Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்!
குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்!
இது பயங்கரத்தின் உச்சக்கட்டம் என்று கூறுவது மிகையாகாது. ஸா (Saw) பாகங்களில் காண்பிக்கப்பட்டவை படுபயங்கமானவை என்றாலும் அவை யாவும் சித்திரிக்கப்பட்ட, கிராபிக்ஸ் செய்யப்பட்ட திரைப்பட காட்சிகள் மட்டுமே. ஆனால், இங்கே நடப்பவை நிஜம். முழுக்க, முழுக்க எதுவும் அறியாத நிஜ மனிதர்கள் உள்ளே செல்கிறார்கள். அச்சத்தில் மூழ்கி விழிப்பிதுங்கி போகிறார்கள்.

உலகின் பயங்கரமான வீடு என்று குறிப்பிடப்படும் இந்த வீட்டுக்குள் இதுவரை ஒருவர் கூட 6 மணி நேரம் வரையில் தாக்குப்பிடித்தது இல்லை. பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் விட்டால் போதும்டா சாமி என்று தெறித்து ஓடுகிறார்கள்.
காரணம் கட்டி வைப்பது, அறைந்து அடித்துக் கொடுமை செய்வது, அவர்கள் வாந்தியையே பருக சொல்வது என வலி என்று மட்டுன்றி இங்கே அருவருக்கத்தக்க செயல்களிலும் உட்படுத்தப் படுகிறார்கள்.

சான்டியாகோ!
சான்டியாகோ, கலிபோர்னியாவில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் எல்லாம், அதை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறக்க நினைப்பதாக கூறுகிறார்கள்.
பங்கெடுத்துக் கொண்டவர்களின் தலையயை மொட்டை அடித்தும் உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இது பிக் பாஸ் வீடு போல அல்ல. ஏன் என்றால் இங்கே பங்கெடுத்துக் கொள்ளும் நபர்களுடன் அதே வீட்டில் பெரிய, பெரிய சிலந்திகளும், எலிகளும் தங்கி இருக்கும்.

வீடியோ!
சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் உலகின் பயங்கரமான வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர்களின் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர்கள் அச்சத்தில் உறைந்தும், அங்கே இருக்க முடியாமல் அலறியபடி கத்திக் கூப்பாடு போடுவது போலவும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இரத்தம்!
ஒருவர் தன்னை எப்படியாவது வெளிய விட்டுவிடும்படி அலறுகிறார். மற்றொருவர் இந்த திரில் தாங்கிக் கொள்ளும்படி இல்லை என்று கத்துகிறார். அந்த வீடியோவில் தோன்றி இருந்த நபர்கள் கட்டி வைத்து கொடுமைப்படுத்துவது போலவும். அந்த இடம் முழுக்க இரத்தம் சிதறி இருப்பது போலவும் இருந்தது. இரத்தம் போலியானது மற்றும் அந்த பயங்கரமான வீட்டில் எக்ஸ்ட்ரா எஃபெக்ட்டிற்காக டெக்கரேட் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

8 மணி நேரம்!
இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் நபர்கள் 8 மணி நேரம் அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் உள்ளே செல்கிறார்கள். ஆனால், இதுநாள் வரை ஒருவர் கூட முழுமையாக உள்ள இருந்ததில்லை என்றும். 4 மணி நேரம் தாக்குப்பிடிக்கவே திணறுகிறார்கள் என்றும் செய்திகள் மூலம் அறியப்படுகிறது.

சாரா!
கடந்த 2014ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட சாரா என்ற பெண்மணி ஆறு மணி நேரம் இந்த பயங்கரமான வீட்டில் தங்கி இருந்தார் என்றும். இது தான் இந்த நிகழ்சியில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு நபர் அதிக நேரம் தாக்குப்பிடித்த நேரம் என்றும் அறியப்படுகிறது.
இப்படியான பயங்கரமான நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள முன்பதிவு செய்து 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை!
என்ன தான் இப்படியான ஒரு த்ரில்லான நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள ரசிகர்களுக்கு / மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கலந்துக் கொள்ளவிருக்கும் நபர்களை உரிய பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களால் இந்த திரில்லை தாங்கிக் கொள்ள முடியுமா? அவர்களுக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறு இருக்கிறதா என செக் செய்து தான் அனுப்புகிறார்கள். மேலும், முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாரடைப்பு!
இப்படி பல கண்டிப்பு மற்றும் பல பரிசோதனைகளை தாண்டியும். கடந்த 2008ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியல் பங்கெடுத்துக் கொண்ட நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது ஒரு அச்சமூட்டும் பேய் பங்களா என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர் கூறுகிறார். மேலும், இங்கே அனைத்தும் போலியானவை தான். உண்மையாக இருந்தால் நிச்சயம் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்த அனுமதி கிடைக்காது.
இந்த வீட்டுக்குள் நிறைய புகை மற்றும் கண்ணாடிகள் மூலம் ஏற்படுத்தப்படும் லைவ் எஃபெக்ட் செய்து தான் பங்கெடுத்துக் கொள்ளும் நபர்களை அச்சமூட்டுகிறோம் என நிகழ்ச்சி தயாரிப்பாளர் மெக் கமே கூறுகிறார்.



Click it and Unblock the Notifications