Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
கார்த்திகை வளர்பிறை ஆரம்பிச்சிடுச்சு... யாருக்கு நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது? தெரிஞ்சிக்கோங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் அது சம்பந்தமாக நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரும். மனதுக்கு நெருக்கமான ஆட்களிடம் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். சந்திராஷ்டமம் இன்னும் முடியாததால் விலை அதிகமான பொருள்களை கையாள்வதை தவிர்த்துவிடுவது நல்லது. தொழிலில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
யாரிடமும் தேவையில்லாமல் வாயைக் கொடுக்காதீர்கள். நீங்கள் இயல்பாகப் பேசுவது கூட சண்டையில் தான் போய் முடியும். வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை நிறைவேற்றப் பாருங்கள். மனதுக்கு விருப்பமானவர்களைப் பற்றி நினைத்து தேவையில்லாமல் கவலை கொள்வீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகமாகிக் கொண்டே போகும். வேலை செய்யும் இடத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தபடி கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய உயர் அதிகாரியிடம் இணக்கமாகவும் அதேசமயம் தொழில் விவேகத்துடனும் நடந்து கொள்ளுங்கள். நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் வந்து சேரும். உறவினர்களின் மூலம் சந்தோஷமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.வியாபாரத்தில் நீங்கள் செய்கின்ற சின்ன சின்ன மாற்றங்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்ல புரிதல் உண்டாகும். வெளி நபர்களிடம் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளியூரில் இருக்கின்ற சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். ஆன்மீகத் தலங்களுக்கு செல்வதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளின் மூலம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடன் பணிபுரியும் ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுக்கு மனதுக்குப் பிடித்த, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள். உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய பெற்றோர்களுடைய முழு ஆதரவும் ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் உங்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் தொழில் சம்பந்தமான நுணுக்கங்களையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
மனதுக்குள் நிறைத்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையப் பெறுவீர்கள். உங்களுடைய வாகனங்களில் இருக்கின்ற சின்னச் சின்ன பழுதுகளைச் சரிசெய்வீர்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான எல்லா வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

துலாம்
நீங்கள் திட்டமிட்ட காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் முன்னேற்றம் அதிகரிக்கும். இதுவரைக்கும் வியாபாரங்களில் இருந்து வந்த மறைமுகமான போட்டிகளைச் சமாளித்து முடிப்பீர்கள். உங்களுடைய உத்தியோகத்தில் முழுமையான திருப்தியான சூழல்கள் உண்டாகும். சின்ன சின்ன பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய உடன் பிறந்த சகோதரிகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிதாக உங்களுக்கு ஒரு நட்பு வட்டம் உருவாகும். வேளாண்மை சார்ந்த தொழில் செய்கின்றவர்களுக்கு நல்ல ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய வியாபாரங்களில் சில திடீர் திட்டங்களைத் தீட்டி, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரச் சிக்கல்கள் நீங்கும். அதற்கான முழு முயற்சிகளையும் எடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய மனதுக்குள் இருந்த சின்ன சின்ன குழப்பங்கள் விலகி, வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியும் உண்டாகும். உங்களுடைய குடும்பத்தில் நல்ல கலகலப்பாக இருக்கும். நீங்கள் எதிர்ப்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கான எல்லா உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து, சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையிடத்தில் மேலதிகாரிகளுடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதுக்குள் புதுவித இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் உங்களுடைய கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன வாக்குவாதங்கள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். தேவையில்லாமல் யாருடைய விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களுடைய கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருங்கள். வியாபாரத்திலும் உங்களுக்குத் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உங்களுடைய முன்கோபத்தை முதலில் தவிர்த்துக் கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
தொழில், வீடு என எதுவாக இருந்தாலும் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் யாவும் உங்களை வெற்றிப் பாதையில் கூட்டிச் செல்லும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களின் உதவிகளும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுக்கான நிறைய புதிய வாய்ப்புகள் அமையும். உங்களுடைய பழைய நினைவுகள் அவ்வப்போது தோன்ிற மறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
நீங்கள் எதுவாக இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல்கள் அதிகரிக்கும். உங்களுக்கு உடன் பிறந்தவர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் உங்களுக்கு உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் உங்களின் வாடிக்கையாளர்களால் பெரும் லாபம் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுடைய நட்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











