Latest Updates
-
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம்
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலேயே லாபமும் பணவரவும் கொட்டுமாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய கிரக நிலைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதற்கு ஏற்றபடி அன்றைய தினத்தைத் திட்டமிட்டாலே போதும் இது சிறப்பான நாளாக அமையும்.

மேஷம்
பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு கொஞ்சம் மேன்மையான சூழல் உருவாகும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து வந்த தடைகள் நீங்க ஆரம்பிக்கும். எதுவாக இருந்தாலும் அதில் கொஞ்சம் விடாப்பிடியாக செயல்பட்டு, அந்த வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்
அருள் தரும் ஆன்மீக வேள்விகளில் கலந்து கொண்டு மனம் ஆறுதல் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சின்ன சின்ன அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். சாஸ்திரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதற்குக் கொஞ்சம் கால தாமதமாகும். பணியில் நிறைய புதிய மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நங்கள் எதிர்பாராமலேயே உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் அமையும். போட்டிகளில் பங்கு பெறுவீர்கள். உடல் சோர்வும் மன அழுத்தமும் நிவர்த்தி ஆகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
மனதுக்குள் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களிடம் கருத்துக்களைப் பரிமாறும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உறவினர்களிடமும் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பயணங்களின் மூலம் நினைத்த செயல்கள் நிறைவடைய கொஞ்சம் கால தாமதமாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்
தொழிலில் புதிய நபர்களுடைய முதலீடுகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தொழில் மற்றும் பிற இடங்களில் நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பொருள் லாபம் உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவினால் உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீர்ந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் உயர்வான இடம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சில சோதனைகள் வரும். கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் இருந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் குறையும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்குள் இதுவரை இருந்து வந்த கவலைகள் தீர்ந்து போகும். உங்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்களுடன் இணைந்து விருந்து மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் எதிர்பாராத பொருள் சேர்க்கைகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு, மனை விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். தொழிலில் நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மாணவர்கள் கல்வி பயில்கின்ற விதங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பொது விவாதங்களில் பெரும் புகழ் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய உடன் பிறப்புகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகிறது. குடும்ப உறுப்பினர்களுடைன் சேர்ந்து வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் செய்யத் திட்டமிட்டிருந்த பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கல்வித்துறை சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்
வெளியூர் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்களில் திட்டமிட்ட லாபம் உண்டாகும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உங்களுடைய தொழிலுக்குக் கிடைக்கும். சுய தொழில் சம்பந்தமாக நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
உடலில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். மனதுக்குள் தெளிவான சிந்தனைகள் தோன்றும் நாள். உங்களுடைய அறிவுத் திறன் மேம்பட்டு இருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். செய்கின்ற செயலில் கொஞ்சம் திருப்தியான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய உறவினர்களுக்கு இடையில் உங்களுடைய மதிப்பு உயரும். நினைவாற்றல் அதிகரிக்கும். செய்கின்ற செயல்களால் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். போட்டிகளைச் சமாளித்து அதில் வெற்றியும் காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாகஎண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications