Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணகஷ்டத்தையும் போக்க இந்த லக்ஷ்மி மந்திரத்தை கூறி வழிபடுங்கள்
நீங்கள் கூறும் சில மந்திரங்களும், பூஜைகளும் உங்களின் வேண்டுதலை கடவுள் விரைவில் நிறைவேற்ற உதவும். ஒவ்வொரு கடவுளையும் வழிபடுவதற்கென சில சிறப்பு வழிபாட்டு முறைகள் உள்ளது.
மந்திரங்கள் கூறி வழிபடுவது என்பது ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மந்திரத்தை சாதாரணமாக கூறி கடவுளை வழிபட்டு விட முடியாது அத்ற்கு கடவுள் மீது முழுமையான பக்தியும், அர்ப்பணிப்பும் தேவை.

நீங்கள் கூறும் சில மந்திரங்களும், பூஜைகளும் உங்களின் வேண்டுதலை கடவுள் விரைவில் நிறைவேற்ற உதவும். ஒவ்வொரு கடவுளையும் வழிபடுவதற்கென சில சிறப்பு வழிபாட்டு முறைகள் உள்ளது. இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் சில சிறப்பு மந்திரங்களையும், பூஜைகளையும் பற்றி பார்க்கலாம்.

சனிபகவான் தைலாபிஷேகம்
சிங்னபூரில் இருக்கும் சனிபகவானுக்கு தைல அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். உலகம் முழுவதும் இருக்கும் பக்தர்கள் இங்கு வந்து சனிபகவானுக்கு இந்த சிறப்பு பூஜையை செய்கிறார்கள். இந்த அபிஷேகம் சனி தோஷத்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இருக்கும் தடைகள், திருமண பிரச்சினைகள் போன்றவற்றை நீக்கும்.

கணேச மந்திரம்
இந்த கணேச மந்திரம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவதுடன் உங்களுக்கு ஞானம் மற்றும் செல்வம் போன்றவற்றை வழங்கும். " ஓம் கம் கணபததாயே நமஹ " இதன் அர்த்தம் அணைந்து தடைகளையும் நீக்கும் யானைமுக கணேசனை வணங்குகிறேன் என்பதாகும்.

பார்திவ் சிவலிங்க பூஜை
இது சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜையாகும். பார்திவ் சிவலிங்கம் என்பது மண்ணால் செய்யப்படும் லிங்கமாகும். உங்கள் சார்பாக கங்கை கரையில் 108 பார்திவ் சிவலிங்கங்கள் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துரதிர்ஷ்டம், தடைகள், தோஷங்கள் என அனைத்தையும் விரட்டும்.

லக்ஷ்மி மந்திரம்
இந்த மந்திரம் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியை வழிபட உதவுவதாகும். " ஓம் ஸ்ரீம் மகா லக்ஷ்ம்லேய் ஸ்வாஹா ". இந்த மந்திர வழிபாடு உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணப்பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும்.

ருத்ர அபிஷேக பூஜை
சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற உதவும் மற்றொரு சிறப்பு பூஜை ருத்ர அபிஷேக பூஜை ஆகும். இந்த பூஜை 11 பொருட்களை கொண்டு சிவபெருமானின் 108 பெயர்களை கூறி செய்யப்படுவதாகும். இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பெரிய வெற்றியை வழங்குவதோடு தோஷங்களையும் நீக்கும்.

காலசர்ப்ப பூஜை
காலசர்ப்ப தோஷம் என்பது அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுக்கு இடையே வரும்போது ஏற்படுவதாகும். இந்த காலகட்டத்தில் பிறப்பவர்களின் வாழ்க்கை துரதிர்ஷ்டம் நிறைந்ததாகவும், துன்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த காலசர்ப்ப தோஷ பூஜை இதனால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

அனுமன் பூஜை
அனுமன் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் இராமரின் மிகப்பெரிய பக்தர் ஆவார். இந்த பூஜை சூரியன் உதிப்பதற்க்கு முன்னர் செய்ய வேண்டும். இந்த பூஜை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பை வழங்கும். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பயங்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications