வசியம் செய்வது உண்மையில் சாத்தியமா? வசியம் செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் இதோ...!

இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் மாந்திரீகம் மீதான நம்பிக்கையும் அதன் பயன்பாடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பங்கள் அதிகளவு வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்திலும் மாந்திரீகத்தின் மீதான நம்பிக்கை குறையாமல்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் வசியம் செய்வது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது, இப்போதும் இந்த வசியபூஜை குடும்பங்களில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க செய்யப்பட்டதன் வருகிறது.

Do Vashikaran mantras really work in todays world?

இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் மாந்திரீகம் மீதான நம்பிக்கையும் அதன் பயன்பாடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு பிடிக்காதவர்கள் வாழ்வை கெடுக்க சூனியம் வைப்பது, தனக்கு பிடித்தவர்கள் தன்னுடன் நெருங்க வசியம் செய்வது இந்த இரண்டும் மாந்திரீகத்தில் அதிகம் செய்யப்படும் பூஜையாகும். இந்த பதிவில் வசீகர பூஜைக்கு பின்னல் இருக்கும் உண்மைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வசீகர பூஜை

வசீகர பூஜை

நம் காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை வசீகர பூஜையில் கூறப்படும் மந்திரங்களை கொண்டு சரி செய்யலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது நாம் நினைத்ததை அடைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பூஜை சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் இதன் முடிவுகள் முழுவதும் வெற்றிகரமானதாக இருக்குமா என்றால் அது சந்தேகம்தான்.

வசீகர பூஜை உண்மையில் உதவுமா?

வசீகர பூஜை உண்மையில் உதவுமா?

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தில் வசியம் செய்வது என்பது மிகவும் பிரபலமான பழக்கமாக இருந்து வந்தது. இது நீங்கள் விரும்பும் எதையும் சாதிக்க இயலும். பண்டையகால இந்தியாவை பொறுத்த வரையில் இந்த வசிய பூஜை என்பது மிகவும் வலிமையான ஒன்றாக இருந்தது. காதல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க இந்த பூஜை உதவும் என்று மக்கள் நம்பினர் அதற்கு பல ஆதாரங்களும் உள்ளது.

சூனியத்துடன் தொடர்புடையதா?

சூனியத்துடன் தொடர்புடையதா?

இந்த வசிய பூஜைக்கும், மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இது நீங்கள் ஒருவரின் மீது கட்டுப்பாட்டை செலுத்த விரும்பினால் இந்த பூஜை செய்ய வேண்டும். இந்த வசியம் செய்ய நான்கு பொருட்கள் அவசியம் அவை வெற்றிலை, கிராம்பு, பூக்கள் மற்றும் துணி ஆகும்.

சடங்குகள்

சடங்குகள்

இந்த சூனியம் செய்யும் இந்த முறையானது சில தாந்திரீக மந்திரங்களுடன் பயன்படுத்துவார்கள். ஒருவர் யாரை கட்டுப்படுத்த விரும்புகிறார்களோ அவர்களின் உடைமைகள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மற்றவரை கவர இயலுமா?

மற்றவரை கவர இயலுமா?

தான் விரும்பும் காதலரை அடையவும், காதலில் வெற்றி பெறவும் வசீகர பூஜை உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் இதன் மூலம் பிரிந்த தன் மனைவி மற்றும் கணவனுடன் மீண்டும் இணையவும் இந்த பூஜை உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதன் நம்பகத்தன்மை இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

அறிவியலும் வசியமும்

அறிவியலும் வசியமும்

விஞஞானம் இதுபோன்ற நம்பிக்கைகளை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை, ஆனால் இதன் மீதான நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் குறையவில்லை. இந்த சடங்கின் படி ஒருவர் மற்றவரை கவரவோ அல்லது கட்டுப்படுத்தவோ விரும்பினால் அவர்களின் உடலுடன் தொடர்புடைய பொருட்களான துணி, முடி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

வசீகர மந்திரம்

வசீகர மந்திரம்

தந்திர உத்திகளின் மூலம் இந்த சில மந்திரங்களை கூறும்போது சில மூலிகைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தப்படும் அந்த பொருட்கள் அவர்களின் ஆன்மாவையும், உடலையும் குறிக்க பயன்படுவதாகும். இந்த பூஜையின் பலன் எப்போதும் உடனடியாக கிடைத்துவிடாது. ஆனால் இது நிச்சயம் பலனை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் மக்களின் நம்பிக்கை தவிர இதற்கு வேறு ஆதாரம் எதுவும் இல்லை.

அறிவியல்

அறிவியல்

இன்றைய காலங்களை போல் அல்லாமல் கடந்த காலத்தில் இந்த பூஜை மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர்களாக மக்கள் இருந்தார்கள். ஆனால் அறிவியல்ரீதியாக மற்றவர்களின் மனதை கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதை கட்டுப்படுத்துதல்

மனதை கட்டுப்படுத்துதல்

ஒருவரின் மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஒருவரின் மூளையின் நரம்பு செல்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். இதுதவிர மற்றவரை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை. மந்திரங்களின் மூலம் மற்றவர்களின் மனதை கட்டுப்படுத்த முடியும் என்பது நமது சமூகத்தில் நிலவும் வலிமையான நம்பிக்கையாகும்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

விஞஞானத்தின் படி ஒரு குறிப்பிட்ட குறிப்பை தொடர்ந்து கவனிப்பது உண்மையில் ஒருவரின் மூளையின் செயல்திறனை பாதிக்கும் மேலும் இது அவர்களின் மாற்றத்திற்கும் வழிவகுக்கும். ஆனால் வசியம் ஒருவரை கட்டுப்படுத்தும் என்பதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, March 4, 2019, 14:28 [IST]
Desktop Bottom Promotion