For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிரிக்கெட் வீரர்களோட அழகு செல்லக்குட்டிகளை பார்த்திருக்கீங்களா? இதோ பாருங்க...

By Mahibala
|

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று எல்லோரும் நம்புகிறோம். குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று கூட சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும் சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று.

Adorable Babies

நமக்கு பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். அதிலும் நமக்குப் பிடித்தவர்களின் குழந்தை என்றால் சொல்லவா வேண்டும். நம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் குழந்தைகளை பார்த்து ரசிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோனி மகள்

தோனி மகள்

தோனி மகள் ஜிவா. குறும்புக்காரி. சமூக வலைத்தளங்களின் இவரின் அழகான சுட்டித் தனங்களை தோனியே நிறைய பகிர்ந்திருக்கிறார். அதேபோல் மைதானத்துக்கும் வந்து தன்னோட சுட்டித்தனத்தால் எல்லோரையும் ரசிக்க வைப்பார். இவர் பிறந்தது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 6.

MOST READ: ஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும்? தினமும் சொன்னால் என்ன நடக்கும்?

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிடுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஷமீத் திராவிட், அன்வய் திராவிட். ஷமீத் 2005 ஆம் ஆண்டு பிறந்தார். அன்வய் 2009 ஆம் ஆண்டு பிறந்தார். இருவருக்கும் இடையே 4 வயது வித்தியாசம். இதில் ஷமீத் அச்சு அசல் அப்பாவே தான். அன்வய் கொஞ்சம் சுட்டி.

தவான்

தவான்

தவான் ஆயிஷா முகர்ஜியைத் திருமணம் செய்து கொண்டார். ஆயிஷாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தவானை தங்களுடைய தந்தையாக அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு ஜொரோவர் என்னும் சுட்டிப் பையன் 2014 ஆம் ஆண்டு தவானுக்கும் ஆயிஷாவுக்கும் பிறந்தார். அவனுடைய கண்களில் குறும்பு மின்னும்.

கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீருக்குப் பிறந்த தேவதையின் பெயர் ஆசின். இவர் பிறந்தது 2014 ஆம் ஆண்டு. இவர் ஓவர் அப்பா செல்லம். இவர் பிறந்தது தன் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று கம்பீர் நினைத்தார். கல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை ஏற்றது தன் மகள் வந்த அதிர்ஷ்டம் என்று தான் கம்பீர் எப்போதும் சொல்வார்.

அனில் கும்ளே

அனில் கும்ளே

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்தது போல வீட்டிலும் கும்ளேவுக்கு 2 குழந்தைகள். மயாஸ், ஸ்வஸ்தி. அதோடு தன்னுடைய மனைவியின் முதல் திருமணத்தில் அவருக்குப் பிறந்த ஆருணியையும் தன்னுடைய சொந்த குழந்தையாகவே கருதுகிறார். ஆக மொத்தம் 3 குழந்தைகள்.

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்

பல சர்ச்சைகளில் சிக்கி பின்னர் இந்திய அணியில் விளையாட முடியாமலே போன, கேரளாவைச் சேர்ந்தவர் தான் ஸ்ரீசாந்த். 2015 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி இவருக்கு ஒரு பெண் குழந்தை ஏஞ்சல் மாதிரி வந்து பிறந்தாள். அவள் பெயர் ஸ்ரீஷன்விகா. அதையடுத்து ஒரு வருடத்திலேயே நவம்பர் 22, 2016 இல் மும்பையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் சூர்யஸ்ரீ ஸ்ரீசாந்த்.

MOST READ: உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்னு சொன்னாலே எல்லோருக்கும் ஒரு குஷி இருக்கும். இவர் ஸ்பின் பௌலராக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் ரொம்ப வேகம் தான். அவர் பாலிவுட் பியூட்டியான கீதா பஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஜூலை 27 ஒரு பெண் குழந்தை லண்டனில் பிறந்தார். இவர் பெயர் ஹினயா ஹீர் பலஹா. என்ன பேருங்க இது. ஆனா பொண்ணு அம்மா மாதிரியே செம பியூட்டி தான்.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா பிரியங்கா சௌத்ரியை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே 2016 மே 13 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இவருடைய பெயர் கிரேசியா ரெய்னா. தன் குழந்தை மீது கொண்ட அளவுகடந்த அன்பால் அவருடைய பெயரை தன்னுடைய இடது கை ஆர்ம்ஸ் பகுதியில் பச்சை குத்திக் கொண்டார்.

சச்சின்

சச்சின்

சச்சினுக்கும் அஞ்சலிக்குமான காதல் கதை தான் எல்லோருக்கும் தெரியுமே. தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிபவர்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்வது, கிரிக்கெட்டில் சாதிக்க நினைப்பவர்களின் ரோல் மாடல் என தன்னுடைய வாழ்க்கையே அடுத்தவர்களுக்கான ரோல் மாடலாக வாழ்பவர் தான் நம்ம சச்சின். இவருக்கு இரண்டு குழந்தைகள். பெண் குழந்தை ஷாரா, ஆண் குழந்தை அர்ஜூன். என்ன இவங்க ரெண்டு பேரும் இப்ப வளர்ந்த குழந்தைங்க.

1995 இல் திருமணம். முதல் குழந்தை 2007 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை 2009.

MOST READ: இந்த எட்டு விஷயத்த செய்றீங்களா? அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...

சவ்ரவ் கங்குலி

சவ்ரவ் கங்குலி

சவ்ரவ் கங்குலிக்கு ஒரு பெண் குழந்தை. அவருடைய பெயர் ஷனா. இவரும் ரொம்ப வளர்ந்த அழகு குழந்தை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Adorable Babies Pics Of Indian Cricketers

Their fathers are extremely popular on field, so who is it that drives them off field? Yes, their super-adorable kids! While every child is special, we thought of getting for you the extremely adorable kids of our favourite cricket world stars. So, here it goes.
Story first published: Saturday, June 8, 2019, 13:49 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more