும். சமீபத்திய ஆய்வுகளின் படி நிறைவுற்ற பால்மிடிக் அமிலம் போல் இல்லமால், ஒலீயிக் அமிலமானது உங்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் டைப் 2 சர்க்கரை நோய் வராமல் உங்களை பாதுகாக்கிறது.

MOST READ: பெண்களே! இந்த குணம் உள்ள ஆண்களை ஒருபோதும் நம்பிவிடாதீரகள் என்று நம் வேதங்கள் கூறுகிறது...!

மூளை செயல்திறன்

மூளை செயல்திறன்

ஆய்வுகளின் அப்படி ஒற்றை நிறைவுற்ற அமிலத்திற்கும், மூளையின் அறிவாற்றலுக்கும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒலீயிக் அமிலம் அதிகம் எடுத்துக்கொள்வது உங்கள் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன் அல்சைமர் நோய் உங்களை தாக்காமல் பாதுகாக்கவும் உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

பெரும்பாலான சருமத்தை பாதுகாக்கும் பொருட்களில் ஆலிவ் எண்ணெய் சேர்க்க காரணம் அதிலுள்ள ஒலீயிக் அமிலம்தான். ஏனெனில் இது அலர்ஜிகளை கட்டுப்படுத்தவும், அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இது காயங்களை குணப்படுத்தும் பண்பையும் கொண்டுள்ளது. ஒலீயிக் அமிலம் அதிகமுள்ள எண்ணெய்கள் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரம் பாதுகாக்கும். உலர்ந்த சருமம் உள்ள பலருக்கும் இது மிகவும் அவசியமானதாகும். மேலும் இது முடிவளர்ச்சியையும் தூண்டும்.

புற்றுநோய் பாதுகாப்பு

புற்றுநோய் பாதுகாப்பு

ஒலீயிக் அமிலம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை தடுக்கிறது, இதன்மூலம் இது பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகிறது. குறிப்பாக புற்றுநோய்க்கு. புற்றுநோய்களின் வளர்ச்சியில் ஈடுபடுகின்ற பல்வேறு உள்முகப்புணர்வு வழிவகைகளை தடுப்பதில் இந்த அமிலம் முக்கியப்பங்கை வகிக்கிறது. ஸ்பெயின் நடத்தப்பட்ட ஆய்வில் ஒலீயிக் அமிலம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் உணவில் ஒலீயிக் அமிலத்தை சேர்த்துக்கொள்வது நீங்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ வழிவகுக்கும்.

ஒலீயிக் அமிலம் உள்ள உணவுகள்

ஒலீயிக் அமிலம் உள்ள உணவுகள்

நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளால் ஒலீயிக் அமிலம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்விரு அளவில் இந்த் அமிலம் உள்ளது. ஆலிவ் ஆயிலில் 80 சதவீதமும், பாதாம் எண்ணெயில் 80 சதவீதமும், அவகேடா எண்ணெயில் 65 சதவீதமும் உள்ளது. இது தவிர பாதாம், சீஸ், முந்திரி, முட்டை, எள் எண்ணெய், பால், சூரியகாந்தி எண்ணெய், சிக்கன் போன்ற உணவுகளில் குறிப்பிடத்தகுந்த அளவு ஒலீயிக் அமிலம் உள்ளது.

MOST READ: இந்த செடிக்கு பேரே இன்சுலின் செடியாம்... இது தெரியாம நாம சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

Health benefits of oleic acid

Oleic acid is a monosaturated omega 9 fatty acid, which occurs naturally in many animal and vegetable sources. This fatty acid can actually reduce your heart attack risk by 48 percent.
Story first published: Wednesday, January 9, 2019, 17:56 [IST]
Desktop Bottom Promotion