இந்த 4 பொருட்களும் உங்களை எமதர்மனின் சாபத்தில் இருந்து காப்பாற்றும் தெரியுமா?

வலி நிறைந்த மரணம் என்பது யாருமே விரும்பாத ஒன்றாகும், ஆனால் நம்மால் அதனை முடிவு செய்ய இயலாது என்பதே உண்மை.

வாழ்க்கையின் மிகப்பெரிய மறுக்க முடியாத உண்மையென்றால் அது மரணம்தான். மரணத்தை தடுப்பது என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்று. நமது புராணங்களில் வாழ்ந்த சக்தி வாய்ந்த அசுரர்களால் கூட மரணத்தை ஏமாற்ற இயலவில்லை. பூமியில் பிறந்த அனைவருமே மரணம் அடைந்துதான் ஆகவேண்டும், ஆனால் அது எப்போது, எப்படி என்பதுதான் ஆகச்சிறந்த வாழ்க்கையின் மர்மமாகும்.

Having These Things Around You Will Give a Peaceful Death

நமது மரணத்தை தீர்மானிப்பது நம்முடைய பூர்வ ஜென்ம பாவபுண்ணியங்கள்தான். அதனை பொறுத்துதான் நமது மரணம் வலி மிகுந்ததாக இருக்குமா அல்லது வலியின்றி இருக்குமா, மரணத்திற்கு பிறகான வாழ்க்கை போன்றவையெல்லாம் தீர்மானிக்கப்படுகிறது.வலி நிறைந்த மரணம் என்பது யாருமே விரும்பாத ஒன்றாகும், ஆனால் நம்மால் அதனை முடிவு செய்ய இயலாது என்பதே உண்மை. நம் புராணங்களில் மரணத்தை வலியின்றி ஏற்படுத்திக்கொள்ள சில வழிகள் கூறப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்களை அருகில் வைத்திருப்பது உங்களை எமதர்மரின் கோபத்தில் இருந்தும், சாபத்தில் இருந்தும் காப்பாற்றும். அதன்படி வலியின்றி மரணம் பெற உதவும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்மா

ஆன்மா

மரணம் என்பது உடலுக்கு மட்டும்தான் என்று நாம் நன்கு அறிவோம், ஏனெனில் இறந்த பின்னும் ஆன்மாக்கள் சில குறிப்பிட்ட காலம் வரை பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். உடலை விட்டு பிரிந்த பின் ஆன்மாக்கள் அதீத பதட்டத்தில் இருக்கும், என்ன செய்வது என்பது ஆன்மாக்களுக்கு தெரியாததால் பூமியை விட்டு பிரிய விருப்பமின்றி இங்கேயே இருக்கும்.

நுழைவாயில்

நுழைவாயில்

புராண குறிப்புகளின் படி அனைத்து ஆன்மாக்களும் பூமியிலிருந்து சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ நுழைவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. அனைத்து ஆன்மாக்களும் அவர்களின் வாழ்வில் நடந்த இனிமையான சம்பவங்களின் நினைவுகளோடு செல்வார்கள். இறந்த பின் ஆன்மாக்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள இயலும் என்பது பலரும் அறியாத ஒன்று.

ஆன்மாவின் வழிகாட்டிகள்

ஆன்மாவின் வழிகாட்டிகள்

நரகத்திற்கு செல்லும் ஆன்மாக்கள் எமதர்மனின் தூதர்களால் வழிநடத்தப்பட்டு இழுத்து செல்லப்படுவார்கள். சொர்க்கத்திற்கு செல்லும் ஆன்மாக்கள் சொர்க்கத்தை அடைந்த பின் அவர்களின் கடந்த வாழ்க்கையிலோ அல்லது அதற்கு முன் ஜென்மத்திலோ அவர்களுக்கு நெருக்கமாகவும், அவர்கள் மேல் அன்பாக இருந்தவர்கள் மூலமாகவும் வழிநடத்தப்படுவார்கள்.

பேய்கள்

பேய்கள்

ஆன்மாக்கள் சுயமாக முடிவெடுக்க கூடியவை, பேய்கள் என்பவை தங்களின் ஆசைகள் நிறைவேறாததால் தானாக விரும்பி பூமியில் இருக்க விரும்புபவர்கள். இப்படி இருக்கும் ஆன்மாக்கள் வெளிப்புற சக்திகள் மூலம் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படவேண்டும்.

 தீங்கிழைக்கும் ஆன்மா

தீங்கிழைக்கும் ஆன்மா

பொதுவாக ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கிழைக்க விரும்பமாட்டார்கள், ஆனால் சில சமயம் அவர்களின் மோசமான கர்மா சுழற்சியின் விளைவாக அவை மற்றவர்களுக்கு தீமையை ஏற்படுத்த முனையக்கூடும். அப்படிப்பட்ட ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும், இந்த ஆன்மாக்களை கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும்.

திவ்ய நிலை

திவ்ய நிலை

ஆன்மாக்கள் தன்னுடைய அனைத்து கர்ம சுழற்சியையும் முடித்த பிறகு, அவரை மறுஉலகத்தில் திவ்ய நிலையை அடையும். அந்த திவ்ய நிலையை அடையும் ஆன்மாக்கள் உலகின் பிறப்பு மற்றும் இறப்பு நிலைகளில் இருந்து விடுவிக்கப்படும். அதன்பின் ஆன்மாக்கள் இந்த அண்டத்தில் தனிமையில் பயணம் செய்யும், இருள் சூழ்ந்த இடத்தில் கூட இந்த ஆன்மாக்கள் பெரிய வெளிச்சத்தை கூட காணமுடியும்.

மறுபிறப்பு

மறுபிறப்பு

கடந்த யுகத்தில் பல ஆன்மாக்கள் மீண்டும் மறுபிறப்பு எடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. ஆனால் இந்த யுகத்தில் உள்ள குறிப்புகள் படி அனைத்து ஆன்மாக்களுக்கும் மறுபிறப்பு எடுக்கக்கூடிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. பலருக்கும் தெரியாத ஒன்று குழந்தைகள் பிறக்கும் போதே அவர்கள் ஆன்மாவின் மறுபிறப்பாக இருக்கமாட்டார்கள், சில சமயம் குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களுக்கு பிறகு கூட ஆன்மாக்கள் குழந்தைகளின் உடலில் நுழையக்கூடும். எந்தெந்த பொருட்களை அருகில் வைத்திருந்தால் வலியின்றி மரணத்தையும், சொர்க்கத்தையும் அடையலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

துளசி

துளசி

இறந்து கொண்டிப்பவர்களின் நெற்றியில் சில துளசி இலைகளை வைப்பது அவர்களுக்கு அமைதியான மரணத்தை வழங்கும். ஏனெனில் விஷ்ணுபகவான் தன் நெற்றியில் துளசி இலைகளை வைத்திருப்பார், இவ்வாறு வைப்பது அவர்களின் மரணத்தை அமைதியாக்குவதுடன் அவர்களின் மறுவுலக வாழ்வை செம்மையாக்கும்.

கங்கை நீர்

கங்கை நீர்

இறந்து கொண்டிருப்பவர்களின் வாயில் சில துளிகள் கங்கை நீரை விடுவது அவர்களின் ஆன்மாவை புனிதப்படுத்தும். புராணங்களின் படி கங்கை நீரை குடித்துக்கொண்டு இருக்கும்போதே இறப்பவர்கள் எப்போதும் நரகத்திற்கு செல்லமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை

பகவத் கீதை

ஒருவர் இறக்கும் முன் பகவத் கீதையை அவர்களுக்கு படித்து காட்டுவது மரணம் அடைய போகிறவருடைய ஆன்மாவை பூமியின் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுவிக்கும், இறக்கும் முன் பகவத் கீதை கேட்பவர்களுக்கு நரகம் இல்லை என்று கூறப்படுகிறது.

ராமாயணம்

ராமாயணம்

ராமாயணத்தை கேட்கும் போது இறப்பவர்கள் தங்களின் அடுத்த ஜென்மத்தில் சிறந்த குடும்பத்தில் பிறப்பார்கள். மரணத்தை அடையும் போது ராமாயணம் கேட்பது அவர்கள் செய்த அனைத்து தீயசெயல்களில் இருந்தும் சுத்தப்படுத்தி அவர்களின் ஆன்மாவை புனிதமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion