For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் இரண்டு முறை கதவை தட்டும்?... இந்த ஐஞ்சுல உங்க ராசியும் இருக்கா?...

  By Suveki
  |

  கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொட்டும் என்பார்கள். வீட்டுக்கு ஒரே ஒரு கூரை தான் அதை பிய்ச்சிட்டா அவ்வளவு தானே. அப்போ அதிர்ஷ்டம் ரெண்டாவது தடவை கதவை தட்டுமா தட்டாதா? குறிப்பிட்ட ஐந்து வகை ராசி சக்கரங்களுக்கு ரெண்டாவது வாய்ப்பும் சாத்தியம் தான். முதல் வாய்ப்பை தவறவிட்டு, அந்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, அதில் இருந்து தங்களை திருத்தி பாடம் கற்றுக் கொண்டு ரெண்டாவது வாய்ப்புக்காக காத்திருக்கும் ராசிக்காரர்கள். அதேபோல் இந்த 5 வகை ராசிக்காரர்களும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வல்லமை மிக்கவர்கள். அப்படி இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியான ராசிகளையும் அவர்களின் குணாதியங்களையும் வரிசைப்படி இங்கே பார்க்க இருக்கிறோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  1. கும்பம் (Aquarius: Jan 21-Feb 18)

  1. கும்பம் (Aquarius: Jan 21-Feb 18)

  கும்ப ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சகலகலா வல்லவர்கள் ஆனால் சில விஷயங்களில் சறுக்கலை சந்திப்பவர்கள். அது அவர்களின் தவறல்ல ராசியின் நட்சத்திர பலாபலன்களை பொறுத்ததே. கிரக நிலைகள் எப்படியோ ஆனால் கும்ப ராசிக்காரர்கள் வேற்று கிரகவாசிகள் போல யதார்த்த சூழலை விட்டு விலகியே யோசித்து செயல்பட நினைப்பார்கள். ஆனால் வாழ்வில் தவறவிட்ட வாய்ப்பை மீண்டும் பெற முற்றிலும் தகுதியானவர்கள்.

  2.கன்னி (Virgo: Aug 24-Sept 23)

  2.கன்னி (Virgo: Aug 24-Sept 23)

  கன்னி ராசிக்காரர்கள் சில குறைகளை கொண்டிருந்தாலும் பலவீனமானவர்கள் அல்ல. எவரையும் கடுமையாக விமர்சிக்கும் குணமுடையவர்கள் என்றாலும் கொடூரமான குணம் கொண்டவர்கள் இல்லை. உதட்டளவில் சுடுசொற்களை உதிர்ப்பவர்களாக தோன்றினாலும் உள்ளத்தளவில் எந்த தீய உள்நோக்கமும் இல்லாதவர்கள் தான். இவைகள் தான் கன்னி ராசிக்காரர்களின் இயல்பான குணநலன்கள். ஆனால் தவறு செய்தால் அதை தைரியமாக ஒப்புக்கொள்ளும் இவர்களும் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை வெல்ல தகுதி உடையவர்களே!

  3. மகரம் (Capricorn: Dec 23- Jan 20)

  3. மகரம் (Capricorn: Dec 23- Jan 20)

  மகர ராசிக்காரர்கள் பொறுமையின்றி யாரையாவது மனதளவில் காயப்படுத்தினாலும் அதற்கு அடிப்படை காரண காரியங்கள் கண்டிப்பாக இருக்கும். வாழ்வின் இலக்கை நோக்கி பொறுப்பாக பயணிக்க கூடியவர்கள். ஆனாலும் சில விஷயங்களின் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பிடிவாதம் மிக்கவர்கள். இவர்களை எளிதாக கணித்துவிட முடியாது. ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் தான். அதனால் தான் மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு இனிதே அமையும்.

  4. துலாம் (Libra: Sept 24-Oct 23)

  4. துலாம் (Libra: Sept 24-Oct 23)

  துலாம் ராசிக்காரர்கள் தவறே செய்தாலும் தங்களது முக வசீகரத்தால் தண்டனையில் இருந்து தப்பிவிடும் பலே கில்லாடிகள் தான். ஆனால் தானும் மகிழ்வோடு இருந்து தங்களை சுற்றி இருப்போரை எப்போதும் மகிழ்வோடு வைத்துக் கொள்ள விரும்புபவர்கள். தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்கிற கொள்கை இவர்களுக்கே பொருந்தும். அதனால் தாராள மனசுடன் இவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கலாம். அதற்கு துலாம் ராசிக்காரர்கள் தகுதியானவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை.

  5. மேஷம் (Aries: March 21-April 19)

  5. மேஷம் (Aries: March 21-April 19)

  மேஷ ராசிக்காரர்களின் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மையை கண்டு பலரும் அவர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்புவர். அடம் பிடிப்பதோடு இவர்களை விளையாட்டில் கூட யாரும் வெல்வதை விரும்பி ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள். தோற்கும் சூழ்நிலை தோன்றும் போதே ஆட்டத்தை கலைத்து விடும் சமார்த்தியசாலிகள்.

  பொறுமையற்றவர்களாக தோன்றினாலும் இவர்கள் நல்ல நட்புக்கும் பொருந்துவார்கள் தீரா பகைக்கும் தயாராகவே இருப்பார்கள்.அவசர கதியில் செயல்படும் போது தவறுகள் இழைத்தாலும் மேஷ ராசிக்காரர்களை இரண்டாவது வாய்ப்பை பெற தகுதி அற்றவர்கள் என்று முற்றிலுமாக நிராகரித்து விடவும் முடியாது.

  மேற்கண்ட 5 வகை ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தாலும் தங்கள் ராசிக்கு இதில் இடமில்லையே என்கிற ஆதங்கம் தேவையில்லை. அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்ட கதவுகள் திறந்தே இருக்கும். அதை அடுத்தடுத்த கட்டுரைகளில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை மட்டும் பதிவிட மறவாதீர்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Zodiac Signs That Totally Deserve A Second Chance

  Being hurt in love is something that makes us tough individuals. But when a person asks for a second chance
  Story first published: Saturday, April 21, 2018, 16:15 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more