Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை... பெருமாளின் அருள்பெற எந்தெந்த ராசி என்னென்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நம்மை விட்டு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.

மேஷம்
உத்தியோகம் தொடர்புடைய சில முக்கிய முவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய முற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். வாகனப் பயணங்கள் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்
புதிய நபர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்புகள் கூடும். சகோதர வகைகளில் இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மிதுனம்
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். புதிய ஈடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல்திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக மனதுக்குள் நினைத்து வைத்திருந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த உறவுகள் மேம்படும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையுமு் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.

கடகம்
நிர்வாகத்தில் உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்குள் மூலமாக புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு அதன்மூலம் லாபமும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் காலதாமதமாகக் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களைக் கணடு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் உங்களுடைய மதிப்புகள் கூடும். வாகனங்களில் உண்டாகும் பழுதுகளைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் சில அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். சுய தொழில் சம்பந்தமாக முயற்சிகள் மேலோங்கிக் காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மனதில் இருநு்த கவலைகள் குறைந்து மகிழ்ச்சியாகக் காணப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரஙகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணி நிமித்தமான பயணங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவுகளினால் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நினைத்த செயல்களை செய்து முடிப்பதில் கொஞ்சம் இழுபறியான சூழல் இருக்கும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போதும் கொஞ்சம் நிதானம் வேண்டும். எதிர் பாலினத்தவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பழைய பிரச்னைகளால் மன வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

தனுசு
நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். வெளியூா் வேலை முயற்சிகளினால் நல்ல செய்திகள் உண்டாகும். இதுவரையில் இழுபறியில் இருந்து வந்த பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்
நண்பர்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொது சபைகளில் ஆதரவான சூழல்கள் உண்டாகும். மனதில் புதிய தெம்புடன் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த செயல்களினால் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியான சூழல் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்த்தல் நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் கால தாமதங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டில் பிள்ளைகளுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுங்கள். செய்கின்ற தொழிலில் பல தடைகளைத் தாண்டி, நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் சாதகமான சூழல்கள் உண்டாகும். விரும்பிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
