Latest Updates
-
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
நல்ல காரியமா இருந்தாகூட இந்த ராசிக்காரங்க தொட்டா வெலங்காம தோன் போகுமாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
சுய தொழில் தொடங்குவதற்கு சரியான தருணம் இது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவேலைகளில் நீங்கள் நினைத்த முடி உங்களால் அடைய முடியும். வெர்த்தகம் சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
மனதுக்குள் உண்டாகும் தேவையற்ற எண்ணங்களால் மனதில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வழிகள் உண்டாகும். நீங்கள் செய்யும் வேலையில் சின்ன சின்ன கருத்து முரண்பாடுகள் மற்றவர்களோடு வரக்கூடும். தேவையில்லாத அலைச்சலால் உடலும் மனமும் சோர்வடையும். ஆனாலும் பயணங்களால் வரும் அலைச்சல் உங்களுக்கு சில அனுபவங்களைக் கற்றுத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனைவியின் வழியில் நீங்களே எதிர்பார்க்காத சுப செலவுகள் வந்து சேரும். நீங்கள் எந்த காரியத்தைத் தொட்டாலும் அது தாமதமாகத் தான் முடியும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. தொழிலில் கொடுத்த பணம் திரும்பி வர தாமதம் ஆகும். வாகனங்கள், வீடு போன்றவை மராமத்து செய்ய விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் உங்களுக்கு வுலையில் பொறுப்புகள் கூடும். உடன் பணிபுரிகின்ற ஊழியர்களிடம் அணுசரணையோடு நடந்து கொள்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடையஎண்ணங்களையும் தேவைகளையும் அறிந்து அவர்களுடைய ஆசையை நிவர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சச்சரவுகள் வந்தால் நீங்கள் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் உள்ளவர்குள் என்ன ஆசைப்படுகிறார்களோ அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உங்களுடைய நெருக்கமான நண்பர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். வேகமாக முடியுமென்று நீங்கள் எதிர்பார்து்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் காலதாமதமாகும். மனதில் சின்ன சின்ன குழப்பங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய பெற்றோர் வழி உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளின் மூலம் சுப செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமாக பொருளுாதார உதவிகள் கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். பயணங்களின் மூலம் பெரும் லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவார்கள். பெற்றோர்களின் வழியில் உங்களுக்கு ஆதரவும் அதனால் மன மகிழ்ச்சியுமு் உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் திருப்தியான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழில் நிமித்தமாக நீங்கள் செய்யும் செயல்கள் கொஞ்சம் இழுபறியாகவே இருக்கும். வேலையிடத்தில் உங்களுடன் வேலை செய்கின்ற சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நீஞ்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்குப் பணவரவு வந்து சேரும். பிறரிடம் தொழில் சார்ந்த விஷயங்களை சொல்லிவிடாதீர்கள். அது உங்களுக்கே ஆப்பாகக் கூட முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். தொழில் சம்பந்தமாக புதிய பல முடிவுகளை எடுக்க நுரிடும். மனதில் தெளிவான எண்ணங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளைத் திட்டமிட்டு செய்வீர்கள். தொழில் தொடர்பாக பயணஙகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் வந்தால் அதை தவறவிடாதீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம கவனமாக இருக்க வேண்டும். வழக்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானமாக இருங்கள். பரம்பரை சொத்துக்களால் சுப வரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கும்பம்
வெளியூருக்கு வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுத்த காரியங்களை முடிப்பதில் சின்ன இழுபறி நிலை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உங்களுடைய வாதத்திறமையால் லாபம் உண்டாகும். உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில்நீலம் நிறமும் இருக்கும்.

மீனம்
இதுவரை செய்து வந்த வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். உங்களுடைய அறிவுத்திறனால் மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியாக தொழிலுக்கு உதவிகள் கிடைக்கும். புதிதாக மனைகள் மற்றும் வீடு கட்டுவதற்கான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications