Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
இந்த ராசிக்காரருக்கு வீட்ல இன்னைக்கு ஒரே கசமுசாதான் போங்க... என்ன உங்க ராசி அதுவா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதில் தேவையற்ற எண்ணங்கள், குழப்பங்கள் உண்டாகும். செய்யும் பணியில் சிலரின் வீண் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். பணி நிமித்தமான அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். ஆனால் அதே பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்ற கொஞ்சம் கால தாமதமாகலாம். தொழிலில் உங்களுக்கான பொருளாதார வரவுகள் தாமதப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முக்கியப் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். ஆசிரியர்களின் பெரும் ஆதரவு மாணவர்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்
தாய்வழி உறவினர்களுக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் சுப செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும். பயணங்களால் பெரும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய
அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய பணியில் உங்களுக்கு திருப்தியான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
நீங்கள் வாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பதில் இழுபறி நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். உங்களுடைய சாமர்த்தியமான வாக்குவாதங்களால் லாபம் உண்டாகும். உங்களுடைய நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களுடைய தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய
அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் ஒருவித தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வீர்கள். உங்களுக்கு நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளுாதார வரவுகள் மேம்படும். விரைவில் முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கூட கொஞசம் கால தாமதமாகும். மனதில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறம்.

தனுசு
வீண் செலவுகளை குறைத்து உங்களுடைய சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். உங்களுடைய புத்திக்கூர்மையால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பிரவுன் நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் பெரும் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு வரும் சுப செய்திகளால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். பொது விவாதங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய எதிர்காலப் பணிகளைத் திட்டமிட்டு அதை சிறப்பாக மேற்கொள்வீர்கள். உங்களுடைய தொழில் தொடர்புடைய செயல்களை செய்து முடிக்க கொஞ்சம் கால தாமதமாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையில் உள்ள கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய தன்னம்பிக்கை மேலோங்கும். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய தொழிலில் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமற்ற நிலை அமையும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். நண்பர்களுக்கு இடையே கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்கவும். உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications