Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த செடிகளை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்துவரும் தெரியுமா?
நமது வீட்டை அழகாக்குவதில் முக்கியப்பங்கு வகிப்பது அழகிய மலர்கள் பூக்கும் செடிகள்தான். வீட்டில் புத்துணர்ச்சியையும், நேர்மறை சக்திகளையும் பரவ செய்யும்.
வாழ்க்கையில் அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கும் ஒரு இடமென்றால் அது வீடுதான். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் வீட்டிற்கு சென்றால் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள்தான் இங்கு அதிகம். அப்படிப்பட்ட வீட்டை அழகாகவும், அமைதியாகவும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

நமது வீட்டை அழகாக்குவதில் முக்கியப்பங்கு வகிப்பது அழகிய மலர்கள் பூக்கும் செடிகள்தான். வீட்டில் புத்துணர்ச்சியையும், நேர்மறை சக்திகளையும் பரவ செய்யும். ஆனால் வீட்டில் வைக்கப்படும் தவறான செடிகள் இதற்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் வீட்டில் செடி வைக்கும்முன் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

செயற்கை பூக்கள்
வீட்டிற்குள் வைக்கப்படும் தவறான செடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்குள் செயற்கை செடிகளை வைப்பது உங்கள் வீட்டின் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும். இது அதிகளவு சூரிய ஒளியையும், நாற்றத்தையும் உண்டாக்கும். எனவே செயற்கை மலர்களை ஒருபோதும் உங்கள் வீட்டில் வைக்காதீர்கள்.

பிளாஸ்டிக் மலர்கள்
செயற்கை மலர்கள் பிளாஸ்டிக் மற்றும் வயர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் அது கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் இயற்கைக்கு ஏற்றதல்ல. அதுமட்டுமின்றி இயற்கை வழங்கிய எண்ணற்ற மலர்கள் இருக்கும்போது எதற்கு போலி மலர்களை வீட்டில் வைக்க வேண்டும்.

செடிகள்
வீட்டிற்கு வெளியே பெரிய செடிகளை வைத்து வளர்க்க முடியவில்லை என்றால் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கக்கூடிய செடிகளை வாங்கி வளர்க்கவும். இது ஆக்சிஜனை வெளிவிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் உங்கள் வீட்டின் சூழலையே ரம்மியமாக மாற்றக்கூடும். எந்தவொரு இடத்தையும் அழகாக மாற்ற இவற்றால் முடியும்.

மூங்கில் செடி
வீட்டில் மூங்கில் செடி வைப்பது என்பது அதிர்ஷ்டம் மற்றும் புனிதமானதாக கருதப்படுகிறது. வீட்டில் மூங்கில் செடி வைக்கப்படும் போது அது பஞ்சபூதங்களையும் பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது.

எங்கே வைக்க வேண்டும்?
மூன்ஹில் செடி ஒரு கொள்கலனின் கற்களுடன் இரண்டு அல்லது மூன்று இன்ச் தண்ணீரில் வைக்கப்பட வேண்டும். இதனுடன் ஒரு நாணயத்தை வைப்பது கூடுதல் சிறப்பானதாகும். இந்த கொள்கலனை ஒரு சிவப்பு நூல் கொண்டு கட்டவும்.

போன்சாய் தாவரம்
போன்சாய் மரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் ஆனால் அவை நேர்மறை சக்திகளை பிரதிபலிக்காது. அவை மெதுவான வளர்ச்சியை பிரதிபலிப்பதாகும். இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல.

அலுவலகம்
போன்சாய் மரங்களை வீட்டிற்குள் வைப்பதை காட்டிலும் அலுவகத்தில் வைப்பது நல்ல பலனைத்தரும். இதனை அலுவலக அறையின் தென்கிழக்கு அல்லது தெற்கு மூலையில் வைப்பது நல்லது. இது அறைக்குள் அதிக காற்றோட்டத்தை கொண்டுவரவல்லது.

தீயசக்திகள்
போன்சாய் மரங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை கண்டறிய உதவும். இவை மிகவும் மென்மையானவையாகும். உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கும் போன்சாய் மரம் இறந்து விட்டால் அதே இடத்தில் மற்றோர் போன்சாய் மரத்தை வைக்கவும். அதுவும் இறந்து விட்டால் அந்த இடத்தில் நிச்சயம் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம்.

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை
உங்கள் வீட்டின் வாசலில் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை மரத்தை வளர்ப்பது மிகவும் நல்லதாகும். இது உங்கள் வீட்டை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்க உதவும்.

வைக்கக்கூடாத செடிகள்
கள்ளி செடியை உங்கள் படுக்கையறை, அலுவலக மேஜை போன்ற இடத்தில் வைக்கக்கூடாது. அதனை வீட்டிற்கு வெளியே மட்டுமே வைக்க வேண்டும். செவ்வந்தி, சம்பங்கி போன்ற மலர்களின் வாசனை உங்களுக்கு பிடித்தால் அதனை உங்கள் தோட்டத்தில் வைத்து வளர்க்க வேண்டுவே தவிர வீட்டிற்குள் வைத்து வளர்க்கக்கூடாது. ஏனெனில் இதன் வாசனை உங்கள் வீட்டிற்கு தேவையில்லாத எதிர்மறை சக்திகளை அழைத்துவரும்.

செல்வம் அதிகரிக்க
மணி பிளேண்ட்ஸ் வளர்க்க விருப்பமா? ஆம் எனில் அதனை தென்கிழக்கு திசையில் வைத்து வளருங்கள். ஏனெனில் தென்கிழக்கு திசைதான் குபேரரின் திசையாகும். எந்த செடிகள் வளர்த்தாலும் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இறந்த மலர்கள் இருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
