Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
புதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க...
வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது.
வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது.

கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது.

புதன் கிரகம்
ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும்.

விநாயகர் வழிபாடு
புதன்கிழமை விநாயகரை வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
விநாயகப் பெருமான் சிறந்த அதிர்ஷ்டங்களையும் இறைநிலையையும் வழங்கக்கூடியவர். இவர் பெரும் அறிவு, செல்வம், உடல் நலம், மகிழ்ச்சி, குழந்தை வரம் ஆகியவற்றைத் தரக்கூடியவர்.

விக்னேஷ்வரர்
விக்னேஷ்வரன் என்று அழைக்கப்படுகின்ற விநாயகப் பெருமான் பிரச்னைகளையும் உங்களுக்கு இருக்கின்ற காரியத் தடைகளையும் அகற்றுவார். ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை நீக்கி, மன அமைதியையும் நல்ல குணநலன்களையும் மனதுக்குள் தியானம் மற்றும் ஆன்மீகத் தன்மையையும் அதிகப்படுத்துவார் விநாயகர்.

காரிய விருத்தி
இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் செய்யும் வேலையில் வெற்றியில் முடிய வேண்டும் என்பது தான் அந்த காரணம். எந்த காரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால், அந்த காரியத்தின் மீது என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் அதை நீக்கி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

மனோதிடம்
உடல் மற்றும் மன ரீதியான சோர்வையும் போக்கி உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்வார்.
விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், முக்திக்கு தடையாக இருக்கிற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழியும்.

யானை குறியீடு
விநாயகப் பெருமான் விசாலமான அறிவையும் புத்திக் கூர்மையையும் கொடுப்பார். விநாயகருடைய அடையாளமாகக் கருதப்படுகிற யானையின் தலை என்பது பேரறிவினுடைய குறியீடாகக் கூறப்படுகிறது.

வெற்றி
உங்களை ஆன்மீக வழியில் சாதுவான குணங்களுடைய அழைத்துச் செல்லக்கூடியது விநாயகர் வழிபாடு என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுடைய திறமை அசாத்தியமானதாக மாறும். எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி உங்கள் பக்கமே நிற்கும்.



Click it and Unblock the Notifications