For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்... கவனமாக இருக்க வேண்டிய ராசி எது?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

|

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

horoscope

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்குளுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கான சில செலவுகளைச் செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள் முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுடைய அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பெரிதும் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

MOST READ: உங்கள் பிறந்த தேதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படிங்க...

ரிஷபம்

ரிஷபம்

தொழில் முன்னேற்றங்கள் சார்ந்த புதிய சிந்தனைகள் உங்களுக்கு வந்து போகும். வீடு மற்றும் வாகங்களுக்கான பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டி வரும். அரசு அதிகாரிகளுடைய உதவியினால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் திட்டமிட்ட காரியங்க்ள அனைத்தையும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

நீங்கள் எதிர்பாராத செயல்களின் மூலம் மிக குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் உருவாகும். கடன் தொடர்புடைய பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்களுடைய பிரியமானவர்களுக்கான சிலவற்றை விட்டுக் கொடுப்பதன் வாயிலாக உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் அமையப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

MOST READ: மூக்கடைச்சு இப்படி நமநமன்னு இருக்கா? இதுக்கு எதுக்கு மாத்திரை... இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களுடைய புதிய நபர்களுடைய நட்பினால் பெரும் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய செலவுகளைக் குறைப்பதற்கான திட்டமிடுவீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் அவ்வப்போது மன வருத்தங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் உங்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

வியாபாரத்தில் வேலை செய்பவர்களிடம் உங்களுடைய மதிப்பு கூடிக்கொண்டே போகும். உத்தியோகத்தில் இழந்த உரிமைகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்ளுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய நபர்களுடன் நட்பு கொள்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ததை விட பெரும் லாபம் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

MOST READ: அடிக்கடி உச்சா வருதா? அப்ப இதுதான் காரணம்... பூண்டை பச்சையா சாப்பிடுங்க சரியாகிடும்...

துலாம்

துலாம்

உங்களுடைய எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்பட ஆரம்பிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்குள் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் உங்களுக்குப் பலவிதமான சூழல்கள் உண்டாகும். புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக நெருக்கடிகளைக் கொஞ்சம் சமாளிப்பீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே விவாதங்கள் வந்து போகும். ஆனால் பிரச்சினை அதனால் எதுவும் வராது. பெற்றோர்களுடைய உடல்நிறை தேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய வியாபாரங்களில் பழைய வாடிக்கையாளர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்களுடைய கைகளுக்கு வந்து சேரும். இதுவரையிலும் இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் எதிலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் சிந்தித்து முடிவெடுங்கள். உங்களுடைய முன்கோபத்தைக் குறைப்பது மிக நல்லது. மனதுக்குள் அவ்வப்போது ஏதாவது கவலைகள் வந்து போகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகப் பெறுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் நினைத்தபடி வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வியாபாரத்திற்குத் தேவையான பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். கொஞ்சம் கலகலப்பான சூழலால் நிறைய மகிழ்வான தருணங்கள் வந்து போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த பணிகளை மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களுககு இருந்து வந்த கவலைகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கால தாமதமாக உண்டாகும். உங்களுடைய எதிர்காலம், முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

MOST READ: வீட்ல எப்ப பார்த்தாலும் சண்டையா?... இந்த ராசிக்காரங்கதான் கொஞ்சம் அனுசரிச்சு போங்களேன்...

மீனம்

மீனம்

உங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி பிறக்க ஆரம்பிக்கும். நீங்கள் திட்டமிட்ட முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறைய ஆரம்பிக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செ்வதன் மூலமாக மனம் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் குழந்தைகளின் மீதான அன்பும் பாசமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

your daily horoscope on december 3 rd 2018

push beyond your limits today. you will find that you can acheive a great deal more than your thought.
Story first published: Saturday, December 1, 2018, 17:46 [IST]
Desktop Bottom Promotion