குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

ஒரு நாளைத் துவங்குகின்ற பொழுது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

horoscope

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் ஆதரவான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். மனதுக்குள் தோன்றும் உங்களுடைய பழைய நினைவுகளால் கொஞ்சம் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உங்களுடைய வெளிவட்டாரங்களின் மூலம் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

வேலை சம்பந்தமாக வெளியூரக்குப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் எதிர்பார்த்தத பணவரவு உங்களுடைய கைக்கு வந்து சேர கொஞ்சம் காலதாமதமாகும். உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உங்களுடைய வாழ்க்கை பற்றிய புரிதல் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் புதிய ஆடைகள் வாங்குவதற்கான சூழலும் மனம் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் உயர்வு கிடைக்கும். பண வரவு உண்டாவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். சுப செயல்களை முன்னின்று நடத்தி முடிப்பீர்கள். வாகன சேர்க்கை உண்டாகும். அடுத்த வாகனங்களை வாங்க முயற்சி செய்வீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

உங்களுடைய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் நிதானமான போக்கைக் கையாளுங்கள். உங்களுடைய வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் தொல்லையால் உங்களுக்கு மன வருத்தங்கள் வந்து போகும் வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

நீங்கள் மனதில் நினைத்த செயல்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமான சூழல் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன உபாதைகள் வந்து போகும். தொழில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் கொஞ்சம் நிதானம் தேவை. முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்வதன் மூலம் உங்களுடைய பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் உங்களுக்கு முழு திருப்திகரமான சூழல் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கி கொஞ்சம் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் கூடுதலாக அறிவுத்திறனை வெளிப்படுத்துவார்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் உங்களுடைய மதிப்பு உயர்ந்து காணப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

நீங்கள் நினைத்த செயல்களைச் செய்து முடிப்பதில் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சுக்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அதேபோல் பேச்சுக்களில் நிதானம் தேவை. உங்களுடைய சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் மனக்கசப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத பொருள் வரவு உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். கால்நடைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தப்பட்ட பணியில் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

 தனுசு

தனுசு

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான அறிவுரைகளைப் பெரியவர்களிடம் இருந்து பெறுவீர்கள். நீங்கள் வேலை செய்கின்ற இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். நீங்கள் நினைத்தபடி எண்ணிய எண்ணங்கள் நிறைவேற கொஞ்சம் காலதாமதமாகும். இன்று உங்களுடைய நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

பிரபலங்களுடைய அறிமுகங்கள் உண்டாகும். உங்களுடைய பதவி உயர்வுக்கான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய அனுபவ அறிவால் சில செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம் லாபம் அடைவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்குச் சுப செய்திகள் வந்து சேரும். உங்களுடைய இழுபறியான செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகளை மறந்து கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

மனதுக்குள் தோன்றுகின்ற புதுவிதமான எண்ணங்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய சகோதரர்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய மனதுக்குப் பிடித்த சில நபர்களைச் சந்திப்பதன் மூலம் உங்களுடைய மனதில் மாற்றங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, June 27, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion