Latest Updates
-
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த ராசிக்காரருக்கு இன்று பணப்பிரச்சினை வருமாம்... அதனால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய நெருக்கமான உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அதற்கான சின்ன சின்ன விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். தொழிலில் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் சின்ன சின்ன கருத்து முரண்பாடுகள் வந்து போகும். உடல் ஆரோக்கியம் தேறி வரும். உடன் பிறந்த சகோதரர்களால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண ரெயின்போ நிறங்களும் இருக்கும்.

ரிஷபம்
தேவையில்லாத வீண் செலவுகள் வந்து போகும். பொருளுாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. தொழில் நுணுக்கங்களைப் பயன்படுத்தினால் சாதகமான பலன்களைப் பெறலாம். உங்களுடைய பண தேவை மற்றும் வீட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய நீண் நாள் ஆசை ஒன்று உங்களுக்குக் நிறைவேறப் போகிறது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவர்களுடைய அறிமுகத்தால் உங்களுக்கு தொழில் மாற்றங்களும் லாபமும் உண்டாகும். வர்த்தகம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு சின்ன சின்ன தடைகள் ஏற்படும். மனதுக்கு நெருக்கமான ஆட்களிடம் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வையுங்கள். எதிர்மறை எண்ணங்களால் உடல் மற்றும் மனம் சோர்வுடன் காணப்படுவீர்கள். வேலையும் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

கடகம்
தேவையில்லாத மன எண்ண ஓட்டங்களால் கொஞ்சம் வேலையிலும் குழப்பம் அதிகரிக்கும். வெளியூா பயணங்களினால் கொஞ்சம் அலைச்சலும் தாமதமும் உண்டாகும். முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்கின்ற பொழுது, மற்றவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வீட்டி்ல உள்ளவர்களிடமும் குழந்தைகளிடமும் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
தேவையில்லாத செலவுகளைக் குறைக்கவில்லை என்றால் பண நெருக்கடியில் மாட்டிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. நீண்ட தூரப் பயணங்களினால் தொழில் முன்னேற்றத்துக்கான திட்டங்களை வகுப்பீர்கள். அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய கருத்து மதிப்பாகப் பார்க்கப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
கணினித் துறையில் பணியாற்றுகிறவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வீண் அலைச்சல்களை சந்திப்பீர்கள். நெருக்கமான நண்பர்களுக்கு உதவும் சூழல் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். தொழிலில் எந்த விதமான புதிய முயற்சியையும் சோதித்துப் பார்க்காதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
அரசாங்கப் பணிகளில் மந்த நிலை காணப்படும். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குப் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். தொழிலில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளுடைய ஆதரவினால் தடங்கலாகிப் போன எல்லா வேலைகளும் சிறப்பாக முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்து கொண்டிருந்த பழக்கங்கள் மாறி, தடுமாற்றங்கள் நீங்கி தெளிவாக வாழ்க்கையைத் தொடர்வீர்கள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகமாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளினால் மன திருப்தி ஏற்படும். தொழிலில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்றபடி லாபங்களும் அதிகரிக்கும். வேலையிடத்தில் எந்த பதட்டமும் இல்லாமல் கொஞசம் நிதானப் போக்கைக் கடைபிடியுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
தொழிலில் தெளிவான சிந்தனைகளும் பெரியோர்களுடைய வழிகாட்டுதல்களும் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகள், சுற்றுலாக்கள் செல்வீர்கள். வீடு மற்றும் மனை சம்பந்தமான ஆவணங்களைக் கையாளும் போது கூடுதல் கவனமாக இருங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சிறப்பாகச் செயல்படுத்தி, வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகளை மறந்து சமாதானமாகச் செல்வது நல்லது. தாயின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேலையிடத்தில் உடன் பணிபுரிகின்ற ஊழியர்களிடம் கொஞ்சம் கனிவுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். உறவினர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. கணினி சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிகின்றவர்களுக்கு உயர்வும் புகழும் உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். பதவி உயர்வுக்கான முயற்சிகள் சிறந்த நன்மைகளைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலமும் சுறுசுறுப்பான செயல்களாலும் மற்றவர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களினால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிச் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுடைய செல்வாக்கும் பெருமையும் அதிகரிக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











