For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கணவரைக் கொன்று உடலை பன்றிகளுக்கு உணவாக போட்ட கொடூரப் பெண்!

  |

  தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. என்ன தான் இருந்தாலும் அம்மா மாதிரி வருமா குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக தன்னையே வருத்திக்கிற ஒரு ஜீவன் தாய்தான்.... போன்ற வசனங்களை நிறையவே கேள்விப்பட்டிருப்போம்.

  நிச்சயமாக தாயின் அன்பிற்கு நிகராக வேறு எதையும் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தானே செய்வார்கள். இங்கே அப்படிப்பட்ட ஒரு தாயைப் பற்றித்தான் பார்க்கப் போகிறீர்கள். அமெரிக்காவையே நடுங்கச் செய்த ஓர் சீரியல் கில்லர் இந்த தாய்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அறிமுகம் :

  அறிமுகம் :

  பெல்லே குன்னஸ் என்ற பெண்மணி செல்பு என்ற ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய நார்வெய்கன் என்ற கிராமத்தில் பிறக்கிறார். மிகவும் வறுமையான சூழல். அங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்றால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் குடிபெயர்கிறார்கள்.

  அந்த கிராமத்திலிருந்து ஏரளமானோர் அப்படித் தான் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள்.

  Image Courtesy

   புதிய வழி :

  புதிய வழி :

  அங்கே சென்ற பிறகு தான் பெல்லேவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வருகிறது. அதோடு பணம் மீது தீரா ஆசை உருவாகிறது. எப்படியாவது பணத்தை அடைய வேண்டும், பணக்காரியாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவர் கண்முன்னால் தெரிந்தது தான் இன்ஸூரன்ஸ் பணம்!

  இன்ஸூரன்ஸ் பணத்திற்காக சின்ன தவறுகளை செய்ய ஆரம்பித்தார்.

  Image Courtesy

  விபத்து :

  விபத்து :

  வெளியுலகத்தினருக்கு விபத்து, எதிர்பாராமல் நடந்ததாகவே தெரியும் ஆனால் அவற்றை பெல்லே திட்டமிட்டு நடத்தியிருக்கிறார் என்பது நீண்ட காலத்திற்கு பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமாக இருந்த கணவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் தாக்கி இறப்பது, பிஸ்னஸ் பாட்னர் விபத்தில் உயிரிழப்பது. பல மில்லியன் டாலருக்கு இன்ஸூரன்ஸ் செய்திருந்த விவசாய நிலம் திடீரென்று தீப்பிடித்து எரிவது என எதாவது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

  அதைத் தொடர்ந்து மரணங்களும் இருந்து கொண்டேயிருக்கும். இப்படி அவர் கொன்றது மொத்தம் நாற்பது பேர்!

  Image Courtesy

  முதல் திருமணம் :

  முதல் திருமணம் :

  இந்த இன்ஸூரன்ஸ் விவகாரம் அவரது முதல் திருமணத்திற்கு பின் தான் தெரிந்திருக்கிறது. இப்படியும் ஒரு வழியா என்று யோசித்தவர் தன் வேலையை காட்ட ஆரம்பித்தார். 1893 ஆம் ஆண்டு மேட்ஸ் சோர்ன்சன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார் பெல்லே .

  இருவரும் இணைந்து பிஸ்னஸ் செய்வதற்காக பெரிய அளவில் ஸ்நாக்ஸ் ஷாப் ஒன்றினை ஆரம்பிக்கிறார்கள். இனிப்பு மற்றும் மிட்டாய் வகைகளை மொத்தமாக விற்கும் கடை. தட்டுத் தடுமாறி பிஸ்னஸ் ஏறிக் கொண்டே போகிறது. அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கிறது.

  Image Courtesy

  குழந்தைகள் :

  குழந்தைகள் :

  இவர்களுக்கு கரோலின்,ஆக்சல்,மைர்டல் மற்றும் லக்கி என நான்கு குழந்தைகள். இவர்களைத் தவிர ஜென்னி ஓல்சன் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். கணவர் பெயரில்,பிஸ்னஸ் பெயரில் ஒவ்வொரு குழந்தைகளின் பெயரில் என ஏரளாமான இன்ஸூரன்ஸ் வாங்கினார்.

  Image Courtesy

  முதல் அடி :

  முதல் அடி :

  முதலில் அவர் கை வைத்து அவர்களது கடையில் தான். ஒரு நாள் இரவு அவர்களது கடை திடீரென தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. அந்த நேரத்தில் கடையில் யாருமில்லை என்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதற்காக இன்ஸூரன்ஸ் பணம் கிடைத்தது.

  குறுகிய நாட்களில் கை நிறையப் பணம் அவரை திக்குமுக்காட வைத்தது. தொடர்ந்து இப்படியே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார்.

  Image Courtesy

  குழந்தைகள் மரணம் :

  குழந்தைகள் மரணம் :

  பெல்லேவின் அடுத்த இலக்கு குழந்தைகள். வீட்டில் இவர்களுக்கு கொடுக்கவென்றே விஷச்செடியை வளர்த்தார். முதலில் கரோலின் மற்றும் ஆக்சலுக்கு அதை உணவில் கலந்து கொடுக்க இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள்.

  உடல் நலக்குறைவினால் உயிரிழந்து விட்டதாக அழுது தீர்த்தால் பெல்லே. பெருங்குடல் பாதிப்படைந்தவர்களின் அறிகுறிகளும், இந்த விஷத்தை உண்டவர்களின் அறிகுறிகளும் ஒன்றாக இருக்குமென்பதால் எளிதாக தப்பித்துக் கொண்டார் பெல்லே.

  Image Courtesy

  தைரியம் :

  தைரியம் :

  இரண்டு குழந்தைகளின் இன்ஸூரன்ஸ் பணமும் கிடைத்தது. அதோடு தான் செய்த தவறினை எளிதாக சமாளித்து விடலாம் அதனை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றதும் இன்னும் தைரியம் அதிகமானது. 1900 ஆம் ஆண்டு பெல்லேவின் கணவர் உயிரிழக்கிறார்.

  அவர் பெயரில் இரண்டு இன்ஸூரன்ஸ் பாலிசிகள் போடப்பட்டிருந்தன. இரண்டின் பணமுமே பெல்லேவிற்கு கிடைத்தது.

  Image Courtesy

  மருத்துவர் கண்டுபிடிப்பு :

  மருத்துவர் கண்டுபிடிப்பு :

  இந்த திடீர் மரணம் சந்தேகத்தை கிளப்பவே வழக்கு பதியப்பட்டது. அரசாங்கம் சார்பாக கணவரின் உடலை சோதனையிட்டவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். ஆடிப்போய்விட்டார் பெல்லே.... விஷயம் வெளியே தெரிந்திடாமல் இருக்க இவர் ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்தார்.

  அவரோ பெல்லேவின் கணவருக்கு நீண்ட நாட்களாக இதயப் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால் அதனை அவர் சரிவர கண்டுகொள்ளவில்லை. இதோ இதயம் பலவீனமடைந்து இறந்துவிட்டார் என்று வாதாடி சாதித்தார். இந்த முறையும் பெல்லேவுக்கே வெற்றி.

  Image Courtesy

  இண்டியானா :

  இண்டியானா :

  ஏற்கனவே அடுத்தடுத்து மூன்று மரணங்கள் மற்றும் கடை வேறு எரிந்து விட்டது என்பதால் இனியும் இங்கே எதாவது செய்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்த பெல்லே தன்னுடைய குழந்தைகளுடன் 1901 வது வருடம் இண்டியானாவிற்கு குடிபெயர்கிறார்.

  அங்கே 42 ஏக்கரில் விவசாய நிலம் வாங்குகிறார். அதற்கும் இன்ஸூரன்ஸ் செய்யப்படுகிறது.

  Image Courtesy

  நிலத்திலிருந்து பணம் :

  நிலத்திலிருந்து பணம் :

  திடீரென்று ஒரு நாள் நிலத்தில் விளைந்திருந்த செடிகள் எல்லாம் பற்றி எரிகிறது குழந்தைகளுடன் அங்கிருந்த வீட்டில் தங்கியிருந்த பெல்லே பதறியடித்து வெளியே வருகிறார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் தீ அணைக்கப்படுகிறது.

  நாதியில்லாமல் வந்தேனே இதுவும் போய்விட்டதே இனி என் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பேன், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வேன் எங்களுக்கு யார் இருக்கா என்று புலம்புகிறார். பெல்லேவின் மீது கரிசனம் உண்டாகிறது. எல்லாரும் வந்து ஆறுதல் சொல்கிறார்கள். அதே நேரத்தில் மிக விரைவாகவே இவருக்கு இன்ஸூரன்ஸ் பணமும் கிடைக்கிறது.

  Image Courtesy

  இரண்டாவது திருமணம் :

  இரண்டாவது திருமணம் :

  1902 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பீட்டர் குன்னஸ் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். பீட்டரை தேர்ந்தெடுக்க காரணம். அவரை திருமணம் செய்து கொண்டால் மூன்று இன்ஸூரன்ஸ் பணம் கிடைக்கும் என்பது தான்.

  பீட்டருக்கு முதல் மனைவி மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள்.மனைவி விபத்தில் உயிரிழந்துவிடவே பெல்லேவை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார்.

  Image Courtesy

  கணவருக்கு சந்தேகம் :

  கணவருக்கு சந்தேகம் :

  சேர்ந்து வாழ ஆரம்பித்து சில நாட்களிலேயே பீட்டரின் இரண்டாவது குழந்தை மர்மமான முறையில் உயிரிழக்கிறது. சரியான காரணம் தெரியவில்லை பெல்லே குறித்த பழைய தகவல்களை எல்லாம் கேள்விப்படுகிறார். எதோ சரியில்லை என்பதை உணர்ந்தவர் மூத்தமகளான ஸ்வான்ஹில்டை உறவினர் வீட்டில் தங்கி படிக்க அனுப்பி விடுகிறார்.

  பெல்லேவிடம் பழகி உயிர் தப்பிய ஒரே குழந்தை ஸ்வான்ஹில்ட் மட்டும் தான்.

  Image Courtesy

  கணவர் கொலை :

  கணவர் கொலை :

  1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது கணவரான பீட்டரையும் கொலை செய்கிறாள் பெல்லே. பெல்லேவின் குற்றங்களை ஓரளவுக்கு யூகித்துவிட்ட பீட்டர் பெல்லேவிடம் சண்டையிடுகிறார். என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஏதோ தவறு செய்கிறாய் என்று மிரட்டுகிறார்.

  பெரும் விவாதமாக சண்டை மாறியது. ஒரு கட்டத்தில் கறி வெட்டுவதற்கு பயன்படுத்தும் அரிவாளை எடுத்து பீட்டரின் தலையிலேயே போடுகிறார். அங்கேயே பீட்டர் சுருண்டு விழுந்து உயிரிழக்கிறார். போலீஸ் வருகிறது. சமையலறையில் இருந்த க்ரைண்டரை செல்ஃபில் வைக்கும் தவறி அவர் தலையில் விழுந்து விட்டது என்கிறார். அப்படியே நம்பவும் வைக்கிறார்.

  Image Courtesy

  முதலைக் கண்ணீர் :

  முதலைக் கண்ணீர் :

  உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பீட்டருக்கு விஷம் கொடுத்திருப்பது உறுதியாகிறது ஆனாலும் சரியான எவிடன்ஸ் இல்லை. மேலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு அழுது தீர்த்து பீட்டரின் உடலின் மேல் விழுந்து புரண்டு அழவே அங்கிருப்பவர்களுக்கே பெல்லே அப்படி செய்திருக்க முடியாது என்றே நினைத்தனர். அதோடு பீட்டர் இறக்கும் போது பெல்லே கர்ப்பமாகவும் இருந்திருக்கிறார்.

  இதனால் எளிதாக தப்பித்துக் கொண்டார். ஆறே மாதத்தில் பீட்டர் பெயரிலிருந்த இன்ஸூரன்ஸ் பணம் கைக்கு வந்தது.

  Image Courtesy

  பிலிப் :

  பிலிப் :

  அடுத்த ஆறு மாதங்களில் பீட்டரின் மகன் பிலிப் பிறக்கிறான். இப்போதும் பெல்லேவுக்கு பணத்தாசை விட வில்லை. இம்முறை தன்னை மறுமணம் செய்து கொள்ள ஆட்கள் வேண்டுமென்று விளம்பரம் கொடுக்கிறார்.

  பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். பெல்லேவை சந்திக்க வருகிறார்கள் ஆனால் ஒருவர் கூட உயிருடன் திரும்பவேயில்லை.

  Image Courtesy

  இங்கே வருவதை சொல்லாதே :

  இங்கே வருவதை சொல்லாதே :

  எனக்கு உங்களை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் என்பவரிடத்தில் எரிந்து கிடக்கும் நிலத்தையோ அல்லது குழந்தையின் பெயரைச் சொல்லியோ பெரும் பணத்தை கேட்பார். அல்லது ஆசை வார்த்தை கூறி பேசி மயக்கி பணத்துடன் வரச் சொல்லுவார்.

  இங்கே வருவதாக யாரிடமும் சொல்லாதே. நம் திருமணம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்றும் அன்புக் கட்டளையிடுவாள்

  Image Courtesy

  பன்றிகளுக்கு உணவு :

  பன்றிகளுக்கு உணவு :

  அப்படி வருகிறவர்களிடமிருந்து பணத்தை பறித்து முடித்ததும் அவர்களை கொன்று எரிந்து பயனற்றுப் போன நிலத்திலேயே புதைத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள். அப்படியில்லையென்றால் தன வளர்த்த பன்றிகளுக்கு வந்தவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட கொடுத்துவிடுவாள்.

  சில நேரங்கள் பன்றி கூடத்திற்கு நடுவே வைத்து எரித்துமிருக்கிறாள்.

  Image Courtesy

  பெல்லேவின் தலை :

  பெல்லேவின் தலை :

  1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பெல்லேவின் வீட்டிலிருந்து புகை கிளமியது. அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் தர அவர்கள் வந்து பார்த்த போது வீட்டிற்குள் பெல்லேவின் குழந்தைகள் லக்கி,மர்ட்டில் மற்றும் பிலிப் ஆகியோர் இறந்து கிடந்தனர். வெளியில் தலையில்லாத ஒரு பெண் உடலும் கிடந்தது.

  அந்த பெண் தான் பெல்லே என்று போலீசார் நினைத்தனர்.

  Image Courtesy

  அண்ணனைக் காணவில்லை :

  அண்ணனைக் காணவில்லை :

  இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து போலீஸுக்கு ஒரு புகார் வருகிறது. தன்னுடைய சகோதரன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். கடந்த இரண்டு மாதாங்களாக அவரைக் காணவில்லை. இப்போது பேப்பரில் வந்திருக்கும் இந்த பெண் பெல்லேவைத் தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இப்போது இவரும் இறந்துவிட்டார். அப்படியானால் என் அண்ணன் எங்கே உடனே தேடித் தரவேண்டும் என்று புகார் கொடுக்கிறார்.

  வந்திருப்பவரின் அண்ணன் தான் கொலைக்குற்றவாளியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்குகிறார்கள்.

  Image Courtesy

  11 உடல்கள் :

  11 உடல்கள் :

  மீண்டும் பெல்லேவின் வீட்டிற்குச் சென்று சோதனையிடப்படுகிறது எதுவும் சிக்கவில்லை. பன்றிகள் இருந்த இடம் அதையொட்டிய நிலப்பகுதியை தோண்டினால் கிட்டத்தட்ட 11 பேரின் உடல்கள் கிடைக்கின்றன.

  அவற்றில் ஒரு உடல் பெல்லேவின் தத்து மகளாக இருந்த ஜென்னியின் உடலும் இருந்தது. கடந்த 1906 ஆம் ஆண்டு, அதாவது இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜென்னியைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார் பெல்லே.

  Image Courtesy

  காதலன் :

  காதலன் :

  இன்னிலையில் தோட்டத்தில் உதவி செய்ய அறிமுகமான ரே லேம்பெர் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து போலீஸ் விசாரித்தது, அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன் அவரைப் பார்க்க தினமும் ஆட்கள் வருவார்கள். நான் அவரை மிகத் தீவிரமாக காதலித்தது உண்மை தான். என்னை வேலையை விட்டு அனுப்பியும் தொடர்ந்து அவருக்கு பல உதவிகளை செய்து வந்தேன்.

  மற்றபடி எதுவும் தெரியாது என்றார் துருவித் துருவி விசாரித்ததில் வீட்டில் புகை கிளம்பிய சில தினங்களுக்கு முன்னர் பெல்லே சிகாகோவிற்கு பயணம் செய்யவிருப்பதாக சொன்னார் என்று தெரிவிக்க. தலையில்லாத பெண்ணின் உடல் பெல்லேவினுடையது தானா என்று சந்தேகம் கிளம்பியது.

  Image Courtesy

  எஸ்தர் கார்ல்சன் :

  எஸ்தர் கார்ல்சன் :

  ஏற்கனவே இந்த தலையில்லாத பெண் யார்? பெல்லே உயிருடன் இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்பிய நிலையில் இந்த கொலை செய்தி அமெரிக்கா முழுவதும் பரவியது. இந்நிலையில்

  1931 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸில் ஒர் வழக்கு வருகிறது. எஸ்தர் கார்லஸ்ன் என்ற பெண்மணி கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

  கணவருக்கு விஷம் கொடுத்து கொலையா என்று சந்தேகித்த போலீசார் பெல்லேவின் புகைப்படத்துடன் தற்கொலை செய்து கொண்ட எஸ்தரின் உடலில் அங்க அடையாளங்களை சோதனையிட்டிருக்கிறார்கள்

  Image Courtesy

  மர்மம் :

  மர்மம் :

  சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதிலும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. மாறாக பெல்லே உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு தற்போது எஸ்தருக்கு இருக்கும் வயதே இருந்திருக்கும்.

  அவரது புகைப்படங்களை பார்க்கையில் அவர் எஸ்தரின் உடல்வாகுடன் இருந்திருப்பார் என்றே சொல்லப்பட்டது. ஆனால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. 2008 வரை இதற்கு முடிவே எட்டப்படாமல் மர்ம வழக்கு என்று முடித்து வைக்கப்பட்டது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Women Kills her Husband And Fed to pigs

  Women Kills her Husband And Fed to pigs
  Story first published: Wednesday, April 4, 2018, 13:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more