Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்கள் ஜாதகத்தில் இந்த இடம் மட்டும் சரியா அமைஞ்சா உங்களுக்கு ராஜவாழ்க்கை உறுதி...!
நாம் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகள், பிறக்கும் நேரம் போன்றவற்றை பொறுத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜாதகத்தின் மூலம் நமக்கு இருக்கும் கண்டங்கள் மற்றும் யோகங்களை கூட கணக்கிட்டு விடலாம்.
சாஸ்திரங்களின் படி நாம் பிறக்கும் போதே நாம் எப்படி வாழப்போகிறோம், எந்த தொழில் செய்யப்போகிறோம், எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்பதெல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்டவையாகும். ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் நமது ஜாதகம் நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

நாம் பிறக்கும் போதே இருக்கும் கிரக நிலைகள், பிறக்கும் நேரம் போன்றவற்றை பொறுத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜாதகத்தின் மூலம் நமக்கு இருக்கும் கண்டங்கள் மற்றும் யோகங்களை கூட கணக்கிட்டு விடலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் லக்ஷ்மி யோகம் அல்லது தன யோகம். இந்த யோகம்தான் ஒருவரின் வாழ்வில் நிலையான செல்வத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். உங்கள் ஜாதகத்தில் லக்ஷ்மி யோகம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டறியலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

லக்ஷ்மி யோகம்
லக்ஷ்மி யோகம் மற்ற யோகங்களை போல பொதுவானதல்ல, இது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இந்த யோகம் இருக்க வேண்டுமெனில் உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருக்க வேண்டிய கடவுள் பதினொன்றாம் வீட்டில் இருக்க வேண்டும் அல்லது பதினொன்றாம் வீட்டில் இருக்க வேண்டிய கடவுள் இரண்டாம் வீட்டில் இருக்க வேண்டும்.

லக்ஷ்மி தேவி
அதேசமயம் இரண்டாம் வீட்டின் கடவுளும், பதினொன்றாம் வீட்டின் கடவுளும் ஒன்பதாம் வீட்டின் கடவுளின் அம்சத்துடன் இருந்தால் அவர்கள் வாழ்வில் லக்ஷ்மி யோகம் உள்ளது என்று அர்த்தம். இது சில ராசிகளுக்கு மாறுபடலாம்.

வெள்ளி
ஒருவரின் ஜாதகத்தில் வெள்ளி அல்லது சுக்கிரனின் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒருவேளை ஒருவரின் ஜாதகத்தின் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அவர்களை விட சிறந்த அதிர்ஷ்டசாலிகள் யாருமில்லை. வாழும் காலம் வரை ராஜா போல வாழ்வார்கள்.

புத்தர்
புராதான நூல்களின் படி, புத்தரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது அவருக்கு லக்ஷ்மி யோகம் இருப்பது தெரிய வந்தது. இதுபோல லக்ஷ்மி யோகம் வெகுசிலருக்கே அமையும், அவ்வாறு இருந்தால் அவர்கள் அழியாப்புகழ் பெறுவார்கள். ராசிகளை பொறுத்து லக்ஷ்மி யோகம் எப்படி மாறுபடும் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு லக்ஷ்மி யோகம் இருக்க வேண்டுமெனில் அவர்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் சனி செவ்வாய் மற்றும் குருவின் ஆதிக்கம் இருக்க வேண்டும். அதேபோல சூரியன் ஐந்தாவது வீட்டிலும் குரு பதினொன்றாவது வீட்டிலும் இருப்பதும் இவர்களுக்கு பெரிய அதிர்ஷ்டமாகும்.

ரிஷபம்
இவர்களுக்கு சுக்கிரன் மிதுன ராசியிலும், புதன் மீன ராசியிலும் இருந்து குரு இரண்டிற்கும் நடுவில் இருந்தால் திடீர் இராஜயோகம் உண்டாகும். அதேபோல சனியும், குருவும் மிதுன ராசியின் இரண்டாவது வீட்டில் இருந்தால் இவர்கள் பொன்னையும், பொருளையும் குவிப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசியை பொறுத்தவரை குருவும், சனியும் ஒன்பதாவது வீட்டில் தன் இடத்தை மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு லக்ஷ்மி யோகம் உருவாகும். சந்திரனும் இவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அதிகரிப்பதில் பங்கு வகிப்பார்.

கடகம்
ஒருவரின் செல்வ நிலை என்பது சுக்கிரன் அவர்கள் ஜாதகத்தில் இரண்டாவது இடத்திலோ அல்லது பன்னிரெண்டாவது இடத்திலோ இருப்பதை பொறுத்து அமைகிறது. குரு எதிரி கிரகமாக இருந்து கேதுவுடன் தன் இடத்தை மாற்றிக்கொண்டால் இவர்கள் அழியா புகழையும், செல்வத்தையும் அடைவார்கள்.

சிம்மம்
இவர்கள் ஜாதகத்தில் சந்திரனும், சுக்கிரனும் பலமாக இருந்தால் இவர்கள் வியாபாரத்தின் மூலம் அதிக பொருள் ஈட்டுவார்கள். அதேசமயம் சுக்கிரன், செவ்வாயுடன் நான்காம் வீட்டில் பலமாக இருந்தால் இவர்கள் அதிக செல்வதை பெறுவார்கள்.

கன்னி
சுக்கிரனும், கேதுவும் இரண்டாம் வீட்டில் இருந்தால் இவர்கள் திடீரென உச்சத்திற்கு செல்வார்கள். சந்திரன் புண்ணியத்துடன் தொடர்புடைய வீட்டிலும், சுக்கிரன் இரண்டாவது இடத்திலும் இருந்தால் இவர்களுக்கு செல்வம் சேர்ந்துகொண்டு இருக்கும்.

துலாம்
இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், கேதுவம் இரண்டாவது இடத்தில் இருந்தால் இவர்களை நோக்கி செல்வம் வந்து சேரும். அதேசமயம் செவ்வாய், சுக்கிரன், சனி மற்றும் ராகு பன்னிரெண்டாவது இடத்தில் இருந்தால் இவர்கள் செல்வத்தை நோக்கி தானாக செல்வார்கள்.

விருச்சிகம்
இவர்களின் ஜாதகத்தில் புதனும், குருவும் ஐந்தாவது இடத்தில் இருந்து சந்திரன் பதினொன்றாவது வீட்டில் இருந்தால் இவர்கள் மிகப்பெரிய செல்வந்தர் ஆவார்கள். சந்திரன், குரு மற்றும் கேது பத்தாவது வீட்டில் இருந்தால் இவர்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள்.

தனுசு
சந்திரன் எட்டாவது வீட்டிலும் சூரியன், சுக்கிரன் மற்றும் சனி கடக ராசியிலும் இருந்தால் இவர்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகளாக மாறுவார்கள். புதனும், குருவும் உயர்ந்து, சனி மற்றும் சுக்கிரன் இரண்டாவது இடத்தில் இருந்து, செவ்வாயும், ராகுவும் ஆறாம் இடத்திற்கு வந்தால் இவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

மகரம்
செவ்வாயும், சந்திரனும் மூன்று வீடுகளுக்கு மையத்தில் இருந்தால் இவர்கள் செல்வந்தராக ஆவார்கள். இவர்களின் ராசி கடவுள் துலாம் ராசியுடனும், செவ்வாயுடனும் இணைந்திருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மேன்மையை அடைவார்கள்.

கும்பம்
சந்திரனும், சனியும் பத்தாவது இடத்தில் தங்கள் இடங்களை மாற்றிக்கொண்டால் இவர்கள் வாழ்க்கையின் உயரத்திற்கு செல்வார்கள். சனியின் செல்வாக்கு உயர்ந்து செவ்வாய் ஆறாவது இடத்தில் இருந்தால் இவர்கள் நீண்ட புகழை அடைவார்கள்.

மீனம்
இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் இரண்டாவது இடத்திலும், செவ்வாய் ஐந்தாவது இடத்திலும் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்ட காத்து ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். குரு ஆறாவது வீட்டிலும், சுக்கிரன் எட்டாவது வீட்டிலும், சனி பன்னிரெண்டாவது வீட்டிலும், சந்திரன் பதினொன்றாவது வீட்டிலும் இருந்தால் இவர்களுக்கு செல்வம் அனைத்து வழிகளிலும் வந்து சேரும்.



Click it and Unblock the Notifications