For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரணத்திற்கு பிறகு நீங்கள் செல்லப்போகும் சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா?

சொர்க்கம் என்பது ஒரு நல்ல இடம் என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். அனைத்து மத நம்பிக்கைகளின் படியும் நாம் இறந்த பிறகு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வோம் என்று கூறப்படுகிறது.

|

சொர்க்கம் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்துக்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் இருக்கும். ஆனால் சொர்க்கம் என்ற ஒன்று இருப்பதற்கான ஆதாரம் இல்லை நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. சொர்க்கம் பற்றிய பார்வையானது ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், ஆனால் அவற்றின் அடிப்படை விளக்கமானது ஒன்றுதான். அனைத்து மதங்களின் பார்வையிலும் சொர்க்கம் என்பது மரணத்திற்கு பிறகு எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய இடமாகும்.

Facts about heaven that you should know before you die

சொர்க்கம் என்பது ஒரு நல்ல இடம் என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். அனைத்து மத நம்பிக்கைகளின் படியும் நாம் இறந்த பிறகு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வோம் என்று கூறப்படுகிறது. வாழும்போது நீங்கள் பாவங்கள் செய்தால் நரகத்திற்கு செல்வோம் அதேபோல நன்மைகள் மட்டும் செய்திருந்தால் நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். இந்த பதிவில் சொர்க்கம் பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொர்க்கத்தில் எந்த துன்பமும் இருக்காது

சொர்க்கத்தில் எந்த துன்பமும் இருக்காது

பைபிளை பொறுத்த வரையில் சொர்க்கத்தில் எந்த துன்பமும் இருக்காது, நோய் இருக்காது, மரணமோ அல்லது தீயசக்திகளோ இருக்காது. எந்த பாவமும் செய்யாதவர்கள், மற்றவர்களை காயப்படுத்தாதவர்கள், பொய் கூறாதவர்கள் போன்றோர் இந்த அழகிய இடங்களுக்கு செல்வார்கள்.

கடவுள் வாழும் இடம்

கடவுள் வாழும் இடம்

கடவுள் சொர்க்கத்தில்தான் வாழ்கிறார் என்று அனைத்து மதங்களும் கூறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த கலாச்சாரங்களில் கூட இப்படித்தான் நம்பப்பட்டு வந்தது. ஆனால் சொர்கத்திற்கான விளக்கம் ஒவ்வொரு மதத்திலும் வித்தியாசப்படும்.

கிறிஸ்துவர்களின் சொர்க்கம்

கிறிஸ்துவர்களின் சொர்க்கம்

பைபிளின் படி கடவுள் சொர்க்கத்தில்தான் தனது மகன் இயேசு கூட வாழ்கிறார் என்று கூறப்படுகிறது. செயிண்ட் பீட்டர் சொர்க்கத்தின் வாயிலை பாதுகாப்பதாகவும், அசுத்த ஆன்மாக்களை உள்ளே விடாமல் விரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

MOST READ: இந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை உண்டாக்கும் தெரியுமா?

தேவதைகள் வாழுமிடம்

தேவதைகள் வாழுமிடம்

சொர்க்கத்தில் தேவதைகள் வாழ்வார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். பைபிளும் இதைத்தான் சொல்கிறது. தேவதைகள் தங்கள் கடவுளுக்கு இங்கு சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள். சொர்கத்திலிருந்து கடவுளால் வெளியேற்றப்பட்ட தேவதையே சாத்தானாக மாறியது என்று கூறப்படுகிறது.

இந்து சொர்க்கம்

இந்து சொர்க்கம்

இந்து மதத்தின் படி சொர்க்கம் என்பது பழத்தோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த இடமாக இருக்கும். இங்கு அனைத்து கடவுளின் மேற்பார்வையில் இந்திரன் சொர்க்கத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.

இஸ்லாமின் ஜன்னத்

இஸ்லாமின் ஜன்னத்

இஸ்லாமிய மதத்தில் கூறியுள்ள ஜன்னத் கிட்டதட்ட சொர்க்கத்துடன் ஒத்துப்போக கூடிய ஒன்றாகும். குரானின் படி சொர்க்கம் எட்டு கதவுகளை கொண்டுள்ளது, ஒவ்வொருவருக்கும் ஒவொரு கதவு என இஸ்லாம் கூறுகிறது. சரியான நேரத்தில் தொழுகை செய்பவர்கள், தானம் செய்பவர்கள், விரதம் இருப்பவர்கள், புனிதத்தலங்களுக்கு செல்பவர்கள், மற்றவைகளை மதிப்பவர்கள் போன்றோர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அவர்களுக்குண்டான கதவு வழியாக சொர்க்கத்திற்கு செல்வார்கள்.

MOST READ: பெண்கள் தங்கத்தை இப்படி அணிந்தால் அவர்கள் வாழ்வில் பல பிரச்சினைகளை உண்டாகுமாம்...!

மறுவாழ்வு

மறுவாழ்வு

பெரும்பாலான மதங்களின் கருத்துப்படி பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து நம்மால் எப்போதும் விடுதலை அடைய முடியாது. ஒருவர் இறந்த பிறகு அவர்கள் பேரின்பம் இருக்கும் சொர்க்கத்தை அடைய முடியாது, நமது ஆன்மா மீண்டும் மறுவாழ்விற்கு பயணம் செய்யும். உங்களுடைய அடுத்த வாழ்க்கையின் மீது அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த இதனை ஒரு பள்ளிக்கூடமாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களின் இந்த பிறவியில் முடிந்தளவு நல்லதை செய்யுங்கள்.

மகிழ்ச்சியான மறுவாழ்வு

மகிழ்ச்சியான மறுவாழ்வு

மத நம்பிக்கைகளின் படி மறுவாழ்வு என்பது சொர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கும். இது மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். ஜெயின் மத நம்பிக்கைகளின் படி 84 உயிரினங்களாக நாம் பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் நல்ல செயல்கள் நமக்கு மகிழ்ச்சியான மறுவாழ்வை ஏற்படுத்தும்.

நல்லவை மட்டும் நிறைந்திருக்கும் இடம்

நல்லவை மட்டும் நிறைந்திருக்கும் இடம்

சொர்க்கம் என்பது பூமியில் நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக கடவுள் வெகுமதிகளை, பாராட்டுக்களும் கொடுக்கும் இடமாகும். எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி பூமியில் வாழ்பவர்களுக்கு சொர்க்கத்தில் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த பரிசுகள் என்பது உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான மறுவாழ்வாக இருக்கும்.

MOST READ: இந்த ராசிக்காரர் பெண்களை பொய் கூறி ஏமாற்றுவதில் பலே கில்லாடியாம்... எச்சரிக்கையாக இருங்கள்...!

இழந்த விரும்பியவர்கள்

இழந்த விரும்பியவர்கள்

சொர்க்கம் என்பது நாம் இழந்தவர்களை மீண்டும் அடையும் ஒரு இடமென கூறப்படுகிறது. யாருடன் வாழ வேண்டும் என்று நாம் விரும்பினோமோ அல்லது யாரை இழந்தோமோ அவர்களை சொர்க்கத்தில் சந்திக்கவும், அவர்களுடன் வாழவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: god
English summary

Facts About Heaven That You Should Know Before You Die

The concept of what Heaven looks and feels like differs from religion to religion, but the basic premise remains the same.
Desktop Bottom Promotion