வக்கீல்களுக்கு கருப்பு நிற சீருடை ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பல விஷயங்கள் காலங்காலமாக கடைபிடித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாளும் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று யோசித்திருக்கமாட்டோம். அப்படியே யோசித்தாலும் ரொம்ப நாளா இப்டி தான் நடக்குது, எனக்கு முன்னாடி இருந்தவங்க இப்டி தான் செஞ்சாங்க நான் அத ஃபாலோ பண்றேன், என்றே கடந்து விடுவோம். அப்படி நீங்கள் அன்றாட வாழ்வில் தினமும் கடந்து வருகிற சில விஷயங்களைப் பற்றிதான் இப்போது அதன் உண்மைக் காரணங்களோடு தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்.

இன்றைக்கு ட்ரோல் மீம் எல்லாம் சர்வ சாதரணமாகிவிட்ட காலத்திற்கு முன்னரே பகடி செய்யப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது மருத்துவர்களின் கையெழுத்து தான். ஆம், பொதுவாக எல்லா மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கியது போலவே இருக்கிறதே..... அதற்கு காரணம் என்ன? அதைவிட அவர்கள் அணிகிற வெள்ளை கோட்டு மருத்துவர்கள் வெள்ளை கோட்டு என்றால் வக்கீல்கள் அதற்கு நேர் எதிர்மறையாக கருப்பு நிற கோட் இதற்கு காரணம் என்ன? என்றாவது யோசித்திருக்கிறீர்களா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு :

கருப்பு :

கருப்பு நிற கோட் வலிமையையும் அதிகாரத்தையும், பணிவையும் குறிக்கும். வக்கீல்கள் நீதிக்காக பணிந்து செல்ல வேண்டும் என்று குறிப்பதற்காகவே வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் கருப்பு நிற கோட் வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற நேரத்தில் அணிகிறார்களோ இல்லையோ தங்களுடைய பணியை மேற்கொள்ளும் போது கண்டிப்பாக தங்களது சீருடையான கோட் அணிந்திருக்க வேண்டியது கட்டாயாமாக்கப்படுகிறது.

யூனிஃபார்ம் :

யூனிஃபார்ம் :

அடிப்படைக் காரணமாக இதனைச் சொன்னாலும், இதன் ஆரம்பம் எப்படி தோன்றியது தெரியுமா? ஒவ்வொரு நாட்டினருக்கும் தங்களது கலாச்சாரத்தை பொருத்து நிறம் மாறிடும்.கனடா நாட்டில் வக்கீல்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிற சீருடை அணிந்திருப்பார்கள்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கருப்பு வெள்ளை பயன்படுத்துவார்கள். இந்தியாவில் ஆண், பெண் இருபாலரும் கருப்பு நிற கோட் தான் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கம் :

துவக்கம் :

Image Courtesy

இந்த கருப்பு கோட் வழக்கம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்க்கியிருக்கிறது.

எதோ ஒரு நிறம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை

1685 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் சார்லஸ் மன்னர் உயிரிழக்கிறர்.

அவரது இறுதி சடங்கிற்கு கருப்பு மற்றும் வெள்ளை கவுன் அணிந்து வருகிறார்கள் மக்கள், அந்த நிகழ்வு தான் ஆரம்பப்புள்ளியாக இருந்திருக்கிறது.

அடுத்த காரணம் :

அடுத்த காரணம் :

Image Courtesy

அதன் பிறகு முக்கியமான அடுத்த காரணம், வண்ண ஆடைகளுக்கு சாயத்தை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆரம்ப காலத்தில் சாயம் என்பது அறிமுகமாகாமல் இருந்தது.அப்படியே சில நிறங்கள் கிடைத்தாலும் அவற்றை அதிகளவு பயன்படுத்த தொழில்நுட்பம் இல்லை.

அப்போதிருந்த பர்ப்பிள் நிறம் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்த உரிமையிருந்தது. அதற்கடுத்து இருந்த ஒரே நிறம் கருப்பு மட்டுமே.

வெள்ளைச் சட்டை :

வெள்ளைச் சட்டை :

கருப்பு கோட் மட்டுமல்ல உள்ளே வெள்ளை நிறச் சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருப்பார்கள், இதற்கு காரணம் வெள்ளை நிறம் தூய்மையான உணர்வைக் கொடுக்கும்.தங்களிடம் அணுகுபவர்களுக்கு அவர்களது ஒரே நம்பிக்கை சட்டம் மட்டுமே அதைத் தவிர வேறு எந்த முன் அபிப்ராயம் வந்து விடக்கூடாது என்பதால் இருக்கலாம்.

நெக் பேண்ட் :

நெக் பேண்ட் :

தங்களது சீருடையின் ஒரு பகுதியாக எல்லா வக்கீல்களும் கழுத்தில் நெக் பேண்ட் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். இதன் துவக்கமும் இங்கிலாந்து தான்.ஆரம்ப காலத்தில் நீதிமன்றங்களில் இருந்த வக்கீல்கள் இதனை அணிய ஆரம்பிக்க அப்படியே அதே வழக்கம் இந்தியாவிற்கும் பரவியிருக்கிறது.

கிறிஸ்துவ நம்பிக்கை :

கிறிஸ்துவ நம்பிக்கை :

இரண்டு வெள்ளை நிற துணி இணைக்கப்பட்டது போல அந்த நெக் பேண்ட் இருக்கும். அவை இரண்டும் ஒன்று சட்டத்தையும் இன்னொன்று கல்லையும் குறிக்கிறது. இது கிறிஸ்துவ நம்பிக்கையின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நெக் பேண்ட் தான் சட்டத்தை வழிநடத்துகிறவர்களின் முதல் சீருடையாக இருந்தது.

அதே நேரத்தில் இந்த இரண்டு வெள்ளைத் துணி ஒன்று மனிதனையும் இன்னொன்று கடவுளையும் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நீதிமன்றம் :

நீதிமன்றம் :

நீதிமன்ற வளாகத்திற்குள் செல்பவர்கள் யாராக இருந்தாலும் முறையான உடை அணிய வேண்டியது அவசியம். இது வக்கீல்களுக்கு மட்டுமல்ல, சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நாம் மதிக்க வேண்டியது கட்டாயம் அதற்கான மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். அமெரிக்காவைத் தவிர எல்லா நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் :

அமெரிக்காவில் :

Image Courtesy

அமெரிக்காவில் இவ்வளவு கிடுக்குப்பிடி இருக்காது. அங்கே வக்கீல்களுக்கு உடை விஷயத்தில் ஏராளமான சலுகைகள் உண்டு, சீருடை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் இந்தியா உட்பட பிற நாடுகளில் அது சாத்தியமல்ல, நீதிமன்றத்தில் இருக்ககூடிய வக்கீல் முறையான உடை அணியவில்லை என்றால் உங்களை நீதிபதி வெளியேற்ற முடியும்.

மருத்துவர்கள் :

மருத்துவர்கள் :

வக்கீல்களுக்கு கருப்பு உடை சீருடையாக இருக்கிறதென்றால் மருத்துவர்களுக்கு வெள்ளை நிறம் சீருடையாக இருக்கிறது. பிற நிறங்களைக் காட்டிலும் இந்த வெள்ளை நிறம் பாசிட்டிவிட்டியைக் கொடுக்கும். இது பிறருக்கு நேர்மறையான எண்ணத்தை விதைக்கிறது.

மருத்துவர்களைத் தாண்டி :

மருத்துவர்களைத் தாண்டி :

மருத்துவர்களைத் தாண்டி நர்ஸ்,மருந்துகளை கையாள்கிறவர்கள், லேப்களில் பணியாற்றுகிறவர்கள் பெரும்பாலும் வெள்ளை நிற கோட் தான் அணிந்திருப்பார்கள்.

அப்போது அவர்கள் கையாளக்கூடிய மருந்துகளோ அல்லது வேறு எதேனும் உடையில் சிந்தினால் மற்ற நிறங்களை விட வெள்ளை நிறத்தில் தெளிவாக தெரிந்திடும்.

 ரத்தம் :

ரத்தம் :

லேப் போன்ற இடங்களில் ஏராளமான கெமிக்கல்கள், கிருமிகள் நிறைந்திருக்கும், அவற்றில் ஏதேனும் மருத்துவர்களுக்கு தாக்கினால் பெரும் பாதிப்புகளை உண்டாக்கிடும். அதனைத் தவிர்க்கவும், மீறி பட்டாலும் துல்லியமாக கண்டுபிடிக்கவும் தான் வெள்ளை கோட்.

அதே போல நோயாளிகளின் ரத்தம் கூட சில நேரங்களில் நோய்த் தொற்று பரவக்கூடியதாக இருக்கும் என்பதால் ஆப்ரேசன் செய்யும் போது மருத்துவர்களுக்கு சீருடை கட்டாயமாக அணீய வேண்டும்.

கையெழுத்து :

கையெழுத்து :

மருத்துவராக ஒருவர் வருவதற்கு முன்னால் ஏராளமான ஆண்டு படிப்பிற்காக செலவழித்து வந்திருப்பர், ஆனால் மருத்துவராக உட்கார்ந்ததும் அவர்களின் கையெழுத்து ஏன் இப்படி மாறிப்போகிறது?

உயிர் காக்கும் வேளையில் இருக்கிறாய், எப்போதும் நிதானமாக செயல்படக்கூடிய வேலை அல்ல இது, அதுவும் குறிப்பாக மருத்துவமனை மருத்துவ சேவை என்று வந்துவிட்டால் அடுத்தடுத்து ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் என்பதை அவர்கள் படிக்கும் காலத்திலிருந்தே பயிற்சியளிக்கப்படுகிறது.

நாம் மருத்துவரை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நமக்கடுத்து நிற்கக்கூடிய நபருக்கு உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தால்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Why Lawyers Wear Black Coat

Why Lawyers Wear Black Coat
Story first published: Monday, February 19, 2018, 14:00 [IST]