For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

9 வருஷமா போதைக்கு அடிமையான டாக்டர்... கடைசியில கல்யாணம் நின்னுபோனது தான் மிச்சம்...

ஒன்பது ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகிவிட்ட மருத்துவரின் வாழ்க்கை என்ன ஆனது என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

|

"என்ன தான் 'கிக்' இருக்கிறது பார்ப்போமே" என்று போதை மருந்துகளை சோதனை முயற்சியாக பயன்படுத்துவதை போன்று ஆபத்தான விஷயம் ஏதுமில்லை. ஒருமுறை என்று ஆரம்பித்து அதற்கு அடிமைப்பட்டு விடுவோர் அநேகர்.

A Doctor Was Addicted To Meth For 9 Long Years

மலேசியாவின் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் சசிதரன் ஐயனை என்ற மருத்துவர், தற்போது அவருக்கு 39 வயது. ஒன்பது ஆண்டுகளாக போதை மருந்துடன் தாம் செய்யும் போராட்டம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் சசிதரன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணியில் களைப்பு

பணியில் களைப்பு

டாக்டர் சசிதரன், நீண்ட நேரம் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய நிலை இருந்தது. தொடர்ந்து இரண்டு நாள்கள் (48 மணி நேரம்) தொடர்பணியில் இருக்கும்போது போதிய ஓய்வில்லாததால் அதிக களைப்பாக உணர்ந்தார். களைப்பை மறக்க, உடலுக்கு உற்சாகமூட்ட ஏதாவது வழி கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார்.

MOST READ: இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு நட்பில் விரிசல் விழப்போகிறதாம்... கவனமா இருங்கள்...

மெட்டாம்ஃபேட்டமின்

மெட்டாம்ஃபேட்டமின்

தொடர்ந்து பணியாற்றும்போது உற்சாகம் கிடைப்பதற்காக மெட்டாம்ஃபேட்டமின் என்ற மருந்து அவருக்கு அறிமுகம் ஆனது. களைப்பை மறந்து நீண்டநேரம் பணி செய்வதற்கான ஊக்கம் சசிதரனுக்குக் கிடைத்தது. தாம் மருத்துவர் என்பதால் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொண்டு கட்டுப்பாடாக இருந்துவிடலாம் என்று சசிதரன் நம்பினார். ஆனால், அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது.

சிக்கிக் கொண்ட மருத்துவர்

சிக்கிக் கொண்ட மருத்துவர்

மெட்டாம்ஃபேட்டமினுக்கு தான் அடிமையாகிவிட்டோம் என்பதை புரிந்து கொள்ள மருத்துவர் சசிதரன் ஐயனைக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன்பிறகு அவராக போய் போதை மருந்து மறுவாழ்வு மையம் ஒன்றில் பரிசோதனை செய்துகொண்டார்.

சிகிச்சை பெறும்போது, அம்மையத்திற்கு தேவையான மருத்துவ பணிகளையும் அவரே செய்தார். மறுவாழ்வு மையத்தில் இருந்த வரைக்கும் மெட்டாம்ஃபேட்டமினை பயன்படுத்தாமல் இருக்க முடிந்தது. ஆனால், அவர் மறுபடியும் போதை பழக்கத்திற்குள் விழுந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

MOST READ: உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...

நின்றுபோன திருமணம்

நின்றுபோன திருமணம்

களைப்பை மறப்பதற்கு மெட்டாம்ஃபேட்டமின் உதவினாலும், அதை பயன்படுத்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளையும் பாதிப்பையும் மருத்துவர் சசிதரன் விளக்கியுள்ளார். அவரது தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்வில் பெருத்த பாதிப்பை போதை மருந்து ஏற்படுத்திவிட்டது. திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் 20 நாள்களுக்கு முன்பாக அதை நிறுத்திவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

டாக்டர் சசிதரனின் விடுதலைக்கான போராட்டம் வெற்றியடையும் என்று நாமும் நம்புவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Doctor Was Addicted To Meth For 9 Long Years

Trying out drugs to get a kick is no fun as you would not realise when and how you would get addicted to it! Here is the case of a doctor who got introduced to meth as he was keen on being energetic during the long shifts that he was serving at the hospital.
Story first published: Wednesday, July 3, 2019, 14:37 [IST]
Desktop Bottom Promotion