இன்னைக்கு வீட்டை விட்டு வெளியில போகும்போது இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்...

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

உங்களுக்கு இன்று பிரபலமான நபர் ஒருவருடைய நட்பு கிடைக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களிடம் நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவுகள் பெருக ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிக்கனமாக செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு. நீங்கள் மனதுக்கு விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களுக்கு இடையே உண்டான சிறு சிறு பிரச்னைகள் சரியாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

வீட்டில் உள்ள குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைத்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுத்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பல புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்குளின் ஆதரவு பெருகும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அதிக முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

இதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் பிறருடைய வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. வெளியில் எடுத்துச் செல்லும் பொருள்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்கி நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை. வேலை செய்கின்ற இடத்தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

நீங்கள் இதற்கு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும். அடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு மற்றும் மனைகள் வாயிலாக எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சிகள் உண்டாகின்றன. திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். வேலை ஆட்களின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். வெளியூா் பயணங்களினால் தடைபட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உத்தியுாகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்புார்த்த பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

உத்தியோகத்தில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். நண்பர்களின் வாயிலாக, தொழிலில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

பணிபுரிகின்ற இடங்களில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். சுற்றத்தாரிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலமாக ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 31, 2018, 6:00 [IST]
Desktop Bottom Promotion