Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
போற இடமெல்லாம் இந்த ராசிக்காரருக்கு மதிப்பும் மரியாதையும் ஜோராக இருக்குமாம்... எந்த ராசி அது
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய வீட்டில் சுப செய்திகள் நடக்கும். அதனால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட பணிகளை மிகவும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி லாபம் உண்டாகும். வேலையிடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சினைகள் தீர்ந்து சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய உடல் ஆரோக்கியம் நன்கு மேம்பட ஆரம்பிக்கும். மனதிற்குள் ஒரு தெளிவு பிறக்கும். உங்களுடைய அறிவுத் திறன் மேம்பட ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயலில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீர்ந்து போகும். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய பிள்ளைகளின் மூலமாக பெருமையை உணர்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, பெரும் மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் தங்களுடைய பணிகளில் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள். சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால் ஒருவுிதமான பதட்டமான சூழல் உங்களுக்கு இருக்கும். அதனால் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதற்கான காரியங்கள் கொஞ்சம் காலதாமதமாகும். சாஸ்திரங்கள் பயில்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
மனதுக்குள் ஒருவிதமான தடுமாற்றங்கள் உங்களுக்கு உண்டாகலாம். நண்பர்களிடம் ஏதேனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதென்றால் கொஞ்சம் கவனமாக இருங்கள். ரகசியங்கள சொல்லாமல் இருப்பது நல்லது. உறவினர்களிடமும் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உங்களுஐடய பயணங்களால் நீங்கள் நினைத்த செயல்களால் உங்களுக்குக் கால தாமதம் ஏற்படும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய நிலுவையில் இருந்த வழக்குகள் நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளைத் தரும். பதவி உயர்வை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். புாட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பாராட்டுகளும் பெறுவர்கள். உடல் சுார்வும் மன அழுத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
பொது நலம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் உள்ள கவலைகள் கொஞ்சம் கொஞ்சமான குறையும். வெளிநாட்டுப் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். அருளை வாரி வழங்கும் வேள்விகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உறவினர்களுக்கு இடையே உங்களுடைய மதிப்பும் செல்வாக்கும் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும். உங்களுடைய செயல்பாடுகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். புாட்டிகளைச் சமாளித்து அதில் வெற்றியும் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய விடாப்பிடியான செயல்களின் மூலமாக சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடன் பிறப்புகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூா பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை இனிதே சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்
வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். உயர் கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய வர்த்தகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். நீங்கள் இழந்த பொருளை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய சிந்தனையின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த மனக் கவலைகள் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவியில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் மற்றும் வருமான உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
நீங்கள் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மேலதிகாரிகளால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பொதுக்கூட்டங்களில் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானப் போக்கைக் கடைபிடிக்கவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். உங்களுடைய முடிவுகளில் கொஞ்சம் நிதானம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications