Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
இந்த மூனு ராசிக்காரங்களும் இன்னைக்கு ஒரே ஜாலிதான்... மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க...
daily horoscope 23.9.18, 23.9.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
வீட்டில் பிள்ளைகளின் செயல்பாட்டினால் உங்களுக்கு லாபம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய நினைவாற்றல் மேலோங்கத் தொடங்கும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
வியாபாரிகளிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல்கள் உருவாகும். பெரியோர்களுடைய உபதேசங்களால் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
தொழிலில் உங்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெரும்புள்ளிகளிள்அறிமுகம் கிடைக்கும். திருமணத்துக்கான மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் சென்று முடியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அருகில் வசிப்பவர்கள் மூலம் அனுகூலங்களைப் பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீலமும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
உங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும் அதிர்ஷ்ட நாள் இன்றிலிருந்து தான் உங்களுக்குத் துவங்குகிறது. ஆனாலும் நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அதேபோல், வீட்டுக்கு புதிய நீ்ங்கள் எதிர்பாராத சொந்தங்கள் வந்து சேருவார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். ஆணாக இருந்தால் பெண்ணின் மூலமாகவும் பெண்ணாக இருந்தால் ஆணின் மூலமும் ஆதாயங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் உங்களை நீங்களே புத்துணர்வாக வைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5ம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
இதுவரையில் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தடையாக இருந்து வந்த காரியங்கள் வெற்றிகரமான நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம்.இதுவரையிலும் வசூல் ஆகாமல் நிலுவையில் இருந்துவந்த பணம் யாவும் வசூல் ஆகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக நீலநிறமும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
நினைத்த காரியத்தை முடிப்பதற்குள் சிறுசிறு தடங்கல்கள் வந்து போகும். அதற்கான கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உண்டாகும் போட்டிகளையும் சமாளிக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
மனதில் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்து முடியும். தொழில் போட்டியை சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள். வீட்டில் குழந்தைகள் எண்ணம் அறிந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம்அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
இதுவரை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வீட்டில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கத் துணிவீர்கள். மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக இடர் சிவப்பும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வழியில் நடைபெறும் சுப காரியங்களுக்கு விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாதத் திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழலும் லாபமும் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
சாதுர்யமான வாக்குத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் சில எதிர்காலத் திட்டங்களை வகுக்க ஐடியாக்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்னியோன்யம் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
கலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். அரசாங்கத்தின் சார்பில் கிடைக்க வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். ஆனாலும் லாபமே ஏற்படும். வேலை வேலை என்று இருக்காமல் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம்அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











