For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டில் கண்ணாடி இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் எப்போதும் தீராதாம்.

வாஸ்துவிற்காக வீட்டையே முழுமையாக மாற்றியும், வேறு வீடு மாறியும் கூட உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பாதிப்புகள் குறைந்திருக்காது. அதற்கு காரணம் என்னவென்று சிந்தித்து இருக்கிறீர்களா?

|

வாழ்க்கை எப்பொழுதும் இன்பம், துன்பம் கலந்ததாகவே இருக்கும். இந்த இரண்டுமே நாம் செய்த பாவங்கள் மற்றும் புண்ணியங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. சிலசமயம் நீங்கள் தெரியாமல் செய்யும் சிறிய தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு காரணம் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமாக கூட இருக்கலாம்.

Doing these forbidden things to mirror might get you into trouble

வாஸ்துவிற்காக வீட்டையே முழுமையாக மாற்றியும், வேறு வீடு மாறியும் கூட உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பாதிப்புகள் குறைந்திருக்காது. அதற்கு காரணம் என்னவென்று சிந்தித்து இருக்கிறீர்களா? ஏனெனில் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை சக்திகளை இரட்டிப்பாக்கும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எப்படி எளிதாக விரட்டலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாஸ்து வித்யா

வாஸ்து வித்யா

வாஸ்து வித்யா என்பது வாஸ்து சாஸ்திரம் பற்றிய பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பகுதிதான். இதன் கீழ் வரும் முக்கியமான சாஸ்திரங்களில் ஒன்றுதான் கண்ணாடி வாஸ்து ஆகும். இது வீட்டை கட்ட திட்டமிடுவதற்கு முன்னரே செய்ய வேண்டிய ஒன்றாகும்.

வாஸ்து சாஸ்திர விதிகள்

வாஸ்து சாஸ்திர விதிகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மரபுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு விஞ்ஞான கட்டிடக்கலையாகும். வாஸ்து தொடர்பான நூல்கள் வீட்டின் அமைப்பு, இருக்க வேண்டிய இடம், வீட்டில் வைக்க வேண்டிய பொருட்கள் என அனைத்தையும் தீர்மானிப்பதாக இருக்கும். இது ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரீகங்களின் போதே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

கண்ணாடி பொய் கூறாது

கண்ணாடி பொய் கூறாது

ஒருவர் யாரிடம் வேண்டுமென்றாலும் பொய் கூறலாம் ஆனால் ஒருபோதும் கண்ணாடியிடம் பொய் கூறக்கூடாது. ஒருவர் தன்னுடய குறைகளை எவ்வளவு திறமையாக வெளிஉலகத்திடம் இருந்து மறைத்தாலும் அவர்கள் கண்ணாடியை பார்க்கும் போது அது உண்மையை ஒளிவு மறைவின்றி காட்டிவிடும்.

MOST READ: வசியம் செய்வது உண்மையில் சாத்தியமா? வசியம் செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் இதோ...!

எச்சரிக்கை

எச்சரிக்கை

உங்கள் வீட்டில் அமைதி மற்றும் ஆரோக்கியம் இருக்க வேண்டுமெனில் கண்ணாடி சரியான இடத்தில் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகும். கண்ணாடி வாஸ்துவின் படி உங்கள் வீட்டில் கண்ணாடியை எப்படி ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

வடிவம்

வடிவம்

நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியின் வடிவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அடிப்படையில் வீட்டிற்கு எப்போதும் சதுர வடிவ கண்ணாடியை சிறந்ததாகும். கண்ணாடி வாஸ்துவின் படி சதுரத்தை தவிர வட்ட வடிவிலோ அல்லது முக்கொண்ட வடிவிலோ கண்ணாடி இருப்பது உங்களுக்கு ஏற்படும் எதிர்மறை பாதிப்புகளை அதிகரிக்கும்.

படுக்கையை பார்த்தபடி இருக்கக்கூடாது

படுக்கையை பார்த்தபடி இருக்கக்கூடாது

எந்த கண்ணாடியும் படுக்கையை பார்ப்பது போல வைக்கப்படக்கூடாது என்று கண்ணாடி வாஸ்து கூறுகிறது. மீறி இவ்வாறு வைப்பது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். நாம் தூங்கும் போது கண்ணாடியில் பிரதிபலிக்கும் நம் உடலின் பாகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

இருளில் வைக்கக்கூடாது

இருளில் வைக்கக்கூடாது

வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடி வைத்தாலும் அது இருளில் இருக்காதபடி பார்த்து கொள்ளுங்கள். கண்ணாடிக்கு தக்க வைத் கொள்ளும் சக்தி அதிகம் உள்ளபோது அது இருளில் இருந்து வரும் எதிர்மறை சக்திகளை தக்கவைத்து கொள்வதோடு அதனை வீடு முழுவதும் பரவவும் செய்யும். இதனால்தான் உடைந்த கண்ணாடிகள் ஒருபோதும் வீட்டில் வைக்கப்படக்கூடாது என்று கூறப்படுகிறது.

MOST READ: மரணத்திற்கு முன் சொர்க்கத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

கழிவறையுடன் தொடர்புடைய சுவரில் மாட்டக்கூடாது

கழிவறையுடன் தொடர்புடைய சுவரில் மாட்டக்கூடாது

கண்ணாடி எப்பொழுதும் கழிவறையின் கதவிற்கு நேராக மாட்டப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு முறை கழிவறை திறக்கும் பொது வெளிப்படும் எதிர்மறை ஆற்றலானது கண்ணடியால் கிரகிக்கப்படும். ஒருவேளை கழிவறையின் சுவரில் மாட்டப்பட்டால் அது எதிர்மறை ஆற்றலை இழுத்துக்கொள்ளாது, இதனால் எதிர்ர்மை ஆற்றல் வீடும் முழுவதும் பரவும்.

முன்கதவை நோக்கி மாட்டக்கூடாது

முன்கதவை நோக்கி மாட்டக்கூடாது

பெரும்பாலான மக்கள் முன்கதவை நோக்கியபடி கண்ணாடி மாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர், ஆனால் கண்ணாடி வாஸ்துவின் படி இது தவறான செயலாகும். நமது வீட்டிற்குள் நுழையும் நல்ல சக்திகள், தீயசக்திகள் இரண்டுமே முன்கதவு வழியாகத்தான் நுழையும். எனவே முன்கதவிற்கு எதிராக கண்ணாடி மாட்டப்படும் போது அது எதிற்மறை சக்திகளை மட்டுமின்றி நேர்மறை சக்திகளையும் விரட்டும்.

குழந்தைகள் அறையில் இருக்கக்கூடாது

குழந்தைகள் அறையில் இருக்கக்கூடாது

பெற்றோர்கள் ஒருபோதும் அவர்கள் குழந்தைகளின் அறையிலும் அவர்கள் படிக்கும் அறையிலும் கண்ணாடியை மாட்டக்கூடாது. இந்த இடங்களில் கண்ணாடி மாட்டுவது அவர்களுக்கு கவனசிதறலையும் ஏற்படுத்தும் மேலும் எதிர்மறை சக்திகளை அவர்களை நோக்கி ஈர்க்கும்.

எதிரெதிரில் கண்ணாடி வைக்கக்கூடாது

எதிரெதிரில் கண்ணாடி வைக்கக்கூடாது

இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று எதிராக மாட்டும் தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். இது குடும்பங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் அதிக ஆற்றல் இழப்புகளையும் ஏற்படுத்தும்.

MOST READ: சிவராத்திரியில் எந்த பொருள்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் அதிக புண்ணியம் கிடைக்கும்?

படியை நோக்கி வைக்கக்கூடாது

படியை நோக்கி வைக்கக்கூடாது

படிக்கட்டுகள் எப்பொழுதும் வெற்றியை குறிப்பதாகும். எனவே கண்ணாடி ஒருபோதும் படிக்கட்டுகளை நோக்கிய படி வைக்கக்கூடாது. ஏனெனில் இது வீட்டில் உள்ள நேர்மறை சக்திகளை வெளியேற்றிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vastu வாஸ்து home
English summary

Doing These Forbidden Things to Mirror Might Get You into Trouble

According to Mirror Vastu doing these forbidden things might get you into trouble.
Story first published: Monday, March 4, 2019, 17:22 [IST]
Desktop Bottom Promotion