Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா? உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..!
நாய் உங்கள் கனவில் வருவது உண்மையில் நல்லதா? நாய்களுடன் தொடர்புடைய அனைத்து கனவுகளும் நல்லது என்று கூற முடியாது.
கனவுகள் நமது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் சாவியாக இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. கனவுகள் நடக்கப்போவதை முன்கூட்டியே நமக்கு உணர்த்துவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இது முழுமையாக உண்மையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு உண்மைதான். ஏனெனில் கனவில் வந்தது நிஜமாய் நடந்ததற்கான சாட்சிகள் பலவற்றை நாமே பார்த்திருப்போம்.

சிலருக்கு சொந்த அனுபவங்கள் கூட இருக்கலாம். கனவுகள் நடக்கப்போவதை அப்படியே கூறாது, மாறாக அதனை ஒரு விடுகதை போலத்தான் காட்டும். நாம்தான் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சரியாக புரிந்து கொண்டால் நமது வாழ்க்கைக்கு நல்லது, நடக்கபோகிற நல்லது, கெட்டதிற்கு நம்மை தயார்ப்படுத்தி கொள்ளலாம்.

மிருக கனவுகள்
பொதுவாக மிருகங்கள் கனவில் வருவது ஆபத்து உங்களை நோக்கி வருவதற்கான அறிகுறி என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல எந்த மிருகம் கனவில் வருகிறதோ அதனை பொறுத்தே அதன் பாதிப்புகள் இருக்கும். சில மிருகங்கள் கனவில் வருவது உங்களுக்கு நல்ல நேரம் தொடங்க போவதன் அறிகுறியாக கூட இருக்கலாம்.

நாய்கள் கனவில் வருவது
இந்த பூமியில் மிகவும் நேர்மையும், விசுவாசமும் உள்ள மிருகம் என்றால் அது நாய்தான். அவர்கள் மீது கொஞ்சம் அன்பு செலுத்தினாலே போதும் அது பலமடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் சிறந்த துணையாக இருக்க அவர்களை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இப்படிப்பட்ட நாய் உங்கள் கனவில் வருவது உண்மையில் நல்லதா? நாய்களுடன் தொடர்புடைய அனைத்து கனவுகளும் நல்லது என்று கூற முடியாது.

நாய் கடிப்பது போல கனவு வந்தால்
உங்களை நாய் கடிப்பது போல கனவு வருகிறதா? அப்படி வந்தால் எச்சரிக்கையாய் இருங்கள், ஏனெனில் இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட போவதின் அடையாளமாக இருக்கும். கனவில் உங்களை நாய் கையில் கடித்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் விரைவில் துரோகம் செய்ய போகிறார்கள் என்று அர்த்தம். உங்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடியான சூழ்நிலையில் உங்களுக்கு விருப்பமானவர்களே உங்களை தவிக்க விட்டுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இது நீங்கள் செய்ததற்கான எதிர்வினையாக இருக்கலாம்.

பிரவுன் நாய் கனவு
ஒரு குறிப்பிட்ட நிற நாய் மட்டும் உங்கள் கனவில் வருவதற்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது. உங்கள் கனவில் ப்ரவுன் நிற நாய் வருவது நல்ல அறிகுறி அல்ல. இவ்வாறு வருவது நீங்கள் மிகவும் மோசமான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் கனவில் ப்ரவுன் நாய் வந்தால் அதற்கு பின் நீங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வையுங்கள்.

வெள்ளை நாய் கனவு
வெள்ளை என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாகும். உங்கள் கனவில் வெள்ளை நாய் வந்தால் நிம்மதியாக இருங்கள், ஏனெனில் இது நல்ல அறிகுறியாகும். இது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க போகிறார்கள் என்பதன் அறிகுறியாகும். அவர்களின் நோக்கங்கள் உண்மையானதாகவும், உங்களுக்கு நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும். இந்த கனவு வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்க போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

கருப்பு நாய் கனவு
பொதுவாக கருப்பு நாய் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படபோவதன் அறிகுறி ஆகும். இது உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் பல சம்பவங்களை பிரதிபலிப்பாகும். இது உங்கள் நெருக்கமானவர்களின் இருந்த பக்கங்களை உணர்த்துவதாக இருக்கும். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மேலும் இது உங்களுக்கு அதீத பதட்டம் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும்.

நாய் உங்கள் துரத்தும் கனவு
உங்களை நாய் துரத்துவது பல கனவு வந்தால் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? நாய் துரத்துவது போன்ற கனவு வருவது உங்களை நோக்கி காதல் வரப்போகிறது என்பதன் அர்த்தம். நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்கள் உங்களை தேடி வரப்போவதன் அர்த்தம்தான் இது. இல்லையெனில் உங்களை யாரோ மனதிற்குள் காதலிப்பதன் அர்த்தம் இது.



Click it and Unblock the Notifications