For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்ஜுனன் ஊர்வசியின் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்ததற்கான காரணம் என்ன தெரியுமா?

அர்ஜுனின் வாழ்க்கை முழுவதும் வரங்களால் நிறைந்திருந்தது. சிவபெருமான், இந்திரன், அனுமன் என் பல கடவுள்களிடம் வரம் பெற்றிருந்தான் அர்ஜுனன்.

|

மகாபாரத போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது அர்ஜுனன்தான். அர்ஜுனன் இல்லையெனில் பாண்டவர்களின் வெற்றி சாத்தியமாகி இருக்காது. ஏனெனில் தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணரால் தேர்ந்தெடுப்பட்டது அர்ஜுனன்தான். தான் நினைத்த காரியங்களை அர்ஜுனன் மூலமாகவே ஆயுதமேந்தாமல் செய்து முடித்தார் கிருஷ்ணர்.

Arjuna rejected sensual advances of Celestial Apsara, Urvashi

அர்ஜுனின் வாழ்க்கை முழுவதும் வரங்களால் நிறைந்திருந்தது. சிவபெருமான், இந்திரன், அனுமன் என் பல கடவுள்களிடம் வரம் பெற்றிருந்தான் அர்ஜுனன். ஆனால் அவன் வாழ்க்கையில் பெற்ற முக்கியமான சாபம் ஒரு பெண் கொடுத்தது. அது வேறு யாருமல்ல சொர்க்கத்தின் அப்சரா ஊர்வசிதான். இந்த பதிவில் ஊர்வசி ஏன் அர்ஜுனனுக்கு சாபம் கொடுத்தார் அதனால் அர்ஜுனனுக்கு நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொர்க்கத்தில் அர்ஜுனன்

சொர்க்கத்தில் அர்ஜுனன்

அர்ஜுனன் போருக்கு தயாராகி கொண்டிருந்து தருணத்தில் சில திவ்ய அஸ்திரங்களை பெறுவதற்காக இந்திரலோகத்திற்கு சென்றான். அர்ஜுனன் இந்திரனின் மகன் என்பதால் மனித உருவத்திலேயே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டான். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாவீரர்களை வீழ்த்த அர்ஜுனனுக்கு அந்த திவ்ய அஸ்திரங்கள் தேவைப்பட்டது.

ஊர்வசி

ஊர்வசி

இந்திரலோகத்தின் அப்சரஸ்களில் மிகவும் முக்கியமானவர் ஊர்வசி ஆவார். இந்திரலோக சபையில் இருந்த தேவதைகளில் ஊர்வசியே மிகவும் அழகானவர். நிரந்தரமான இளமையும், அழகும், பொலிவும் கொண்டிருந்த ஊர்வசி அனைவரின் ஆசையையும் தூண்டுபவராக இருந்தார். ஊர்வசி என்பதன் பொருள் ஊர் என்றால் இதயம் வசி என்றால் கட்டுப்பாடு. மொத்தத்தில் இதயத்தை கட்டுப்படுத்துபவர் என்று பொருள்.

இந்திரனின் அறிவுரை

இந்திரனின் அறிவுரை

திவ்ய அஸ்திரங்களை கற்றுக்கொண்டு கிளம்ப தயாரான அர்ஜுனனிடம் இந்திரன் கந்தர்வ அஸ்திரத்தை கற்றுகொண்டாயா என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன் " பிரபு! நான் ஒரு போர்வீரன் நான் நடனம் மற்றும் இசையை கொண்டு என்ன செய்யப்போகிறேன் " என்று வினவினான். அதற்கு " கலை மிகசிறந்த ஆயுதம் " என்று கூறினார். " அப்படியெனில் நான் போர் முடிந்த பிறகு அதனை கற்றுக்கொள்கிறேன் " என்று அர்ஜுனன் கூறினான். அதற்கு " இந்த ஆயுதம் உனக்கு அஞ்ஞாத வாசத்தில் உதவும் " என்று இந்திரன் கூறியதால் அர்ஜுனன் அதற்கு ஒப்புக்கொண்டான். அர்ஜுனனுக்கு இசை மற்றும் நடனத்தை கற்றுக்கொடுக்க இந்திரன் ஊர்வசி மற்றும் சித்திரசேனனை நியமித்தார்.

ஊர்வசியின் ஆசை

ஊர்வசியின் ஆசை

அர்ஜுனனுக்கு நடனத்தை கற்றுக்கொடுக்கும்போது அவனது திறமையாலும், வசீகரத்தாலும் ஊர்வசி ஈர்க்கப்பட்டார். எனவே " ஓ வீரனே உனது திறமை என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. உன் மீதுள்ள மையல் என்னை மயங்க வைக்கிறது. அதனால் இந்த இரவை நான் உன்னுடன் கழிக்க விரும்புகிறேன் " என்று கூறினார்.

MOST READ: மற்றவர்களின் யோசனையை திருடி அதை தன்னுடையதுனு சொல்ல இந்த ராசிக்காரர்களால்தான் முடியுமாம்...!

அர்ஜுனனின் பதில்

அர்ஜுனனின் பதில்

ஊர்வசியின் இந்த விருப்பத்தை கேட்டு அர்ஜுனன் அதிர்ச்சியடைந்தான். " பேரழகு பொருந்திய ஊர்வசியே, நீங்கள் என்னிடமே இவ்வாறு பேசுவது முறையல்ல. ஏனெனில் நீங்கள் என் மூதாதையர் பூரரோவரின் மனைவியாக இருந்தவர் மேலும் எனக்கு குருவாக விளங்குபவர். குருவுடன் கலவி கொள்ளுவது மாபெரும் பாவச்செயல் அதனால் என்னை மன்னித்து விடுங்கள் " என்று கூறினான்.

ஊர்வசியின் பதில்

ஊர்வசியின் பதில்

அர்ஜுனின் பதிலை கேட்டு சிரித்த ஊர்வசி " இந்திரனின் மகனே! நாங்கள் எல்லோரும் இந்திரலோகவாசிகள் எனவே உங்களுடைய மனித மரபுகளும், விதிமுறைகளும் எங்களுக்கு பொருந்தாது. அதனால் நீ என்னுடன் தாராளமாக உறவு கொள்ளலாம் " என்று கூறினார்.

அர்ஜுனின் மறுப்பு

அர்ஜுனின் மறுப்பு

ஊர்வசியின் பதிலில் திருப்தியடையாத அர்ஜுனன் " தாயே நீங்கள் என்னதான் சமாதானம் கூறினாலும் நீங்கள் எனக்கு என் தாய் குந்தி, மாதுரி மற்றும் காந்தாரி போன்றவர்தான். என்னால் உங்கள் பாதத்தை தொட முடியுமே தவிர உங்களை அணைக்க இயலாது " என்று மறுத்துவிட்டான்.

ஊர்வசியின் கோபம்

ஊர்வசியின் கோபம்

அர்ஜுனன் இப்படி உறுதியாக பேசுவதை கண்டு அவன் தன் ஆசைக்கு இணங்கமாட்டான் என்பதை ஊர்வசி நன்கு புரிந்து கொண்டார். தன்னை அர்ஜுனன் நிராகரித்ததை பொறுத்து கொள்ள இயலாத ஊர்வசி அவனின் மேல் கோபம் கொண்டார். எனவே " என்னை நிராகரித்த நீ உனது ஆண்மை மற்றும் வீரத்தை இழந்து நடன மங்கையாக பன்னிரெண்டு திங்கள் இருப்பாய் " என்று சாபமிட்டார்.

MOST READ: உடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...!

வரமான சாபம்

வரமான சாபம்

ஊர்வசி அர்ஜுனனுக்கு அளித்த இந்த சாபம் பின்னாளில் அவனுக்கு வரமாக மாறியது. 13 ஆண்டுகள் வனவாசம் முடிந்து இ ஆண்டு அஞ்ஞாத வாசத்தில் இருக்கும்போது அர்ஜுனன் விராட தேசத்தின் அவையில் நடன மங்கை பிருஹன்னளையாக தனது அடையாளத்தை மறைத்து கொண்டு வாழ ஊர்வசி வழங்கிய இந்த சாபத்தை அர்ஜுனன் பயன்படுத்தி கொண்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Arjuna rejected sensual advances of Celestial Apsara, Urvashi

Do you why Arjuna rejected sexual advances of Celestial Apsara Urvashi?
Desktop Bottom Promotion