இந்த சூழ்நிலைகள் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர்.

சிலசமயங்களில் எந்த தவறும் செய்யாத போது கூட நீங்கள் சில பழிகளுக்கு ஆளாக நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்த சாணக்கியரின் அறிவுரைகள் அந்த காலம் முதல் இக்காலம் வரை பொருந்தக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஒழுக்கமான வாழக்கைக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்னென்னெ என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

Chanakya niti: evils that burn man without fire

சாணக்கிய நீதியின் சமூகத்தில் கௌரவமாக வாழ வேண்டுமெனில் ஒருசில காரியங்களை செய்யக்கூடாது. ஏனெனில் சிலசமயங்களில் எந்த தவறும் செய்யாத போது கூட நீங்கள் சில பழிகளுக்கு ஆளாக நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதன்படி இந்த ஆறு சந்தர்ப்பங்களில் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் பழியையும், அவமானத்தையும், துன்பத்தையும் சுமக்க நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது

மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது

ஒரு ஆணின் வாழ்க்கையில் சரிபாதி பெண்தான். மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வது என்பது எப்போதும் ஆண்களுக்கு வேதனை தரும் ஒன்றுதான். விவாகரத்து, மனைவியின் இறப்பு என பிரிவு எந்த வடிவில் இருந்தாலும் அது ஆண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கும். மனைவி பிரியும்போது ஆண்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள்.

சொந்த மக்களிடம் அவமானம்

சொந்த மக்களிடம் அவமானம்

ஒருவர் தன் சொந்த மக்கள் என நினைப்பவர்களால் அவமானமடையும்போது முழுவதுமாக நிராகரிக்கப்படுகிறார். இது அவர்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் , பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

போரில் பாதுகாக்கும் எதிரி

போரில் பாதுகாக்கும் எதிரி

போரில் எதிரியை ஒருவன் காப்பற்றினால் அது அவனது வாழ்கையையே சிதைத்துவிடும். இதன் மற்றொரு அர்த்தம் தவறான ஒருவரின் புறத்தில் நீங்கள் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவீர்கள் என்பதாகும்.

தவறான மன்னனுக்கு சேவை

தவறான மன்னனுக்கு சேவை

சாணக்கியரின் கருத்துப்படி தவறான ஒரு மன்னனுக்கு சேவை செய்தால் நீங்கள் வாழ்க்கைக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு அர்த்தம் நீங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் நேர்மையான மக்களின் பக்கத்தில் இருக்க வேண்டும் ஒருபோதும் மோசமான நபர்களின் பக்கத்தில் இருக்கக்கூடாது.

ஏழ்மை

ஏழ்மை

சாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் ஏழ்மையில் இருந்தால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை ஒருபோதும் நடக்க அனுமதிக்காதீர்கள். பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும், உங்களின் பழக்கத்தால் ஏழ்மை உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள்.

தவறான நிர்வாகம்

தவறான நிர்வாகம்

நீங்கள் ஆற்றலும், அதிகாரமும் உள்ளவராக இருந்தால் தவறான நிர்வாகம் உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களுக்காக வேலை செய்பவர்கள் இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாகவும், அவர்களின் வேலையை என்னவென்பதை உணர்வபவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு பெரிய

சாம்ராஜ்யமாக இருந்தாலும் சரிந்து விடும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் வேறு சில அறிவுரைகள் என்னவென்று பார்க்கலாம்.

மகளின் திருமணம்

மகளின் திருமணம்

உங்கள் மகளை எப்போதும் நல்ல குடும்பத்தில் மணம் முடித்து கொடுங்கள், உங்களின் மகனுக்கு எப்போதும் எதிரிகளை சமாளிக்க கற்றுக்கொடுங்கள், உங்களின் நண்பர்களை எப்போதும் தர்மத்தின் பாதையில் நிற்க அறிவுறுத்துங்கள்.

பாம்பு

பாம்பு

தவறான ஒரு நபரையும், பாம்பையும் பார்த்தால் அதில் பாம்புதான் சிறந்தது. ஏனெனில் பாம்பு ஒரு முறைதான் தாக்கும் ஆனால் தவறான நபரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மை அழிக்க நினைப்பார்.

முட்டாள் நண்பன்

முட்டாள் நண்பன்

ஒரு முட்டாளுடன் எப்பொழுதும் நண்பராக இருக்காதீர்கள், ஏனெனில் நம்மை பொறுத்தவரை அவர்கள் இரண்டு கால்கள் இருக்கும் மிருகங்கள்தான். கண்ணனுக்கு தெரியாத முள்ளைப்போல இவர்களின் வார்த்தைகள் எப்பொழுதும் நம்மை காயப்படுத்தி கொண்டே இருக்கும்.

கல்வி

கல்வி

ஒரு மனிதன் நிறைவான அழகுடனும், பெருமை வாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு கல்வி இல்லையெனில் அவர்கள் இறந்த மலராகவே கருதப்படுவார்கள். அதனால் எந்த உபயோகமும் இல்லை.

தியாகம்

தியாகம்

ஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒருவரை தியாகம் செய்யலாம், ஒரு கிராமத்தை காப்பாற்ற ஒரு குடும்பத்தை தியாகம் செய்யலாம், ஒரு நாட்டை காப்பாற்ற ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம். உங்களை காப்பாற்றிக்கொள்ள நாட்டையே தியாகம் செய்து கொள்ளலாம்.

நல்ல மகன்

நல்ல மகன்

ஒரு காட்டில் இருக்கும் ஒரு மரத்தில் இருந்து வரும் வாசனை எப்படி அந்த காட்டையே மணம் கொண்டதாக மாற்றுகிறதோ அதேபோல ஒரு நல்ல மகன் அந்த குடும்பத்தையே காப்பாற்றுவான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion