Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
12 ராசிகளும் இத படிச்சா இன்னைக்கு கொஞ்சம் உஷாரா இருக்கலாம்
இன்று 12 ராசிகளில் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகின்றன என்று இங்கே பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும். அந்த வகையில் இன்று யாருக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
வியாபாரத்தின் மூலம் சில யுக்திகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள" உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவைப் பெறுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீரும். உங்களுக்கு தொழிலிலும் வாழ்ககையிலும் இருந்து வந்த தடைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் திருப்தி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களால் உண்டான சின்ன சின்ன பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவப்பெயர்கள் கூட வரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
புதிய நபர்களுடைய அறிமுகங்க்ள உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆகாய நீலநிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களை கொஞசம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டுடுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தன வரவு ஏற்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உங்களுடைய ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நெருகு்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
உடன் பிறந்த சகோதரருடைய வகைகளில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் சக ஊழியர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
உங்களுக்கு தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். நீங்கள் திட்டமிட்படியே எல்லா காரியங்களையும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு, ஆலோசனைகளைச் சொல்லி, அவர்களை வழிநடத்துவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைப் போடுவீர்கள். அதன்மூலம் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய திறமைக்கு ஏற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். உறவினர்களின் மூலம் பல்வேறு அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்திருந்த இடங்களில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
உறவினர்களின் மூலமாக வீண் அலைச்சல்களும் தேவையில்லாத சங்கடங்களும் ஏற்படும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் எல்லா காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிறருடைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிக்ள உங்கள் கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
உறவினர்களின் வழியில் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவடையும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த, உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். புதிய இலக்குகளை நோக்கிய எண்ணங்கள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
குடும்பப் பொருளாதாரம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடையே செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் உங்களுக்கு அனுகூலங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்குளுக்கு ஆதரவு பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











