Latest Updates
-
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..
நீண்ட நாள் கனவு ஒன்னு இன்னைக்கு இந்த ராசிக்கு நிறைவேறப் போகுது... ஷாக்க சந்திக்க ரெடியா இருங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் உங்களுக்கு அதிகரிக்கும். வாாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். ஞாபக மறதி ஏற்படும். அதனால் செய்கின்ற பணிகளில் காலதாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். திட்டமிட்ட பிணகளைச் சிறிது அலைச்சலுக்குப் பின் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்கள் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் நீங்கள் நினைத்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். பிரபலங்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதுக்குள் நினைத்த எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பெரும் லாபம் அடைவீர்கள். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் பிரிந்து சென்றவர்கள் திரும்ப வருவார்கள். செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்புகளை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
பெற்றோர்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் மனம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகளும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நீங்கள் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்குப் புதிய மாற்றங்களைக் கொடுக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்கள் கைக்கு வந்து சேரும். மனதுக்குள் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும். வியாபாரங்களில் வெளிவாட்டாரத் தொடர்புகள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி
வேலை நிமித்தமான உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். அப்படியே கொடுத்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உங்களுடைய பிரார்த்தனைகளை குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரங்களில் உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமான சில நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டம தினம் என்பதால் தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளில் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டும். வீட்டில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். வியாபாரங்கள் தொடர்பான பயணங்களின் மூலமாக அலைச்சலும் அனுகூலங்களும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் பிங்க் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த விலையுயர்ந்த பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். நல்ல காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் எதிர்பார்க்காத தனவரவு உங்களுக்கு உண்டாகும். வீட்டில் உங்களுடைய பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வழக்கில் நீங்கள் எதிர்பாராத தீர்ப்பு உங்களுக்கு வந்து சேரும். வாகனச் சேர்க்கை உண்டாகும். வியாபாரங்களில் அனுபவம் மிக்க வேலையாட்களின் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்
மனதுக்கு நெருக்கமானவர்களுடைய சந்திப்பு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பெற்றோர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நன்மை உண்டாகும். வியாபாரங்களில் உங்களுடைய அதிரடியான செயல்களின் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் திருப்தி அடைவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
உடன் பிறந்தவர்களுடைய செயல்கள் மூலம் ஒற்றுமை உண்டாகும். வீடு மற்றும் வாகனத்தை மனதுக்குப் பிடித்தபடி மாற்றி அமைப்பீர்கள். வியாாரங்களின் மூலம் உங்களுடைய நிலுவையில் இருந்த பொருள்களின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் திட்டமிட்டு உங்களுடைய சவாலான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த மறைமுகப் போட்டிகள் குறைய ஆரம்பிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டில் பிள்ளைகளுடைய மதிப்பு உங்களுக்கு அதிகரிக்கும். உடன பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் உங்களுக்கு ஆதரவானச் சூழல்கள் உண்டாகும். உங்களுடைய அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். உங்களுடைய உடல் சோர்வு நீங்கி, மனதும் உடலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி உண்டாகும். காலதாமதம் ஆகிக்கொண்டே சென்ற வேலைகள் விரைவாக முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











