Latest Updates
-
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஓவர் ரொமாண்டிக் மூடுல இருக்கக்கூடிய ராசிகள் யார் யார் தெரியுமா? அது இவங்கதான்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுக்குள் ஒளிந்திருந்த தன்னம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதை எவ்வித தடைகளையும் தாண்டி மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளின் மூலம் உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் தீர ஆரம்பிக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்குச் சாதகமானதாகவே முடியும். வேலைகளில் முக்கிய பிரபலங்களுடைய அறிமுகத்தைப் பெறுவீர்கள். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பெற்றோர்களின் வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு பெரும் ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு தன்னுடன் பணிபுரிந்து வந்தவர்களால் சின்ன சின்ன இன்னல்கள் இருந்திருக்கும். அது உங்களை விட்டு விலகி ஓடும். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதனால் நீங்கள் எதிர்பாராத பண வரவும் லாபமும் ஏற்படும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
நீங்கள் வேலை செய்கின்ற இடத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இறை சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். புதிதாக ஏதேனும் காரியங்களைத் தொடங்குவதாக இருந்தால் நிச்சயம் வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாமல் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டில் உள்ள பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்
பெற்றோரின் உடல்நலத்தில், குறிப்பாக தாயின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நிர்வாகத் துறை சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். வீட்டில் கணவன். மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் பணியாளர்களின் மூலம் உங்களுக்குச் சின்ன சின்ன பிரச்சினைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
மற்றவர்களிடமோ அல்லது புதிய நபர்களிடமோ தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் அதை பொறுமையாகக் கையாளுங்கள். நீங்கள் வேகமாக முடியும் என்று எதிர்பார்த்திருந்த காரியங்கள் முடிவதில் கொஞ்சம் கால தாமதம் ஆகும். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு இருப்பது நல்லது. எந்த வேலையையும் அடுத்தவர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள். வியாபாரங்களில் விற்பனையும் லாபமும் நீங்கள் நினைத்ததைக் காட்டிலும் அதிகரிக்கும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
மனதுக்குள் உற்சாகமும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். புதிதாக ஆடை, ஆபரண்ஙகள் வாங்குகின்ற யோகங்கள் உங்களுக்கு உண்டாகும். வீட்டில் உறவினர்களுடைய வருகையின் மூலம் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிதாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். உங்களுடைய தொழிலில் வியாபாரங்களில் விற்பனையும் லாபமும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். வியாபாரங்களில் உங்களுக்கு சக விற்பனையாளர்களின் மூலம் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். செய்யும் வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அடுத்தவர்களுடைய செயல்பாடுகளில் எதற்காகவும் தலையிடாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களுக்குத் தேவையாக உதவிகளைச் செய்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பரம்பரை சொத்துக்களின் வாயிலாக நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பண வரவு குவியும். அலுவலகங்களில் நீங்கள் வேலை செய்வதற்கான திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
பயணங்களின் வாயிலாக உங்களுக்கு நிறைய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தின் மூலமாக உங்களுக்கு விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உடன் பணிபுரிகின்ற சக வியாபாரிகளின் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். புதிதாக ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
இதுவரையிலும் உங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். உடன் பிற்த சகுாதரர்களால் ஆதாயங்கள் ஏற்படும். வேலை செய்யுமிடத்திலும் சக ஊியஙர்களால் ஏற்பட்டு வந்த மறைமுகத் தொல்லைகள் விலக ஆரம்பிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதை நோக்கி பயணம் செய்வீர்கள். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
பெற்றோர்களின் வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஈடேறும். வீட்டில் அனைவருடனும் சென்று குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்துவீர்கள். நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் எண்ணம் உண்டாகுமு். அதிகாரிகளுடைய ஆலோசனைகள் உங்களுக்குச் சாதகடாக அமையும். நீங்கள் எதிர்பார்க்காத பயண்ஙகளின் 5மூலம் ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











