Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
இந்த 5 ராசிகளில் பிறந்த ஏதேனும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி
திருமண வாழ்க்கை மகிழ்ச்சையானதாக மாற்றுவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக இந்த ராசி பெண்களை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது. அப்படிப்பட்ட உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும். திருப்திகரமாகவும் அமைய சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

அனைவரும் ஒரேமாதிரி இருக்கமாட்டார்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். அந்த குணம் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். இந்த குணங்கள்தான் உங்கள் வாழ்க்கை மட்டுமின்றி உங்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடியதாகும். சில ராசிகளில் பிற்ந்தவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் வாழ்க்கையை அழகானதாக மாற்றக்கூடும்.

பெண்களின் ராசிகள்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சையானதாக மாற்றுவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் பெண்களால்தான் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். குறிப்பாக இந்த ராசி பெண்களை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். பொதுவாகவே அனைத்து பெண்களுமே வாழ்க்கையை சிறப்பாக்கக்கூடியவர்கள், அதிலும் அவர்களின் பிறவி குணங்களின் சிறப்புகள் உடன் சேரும்போது அது அவர்களை கூடுதல் சிறப்பானவர்களாக மாற்றும்.

கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப்போவது நிச்சயம். இவர்கள் மென்மையான அதேசமயம் நம்பகத்தன்மை அதிகம் உடையவர்கள். இவர்களை ஆராதிக்க வேண்டியது கணவரின் கடமையாகும். அவர்கள் பலவீனமாக இருக்கும்போது தனக்கு பலமான துணை வேண்டுமென்று விரும்புவார்கள். தன் மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டால் அதற்கு உதவியாய் இருந்தவரை எப்பொழுதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். தன் கணவருக்கும், குடும்பத்திற்கும் இறுதிவரை தன் அன்பையும், ஆறுதலையும் வழங்குவார்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் தங்கள் கணவரின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற விரும்புவார்கள். அவர்களின் தேவை எல்லாம் அவர்களுக்கு துணையாக இருக்கக்கூடிய கணவர்தான். இவர்களின் ஆற்றல் அளப்பரியதாகும். எந்த சூழ்நிலையிலும் இவர் தன் கணவரை நிராகரிக்கமாட்டார், அவர் மட்டுமின்றி அவர் குடும்பத்தையும் சரி, அவர்களின் கடமையையும் சரி அவர்கள் ஒருபோதும் தவிர்க்கமாட்டார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் சோர்வடையமாட்டார்கள். இவர்கள் சுறுசுறுப்பானவர்கள் மட்டுமல்ல உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கையே உங்கள் குடும்பத்தை முன்னேற்ற உதவும்.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் நேர்மையான, நம்பிக்கை மிகுந்தவர்கள் மேலும் தனக்கு தேவையான நேரத்தை சரியாக திட்டமிடக்கூடியவர்கள். அதிக ஆசைகள் உள்ள கணவருக்கு சிம்ம ராசி பெண்கள் மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள், கணவரின் குறிக்கோளை தீர்மானிப்பதிலும் அதை அடைவதற்கும் இவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் சக்திவாய்ந்தவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் தேர்வுகள் மற்றும் விருப்பங்கள் எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும்.

விருச்சிகம்
பாராட்டை விரும்பும் ஆண்களுக்கு விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். அவர்கள் இயற்கையாகவே அதிக ஆர்வம் கொண்டவர்கள், அதனால் உங்கள் வாழ்க்கையை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் அமைதியானவர்களாக இருக்கமாட்டார்கள். இவர்கள் செய்யுமோ ஒவ்வொரு செயலுக்கு பின்னரும் ஒரு உள்நோக்கம் இருக்கும். இவர்களின் வெளிப்படையான குணம் எப்பொழுதும் அவர்களை மற்றவர்களை விரும்ப வைக்கும்.

கன்னி
இவர்கள் கடுமையான வெளித்தோற்றத்தை கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் துணைக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். இவர்கள் சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள், பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் வாழ்க்கையில் அனைத்தையும் நன்றாக இயங்கவைக்க உதவுவார்கள். தங்கள் கணவர் செய்யக்கூடிய அனைத்திலும் இவர்களின் பங்கு இருக்க வேண்டுமென நினைப்பார்கள்.



Click it and Unblock the Notifications
