For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனின் விந்தை, காதலனின் விந்துடன் மாற்றி, காதலன் மூலமாக குழந்தை பெற்ற பெண்மணி!

கணவனின் விந்தை, காதலனின் விந்துடன் மாற்றி, காதலன் மூலமாக குழந்தை பெற்ற பெண்மணி!

|

ஐ.வி.எப். இன்று நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க கூடிய ஒரு மருத்துவ தொழில்நுட்பம். இது ஒரு பெரும் அறிவியல் வளர்ச்சி என்றும் கூறலாம். நமது வாழ்வியல் மாற்றம் மற்றும் உணவியல் இரசாயன மாற்றங்கள் காரணத்தால் ஆண், பெண் இருவர் மத்தியிலும் கருவள குறைப்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது.

Woman Swapped Husband Sperm with Boyfriend Sperm in IVF to Get Child From Her BF

Cover Image Soure and Courtesy: vesti.ru / east2westnews

இதை தவிர்த்து, எப்படியாவது குழந்தை பெற்றுவிட மாட்டோமா என மனம் வருந்தும் தம்பதிகள் ஒரு வரப்பிரசாதமாக காணும் சிகிச்சை தான் ஐ.வி.எப். அதாவது செயற்கை முறையில் கருவூட்டல் செயல்படுத்தி குழந்தை பாக்கியம் பெறும் முறை.

இந்த செயற்கை அறிவியல் முறையை பயன்படுத்தி ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஒருத்தர் குடும்பத்தில் சித்து விளையாட்டு ஆடியிருக்கிறார். இவர் இந்த ஐ.வி.எப் சிகிச்சையின் போது தனது கணவரின் விந்தினை, காதலனின் விந்துடன் மாற்றி, காதலன் விந்து மூலம் கணவருக்கு தெரியாமல் குழந்தை பெற்றிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யானா அனோகின்!

யானா அனோகின்!

யானா அனோகின் (38), இவரது கணவர் ரஷ்யாவில் இயங்கி ஒரு மருத்துவமனையின் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு ஐ.வி.எப் சிகிச்சையின் போது, மனைவின் காதலரின் விந்து கொண்டு கருத்தரித்து குழந்தை பெற உதவி தன்னை ஏமாற்றியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு வயது!

ஒரு வயது!

யானா அனோகின் கணவர் கடந்த ஒரு வருட காலமாக அந்த குழந்தை தன் விந்து மூலம் பிறந்த தன்னுடைய குழந்தை என்று நம்பி வந்திருக்கிறார். ஆனால், மகனுக்கு ஒரு வயது நிரம்பிய பிறகு தான், தனது மனைவி மற்றும் மருத்துவமனை ஊழியர்களால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்கிறார் யானா அனோகின் கணவர்.

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

மருத்துவமனையில் ஐ.வி.எப் சிகிச்சை மேற்கொள்ளும் போது யானா அனோகின், தான் விரும்பும் நபரின் விந்து மூலமாக கருத்தரிக்க விரும்புவதாகவும். ஆனால், அதற்கு தன் கணவர் சிகிச்சைக்கான செலவை ஏற்பார் என்றும் கூறியிருக்கிறார்.

இழப்பீடு!

இழப்பீடு!

மிஸ்டர் அனோகின் தான் தொடுத்த வழக்கில் வெற்றிப் பெற்றிருக்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி மாஸ்கோவை சேர்ந்த அந்த மருத்துவமனை மிஸ்டர் அனோகினுக்கு ஏற்பட்ட மன மற்றும் பண ரீதியான இழப்புக்கு 4,600அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக கொடுத்திருக்கிறது.

நம்பினேன்!

நம்பினேன்!

நான் என் மனைவியை நம்பினேன், அவர் மீது நூறு சதவிதம் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், என்னிடம் இதுக்குறித்த உண்மை தெரிவித்த போது, நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். முதலில் என்னால் இதை முழுமையாக நம்ப முடியவில்லை.

நீதிமன்றம்!

நீதிமன்றம்!

நீதிமன்றத்தில் மிஸ்டர் அனோகின் தன் விந்து மூலம் பிறந்த குழந்தைக்கு, தானே தந்தை என்று கருதி, பாசமாக வளர்த்து வந்த வீடியோ காட்சிகள் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், நீதிமன்றம் ஐ.வி.எப் சிகிச்சைக்கு இவர் தான் பணம் செலுத்தினார் என்பதையும். தன் விந்து மூலம் குழந்தை பிறந்தது என்று இவர் நம்பி வந்தது குறித்தும் விசாரித்து அறிந்திருக்கிறது.

தான் விரும்பிய நபர்..

தான் விரும்பிய நபர்..

யானா அனோகின் கணவரின் விந்துடன், காதலனின் விந்தினை மாற்றி கருத்தரித்த விஷயம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், விசாரணை அறிக்கையில், தன் குழந்தைக்கு தான் விரும்பிய நபரே தந்தையாக இருக்க வேண்டும் என்று நான் கருதினேன். என் கணவர் என் குழந்தைக்கு தந்தையாக இருக்க நான் விரும்பவில்லை. என தெரிவித்திருக்கிறார்.

பிரிவு!

பிரிவு!

ஒருவருட காலமாக மிஸ்டர் அனோகின் அந்த குழந்தை தன்னுடையது என்றே நினைத்து, குழந்தை மீது அன்பும், அக்கறையும், உதவியும் செய்து வந்திருக்கிறார். ஆனால், ஒருக்கட்டத்தில் இவர்கள் பிரிந்து, தங்கள் புது துணையுடன் வேறு வாழ்க்கையில் இணைந்திருக்கின்றனர். தாங்கள் இருவரும் பிரிந்த போது தான், அந்த குழந்தையின் உண்மையான அப்பா யார் என்ற உண்மையை கூறி இருக்கிறார் யானா அனோகின்.

மரபணு பரிசோதனை!

மரபணு பரிசோதனை!

மிஸ்டர் அனோகின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு, குழந்தைக்கு மரபணு பரிசோதனை செயப்பட்டது. அதில், மிஸ்டர் அனோகின் குழந்தையின் தந்தை இல்லை என்பது நிரூபணம் ஆனது.

மேலும், யானா அனோகினுடன் சேர்ந்து மிஸ்டர் அனோகினை ஏமாற்றிய அந்த மருத்துவமனைக்கும் இந்த தவறில் பங்கிருக்கிறது என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை மிஸ்டார் அனோகினுக்கு செலுத்த அந்த மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

நீதி!

நீதி!

தான் முன்னாள் மனைவிக்கு எதிராக பணத்திற்காக இந்த வழக்கை தொடரவில்லை. நீதிக்காக தான் தொடர்ந்தேன். இதே போல வரும் நாட்களில் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்.

எனவே, பிறர் இதுக்குறித்து கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கவே தான் இந்த வழக்கை தொடர்ந்தேன். இப்படியான தவறு இனிவரும் நாட்களில் ஏற்பட கூடாது என மிஸ்டர் அனோகின் தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது, யானா அனோகின், தன் குழந்தயின் பயாலஜிக்கல் தந்தையான தன் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Swapped Husband Sperm with Boyfriend Sperm in IVF to Get Child From Her BF

Woman Swapped Husband Sperm with Boyfriend Sperm in IVF to Get Child From Her BF
Story first published: Friday, September 28, 2018, 13:26 [IST]
Desktop Bottom Promotion