For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எளிய பொருட்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் தெரியுமா?

சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கெனவே சரஸ்வதி பூஜை நமது மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆதிசக்தியின் ஒரு பரிமாணமான சரஸ்வதியின் அருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும்.

|

இந்து மதத்தின் முக்கியமான பெண் தெய்வங்களில் ஒருவர் சரஸ்வதி ஆவார். ஞானத்தின் கடவுளாக வணங்கப்படும் சரஸ்வதிதான் அனைவர்க்கும் நல்ல படிப்பை கொடுப்பவர் என்று கூறப்படுகிறது. பிரம்மாவின் மனைவியான இவர் அவரின் ஆற்றலின் பெண் பிரதிபலிப்பு என்று கூட கூறலாம்.

Auspicious offerings to Devi Saraswati

சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கெனவே சரஸ்வதி பூஜை நமது மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆதிசக்தியின் ஒரு பரிமாணமான சரஸ்வதியின் அருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பதிவில் சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்தவழிபாட்டு பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற மலர்கள்

மஞ்சள் நிற மலர்கள்

சரஸ்வதி தேவிக்கு தன்னை மஞ்சள் நிற மலர்கள் கொண்டு அலங்கரித்து கொள்ள மிகவும் பிடிக்கும். இவை வசந்தகாலங்களில் அதிகமாக கிடைக்கும். உங்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் வேண்டுமென்றால் நீங்கள் அவரின் சிலைக்கு மஞ்சள் நிற மலர்களை வைத்து வழிபட வேண்டும்.

பூந்தி

பூந்தி

சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் பூந்தி ஆகும். பூந்தியை வைத்து சரஸ்வதி தேவியை வழிபட்டு விட்டு பின்னர் அதனை அனைவர்க்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மஞ்சள் நிறம் குருவுடன் தொடர்புடையது. இது அறிவின் நிறமாகும். சரஸ்வதிக்கு பூந்தி வைத்து வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் குருவின் பார்வையை அதிகரிக்கும்.

MOST READ: சாஸ்திரங்களின் படி தம்பதியினர் இந்த இடங்களில் கலவியில் ஈடுபடுவது மிகப்பெரிய பாவமாகும்...!

வெள்ளை மற்றும் மஞ்சள் துணி

வெள்ளை மற்றும் மஞ்சள் துணி

சரஸ்வதி தேவி தூய்மையைக் குறிக்கும் வெள்ளை ஆடைகளை தன்னை அலங்கரிக்கத் தேர்வு செய்து கொள்கிறார். பொதுவாக சரஸ்வதியை வழிபடும் போது அவரின் சிலையை வெள்ளைத்துணி கொண்டு சுற்றிவையுங்கள். ஆனால் பசந்த பஞ்சமி அன்று சரஸ்வதிக்கு மஞ்சள் நிற துணி வைத்து வழிபடுவது சிறந்ததாகும். மஞ்சள் நிற துணி கிடைக்கவில்லை எனில் வெள்ளை நிற துணியை உபயோகிக்கலாம் ஆனால் மஞ்சள் நிறம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும்.

புத்தகம் மற்றும் பேனா

புத்தகம் மற்றும் பேனா

சரஸ்வதி பூஜையின் போது புத்தகம், பேனா என படிப்புடன் தொடர்புடைய எதையாவது வைத்து சரஸ்வதி டீ தேவியை வழிபடலாம். பூஜை முடிந்த பிறகு இதனை தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுத்துவிடவும். இவ்வாறு வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். இது உங்களுக்கு நல்ல படிப்பையும், நினைவாற்றலையும் வழங்கும்.

MOST READ: அனுமன் ஏன் வேண்டுமென்றே தன் சகோதரன் பீமனிடம் வம்புக்கு சென்றார் தெரியுமா?

சந்தனம்

சந்தனம்

சரஸ்வதி பூஜையின் போது சந்தனம் அல்லது குங்குமப்பூவை வைத்து சரஸ்வதியை வழிபடவும். அதன்பின்னர் அதனை உங்கள் குடுபத்தினர் நெற்றியில் திலகமாக வைக்கவும். வேதஜோதிடத்தின் படி சந்தனமும், குங்குமப்பூவும் பிரஜாபதியுடன் தொடர்புடையவை. இதனை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவது உங்களுக்கு பல ஆதாயங்களை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pooja flower
English summary

Auspicious offerings to Devi Saraswati

Offering these things to Goddess Saraswati holds high auspicious value.
Story first published: Tuesday, July 9, 2019, 17:34 [IST]
Desktop Bottom Promotion