Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
காதலனையே வெட்டி கூறுபோட்டு பிரியாணி சமைத்து பரிமாறிய கொடூரம்... இப்படியுமா நடக்கும்?
கொடூரமான பெண் ஒருத்தி தன்னுடைய காதலனை கொன்று பிரியாணி சமைத்து பரிமாறிய கொடூரம் பற்றியது இந்த கட்டுரை.
ஒரு பெண் தன்னுடைய காதலனை ஆறு மாதங்களுக்கு முன்பு கொலை செய்து, அவருடைய உடல் உறுப்புகளை கறியாகச் சமைத்து அதை தன்னுடைய கட்டிடத்தில் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை செய்பவர்களுக்கு உணவாகப் பரிமாறிய கொடூரம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த செய்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அதுபற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகம்
30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஏழு வருடங்களாகக் காதலித்து வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (அபுதாபி) பணியாற்றி வந்தனர்.

ஏழு வருடக் காதல்
ஏழு வருடங்களாக காதலித்து வந்த அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் சின்ன சண்டை ஏற்பட்டது. அந்த பெண்ணின் காதலன் தான் மொராக்கோ நாட்டில் வுறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாக்க குறிப்பிட்டிருக்கிறார்.

கொலை
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெண், இவன் தன்னைவிட்டு வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்து திட்டமிட்டு தன்னுடைய காதலனை கொலை செய்துவிட்டார்.

பிரியாணி
கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசித்து, பின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அந்த கறியை பிரியாணி போன்ற மச்பூஸ் என்னும் ஒருவகை பாரம்பரிய உணவாக சமைத்து, அந்த உணவை தனக்குக் கீழ் பணிபுரிகிற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சுடசுட பரிமாறியுள்ளார்.

டி.என்.ஏ. பரிசோதனை
அந்த பற்கள் டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில் இந்த பற்கள் அந்த பெண்ணின் காதலருடையது என்பது உறுதியானது. அதன்பின் அந்த பெண் போலீஸாரால் கடந்த 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
அந்த பெண்ணிடம் செய்யப்பட்ட விசாரணையில், தன்னை காதலித்து ஏமாற்றியதால், தான் தான் அந்த இளைஞனைக் கொன்றதாகவும் உடல் பாகங்களை பிரியாணி சமைத்து தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு உணவாகக் கொடுத்ததாகவும் மீதமிருந்த கறித்துண்டுகளை நாய்க்கு உணவாகக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிவரும் "தி நேஷனல்" என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனநல பாதிப்பு
போலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிப்பதாக மருத்துவர்கள் அறிக்கையளித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications