Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இந்த ராசிக்காரருக்கு இன்று வாகன விபத்து நிகழலாம்... கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
எதுவாக இருந்தாலும் அதில் மிகவும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெற்று மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கிற பொழுது, தேவையான ஆவணங்களை சரியாக எடுத்துச் செல்லுங்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளில் ஈடுபடுகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
தொழில் சம்பந்தமான பயணங்களால் உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் பதவி வகிக்கின்றவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். அதேபோல் சுயதொழில் செய்கின்றவர்களாக இருந்தால் அதில் பல புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் பெறுவீர்கள். மனதுக்குள் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
பெற்றோர்களின் வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக சில நன்மைகளைச் செய்வீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். அரசாங்கத்தின் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும். நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்வதின் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். தேவையில்லாத வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய சோம்பேறித்தனத்தால் வீண் பழிக்கு ஆளாக நுரிடலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
தேவையில்லாத வீண் அலைச்சல்களும் அதனால் உடல் சோர்வும் ஏற்படும். சுய தொழில் புரிகின்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் மேலோங்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி
வீட்டுக்கு உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் பங்குதாரர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகளில் ஈடுபடுவீர்கள். பிரபலமானவர்களுடைய நட்பும் நெருக்கமும் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலக ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அவர்களின் அறிமுகத்தால் நினைத்த லாபத்தை அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உருவாகும். பெரிய மகான்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தேவையற்ற வீண் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய உயர் பதவிக்கான முயற்சிகள் சாதகமானதாக அமையும். உங்களுடைய புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். உங்களுடைய தொழில் பங்குதாரர்களுடைய ஆதரவினால் சில சுப விரயச் செலவுகள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
வாகனப் பயணங்களின் மூலம் கூடுதல் லாபம் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வேறுபாடுகள் உண்டாகும். வணிகம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு செய்யும் முதலீடுகளுக்கு ஏற்ப நன்மைகள் உண்டாகும். வாகனங்களைப் பழுது பார்க்க சின்ன சின்ன செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பழைய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். மனதில் உள்ள கவலைகள் குறைந்து மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு நம்பிக்கையையும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். பணிபுரிகின்ற இடங்களில் சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

கும்பம்
பரம்பரை சொத்துக்களின் மூலம் வீண் விரயச் செலவுகள் ஏற்படும். உங்களுடைய விவாதங்களினால் நினைத்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய திறமையான பேச்சுக்களின் மூலமாக வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதியயுக்திகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வீட்டில் குழந்தைகளின் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாகச் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மீனம்
அரசு அனுகூலத்தின் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவுறும்இ வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலிலும் நீ்ங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் சிறப்பாக முடிவடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications