Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
இந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..
சாணக்கியர் அவரது நூலான சாணக்கிய நீதியில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியத்தை மட்டும் கூறவில்லை, மகிழ்ச்சியை கெடுக்கும் காரணங்களையும் கூறியுள்ளார்.
நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென்பதே அனைவருக்கும் இருக்கும் ஆசையாகும். ஆனால் அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை கிடைத்து விடுவதில்லை. நமது மனஅமைதியை கெடுக்கும் செயல்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து நடப்பவையாகத்தான் இருக்கும்.

அறிவு மற்றும் தந்திரத்தின் மொத்த உருவமாக கருதப்படும் சாணக்கியர் அவரது நூலான சாணக்கிய நீதியில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியத்தை மட்டும் கூறவில்லை, மகிழ்ச்சியை கெடுக்கும் காரணங்களையும் கூறியுள்ளார். சாணக்கிய நீதியில் அவர் கூறியுள்ளபடி நமது மனஅமைதியை கெடுக்கும் சம்பவங்களும், செயல்களும் என்னவென்று பார்க்கலாம்.

சாணக்கிய நீதி
சந்திர குப்த மௌரியரின் ராஜ குருவாக இருந்த சாணக்கியர் பொருளாதாரம், அரசியல், தத்துவவியல் என அனைத்து துறையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். இவரின் நூல்கள் கூறும் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கும். காலம் மாறினாலும் மனிதர்களும், அவர்களுக்கான பிரச்சினைகளும் ஒருபோதும் மாறாது. அதன்படி மனிதர்களின் மனஅமைதியையும், மகிழ்ச்சியையும் கெடுப்பது எதுவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

முதல் காரணம்
ஒரு மனிதன் தன்னிடம் என்ன இல்லை என்று சிந்திக்க தொடங்கும் போது அவன் தன்னிடம் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்த தவறி விடுகிறான். அவனின் தேவைக்கும், ஆசைக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவன் மறந்துவிடுவான். ஆசைப்படுவதை அடைய வேண்டும் என்று நினைக்கும் அவனின் பயம் அவனிடம் இருக்கும் அமைதியையும், நல்லறிவையும் மழுங்க செய்துவிடும்.

இரண்டாவது காரணம்
ஒருவரின் வாழ்க்கையுடைய வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பது அவர்களிடம் இருக்கும் தன்னம்பிகையாகும். ஒருவன் தன்னிடம் போதிய அறிவும், முயற்சியும் இருந்தும் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற காரணங்களால் மற்றவர்களின் கீழே வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பாட்டால் அவரின் வாழ்க்கையில் இருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அழிந்துவிடும்.

மூன்றாவது காரணம்
நிம்மதி என்பது வாழ்க்கையில் அனைத்திலும் இருக்க வேண்டும். ஆரோக்கியமில்லாத வாழ்க்கை ஒருபோதும் நிம்மதியான வாழ்க்கையாக இருக்க முடியாது. ஒருவன் தொடர்ந்து ஆரோக்கியமில்லாத உணவுகளை சாப்பிட்டு தன் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தாமல் இருந்தால் அவனிடம் ஆரோக்கியம் என்பதே இருக்காது. இந்த பழக்கத்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், வாழ்க்கை மீதான பயமும், ஆரோக்கியம் பற்றிய கவலையும் அதிகாரிக்கும்.

நான்காவது காரணம்
வாழக்கையில் மனைவி மட்டும் சரியாக அமைந்து விட்டால் அதனை விட பெறிய வரம் எதுவுமில்லை. அதேபோலத்தான் மனைவி சரியாக அமையாவிட்டால் அதனை விட பெரிய சாபமும் எதுவுமில்லை. மனைவி எப்பொழுதும் கணவனை கோபப்படுத்தி கொண்டே இருந்தால் அது அவர்களின் உறவை சிதைப்பதுடன் அவர்களின் நிம்மதியையும் கெடுக்கும்.

ஐந்தாவது காரணம்
ஒருவருக்கு குடும்பம்தான் அனைத்தையும் விட பெரிய சொத்தாகும். ஒருவரின் மகன் அவருக்கு கீழ்ப்படியாமலும் அவரின் அறிவுரைகளை மதிக்காமலும் வெளியுலகத்தில் நடந்து கொள்வது அவரின் வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய கவலையாகும். அப்படிப்பட்ட மகன் அவர்களுக்கு பெற்றோராய் இருக்க தகுதியில்லை என்று கூறுவதன் அர்த்தமாகும்.

ஆறாவது காரணம்
மகன் ஒருவழியில் கவலை என்றால் மகள் ஒருவழியில் கவலை. ஏனெனில் மகளை மணம் முடித்து கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்ப்பதே ஒருவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால் தன் மகளை இளம்வயதிலேயே விதவை கோலத்தில் பார்க்கும் எவரின் மனதிலும் நிம்மதி என்பதே இருக்காது.



Click it and Unblock the Notifications