For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு எல்லா வகையான அதிர்ஷ்டத்தையும் பெறப்போவது இந்த ஒரே ராசிக்காரர் தானாம்... உங்க ராசி என்ன?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

|

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

horoscope

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்களும் முயற்சிகளும் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சின் மூலம் உங்களுடைய அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தின் மூலம் உங்களுடைய எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோக நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வர்த்தகம் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் தக்க ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

MOST READ: உங்கள் பாதங்களை வைத்தே உங்க உடம்புல உள்ள 10 வகை நோயை கண்டுபிடிச்சிடலாம்... எப்படினு பாருங்க...

ரிஷபம்

ரிஷபம்

தொழிலில் இருந்த எதிர்ப்புகளைக் களைந்து திட்டமிட்டபடி செயல்பட்டு எல்லோருடைய பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வீடு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் உங்களுக்குச் சிறப்பாக அமையும். கலை ரசிகரான உங்களுக்கு அழகான கலைப்பொருள்கள் பரிசாகக் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்கு இதமளிக்கும் புதுவிதமான பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சினைகளை நீங்கி, சுபிட்சம் உண்டாகும். சிக்கனமாகச் செலவு செய்து சேமிப்பை அதிகரிக்கச் செய்வீர்கள். உங்களுடைய எதிர்பாலின மக்களின் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். உங்களுடைய அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் கொஞ்சம் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

மனதுக்குள் நினைத்து வைத்திருந்த நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களுடைய கைக்கு வந்து சேரும். உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். வழக்குகளில் உங்களுக்குக் கிடைக்கும் சாதகமான தீர்ப்பு மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். வியாபாரத்தின் மூலம் புதிய யுக்திகளைக் கையாண்டு அதில் வெற்றியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

எவ்வளவு கடினமான செயல்களையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்களைச் செய்து அதில் லாபமும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்கு படிப்படியாக அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

இன்று உங்களுடைய சந்திராஷ்டம தினம் என்பதனால் நீங்கள் செய்கின்ற பணிகளில் பதட்டம் உண்டாகும். உங்களுடைய அதிகமான பணிச்சுமையால் மற்றவர்களின் மீது கோபம் உண்டாகும். பிறகு அதில் சமாதானமும் ஏற்படும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது மிக அவசியம். மற்றவர்களுடைய பேச்சில் உங்களுடைய உண்மையை அறிந்து அதற்குத் தகுந்தபடி செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

MOST READ: இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...

துலாம்

துலாம்

எந்த காரியமாக இருந்தாலும் அதில் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் நட்பு வட்டம் பெரிதாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பணியிடத்தில் இழந்த உரிமைகளை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் செய்கின்ற காரியங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் தேவையில்லாத அவப் பெயர்களைத் தவிர்த்துவிட முடியும். எந்த காரியமாக இருந்தாலும் அதை சிந்தித்து செயல்படுவது கொஞ்சம் மேன்மையைத் தரும். முக்கிய உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் வீணான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் மனதுக்குள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

நீங்கள் திட்டமிட்டபடி காரியங்களை விடாப்படியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். மற்றவர்குளுடைய செயல்களின் குறையைச் சுட்டிக் காட்டுவதில் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வாகனப் பயணங்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகாம். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். பெரிய மகான்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடைய ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பெரியோர்களுடைய வழிகாட்டுதல் உங்களுக்குக் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்குச் சதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களுக்கு முழு கடமை உணர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள். புதிதாக வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

இதற்கான இருந்ததைக் காட்டிலும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குத் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியிடங்களில் உங்களுக்கான மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். ஆன்மீக புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரங்களில் சில நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

MOST READ: நாய்க்கறி சர்ச்சை: ஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்? எப்படி கண்டுபிடிப்பது?

மீனம்

மீனம்

புதிதாக தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயுற்சிகளினால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்கள் மீது இருக்கின்ற மற்றவர்களுடைய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் உங்களுடைய புதிய நபர்களின் அறிமுகங்கள் உங்களுக்கு நல்ல மாற்றத்தை உருவாக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடககு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

your daily horoscope on november 23 rd 2018

push beyond your limits today. you will find that you can acheive a great deal more than your thought.
Desktop Bottom Promotion