Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா... அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்
சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும். உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனதில் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைத் தொடங்குவீர்கள். உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பிளர்களுக்கு இடையே மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வந்து சேரும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே எண்ணங்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய உடன் பிறப்புகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் உங்களுக்குக் கிடைக்கும் உதவியினால் லாபம் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். உங்களுடைய புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் மேற்கொள்ளும் பயணங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் சம்ந்தப்பட்ட பிரச்னைகளினால் மனதில் வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
ஏற்றுமதி,இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். பொது சபைகளில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். வியாபாரங்களில் உங்கள் மீதான ந்பிக்கை அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பணி சம்பந்தப்பட்ட பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வேலை தேடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்து முடிக்கத் திட்டமிட்டிருந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான சாதகமான சூழல்கள் உங்களுக்கு உருவாகும். குடும்பத்தைப் பற்றிய மனக்கவலைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் சின்ன சின்ன மனக்கசப்புகள் உண்டாக வாய்ப்புகள் இருப்பதால், கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும், அதை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத அளவில் அலைச்சலும் வீண் பதற்றமும் உண்டாகும். எதையும் எதிர்கொள்கின்ற போராட்ட குணங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

மகரம்
கலைத் துறையில் இருக்கின்றவர்குளுக்கு இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் நீங்கி, உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளியூருக்கு பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க ஆயத்தம் ஆவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய மனதுக்குள் உங்களுக்கான செல்வாக்குகள்உயர ஆரம்பிக்கும். உயர் அதிகாரிகளுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
நீங்கள் நினைத்த காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் வேகமாகவே வெற்றி கிடைக்கும். சரியான நேரத்தில் கிடைக்கும் பண உதவியினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு குடும்பத்தாருடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு புகழ் உண்டாகும். திருமண முயற்சிகள் நல்ல முடிவைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளியாட்களுடைய தொடர்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான சிந்தனைகள் மேலோங்கத் தொடங்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











