Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொன்ற தென்னிந்திய மன்னன்
இந்திய வரலாறு என்பது மன்னர்களை மட்டும் சுற்றியுள்ளது அல்ல. இங்கு வாழ்ந்த ஒவ்வொரு மனிதருக்கு பின்னும் ஒரு வரலாறும், ஒரு கதையும் உண்டு. தன்னுடைய 63 மனைவிகளையும் கொன்ற தளபதி அப்சல் கானை பற்றி இங்கு பார்க
இந்திய வரலாறு என்பது மன்னர்களை மட்டும் சுற்றியுள்ளது அல்ல. இங்கு வாழ்ந்த ஒவ்வொரு மனிதருக்கு பின்னும் ஒரு வரலாறும், ஒரு கதையும் உண்டு. மன்னர்கள் காலத்தில் அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்களோ அதேபோல சில அமைச்சர்களும், தளபதிகளும் கூட முக்கியத்துவம் வாய்நதவர்களாக இருந்தாரக்ள். சிலசமயம் மன்னர்களை விட அதிக புகழ் வாய்ந்த தளபதி கூட இருந்தார்கள்.
அப்படி புகழ் வாய்ந்த தளபதிகளில் ஒருவர்தான் அப்சல் கான். வரலாறு மறைத்த பல முக்கியமானவர்களில் அப்சல் கானும் ஒருவர். அவர் பெயர் இன்றும் நிலைத்திருக்க காரணம் அவருடைய வீரம் மட்டுமல்ல அவர் செய்த மிகக்கொடூரமான ஒரு செயலும்தான். அப்சல் கான் யார்? அவர் நிகழ்த்திய கொடூரம் என்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷாஹி வம்சம்
தமிழ்நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய வம்சம் போல கர்நாடகாவில் இருந்த ஒரு முக்கியமான வம்சம்தான் ஷாஹி வம்சம். அந்த வம்சத்தில் வந்த அரசர் தான் இரண்டாம் அலி அடில் ஷாஹி. 1658 ஆம் ஆண்டு அலி அடில் ஷாஹி மராட்டிய சிங்கம் என்று அழைக்கப்படும் தோழியே அறியாத சத்ரபதி சிவாஜியுடன் போரிட ஆயத்தமானார். அதற்கு அவர் நம்பியிருந்தது அப்சல் கான் என்னும் தன்னுடைய தளபதியைதான்.

அப்சல் கான்
அலி அடில் ஷாஹிக்கு பல தளபதிகள் இருந்தாலும் அவர்களில் தலை சிறந்தவராக இருந்தது அப்சல் கான்தான். அதே சமயம் அலி அடில் ஷாஹியின் ஆட்சிக்கு கீழ் இருந்த சிறுபகுதியையும் ஆண்டு வந்தார் அபிசல் கான். அதற்கு முன் அவர் போரிட்ட எந்த படையிலும் அவர் தோற்றதே இல்லை. எனவே சிவாஜியுடன் நடக்க போகும் போரை தலைமையேற்கும் படி அப்சல் கானை வேண்டினார் அலி அடில் ஷாஹி. அப்சல் கானும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

படை திரட்டல்
சிவாஜிக்கு எதிராக நடக்க போகும் யுத்தத்திற்கு தீவிரமாக அதே சமயம் திறமையான ஆட்களை சேர்க்க தொடங்கினார் அப்சல் கான். படையில் இருக்க வேண்டிய முக்கியமான ஒவ்வொரு நபரையும் தானே சென்று தேர்ந்தேடுத்தார். பல நாட்கள் தேர்வுக்கு பிறகு கிட்டத்தட்ட 12000 வீரர்கள் அடங்கிய ஒரு படையை உருவாக்கினார் அப்சல் கான்.

அப்சல் கானின் பலவீனம்
எவ்வளவு பெரிய வீரனாய் இருந்தாலும் அவனுக்கு சில பலவீனங்கள் இருக்கும். அப்படி அப்சல் கானுக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அதுதான் ஜாதகம் மற்றும் அறிகுறிகள் மீதிருந்த அபார நம்பிக்கை.போருக்கு செல்லும் முன் அரண்மனை ஜோதிடரை அழைத்து போரின் முடிவு குறித்து கணிக்க சொன்னார். அதில் அப்சல் கான் மரணமடைவார் என்று கூறப்பட்டது. மனதிற்குள் கலங்கினார் அப்சல் கான்.

அப்சல் கானின் மனைவிகள்
அப்சல் கான் கலங்கியது மரணத்தை நினைத்து அல்ல தன் மனைவிகளை நினைத்து. அப்சல் கானுக்கு மொத்தம் 63 மனைவிகள் இருந்தனர்.தன் மனைவிகள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார் அப்சல் கான். அந்த அன்புதான் அவர்களுக்கு ஆபத்தாய் முடிந்தது. அப்சல் கான் தன் மனதிற்குள் ஒரு கொடூர திட்டத்தை வகுத்தார்.

அப்சல் கானின் கொடூர எண்ணம்
போரில் தான் இறந்து விட்டால் தன் மனைவிகளை வேறு யாரும் மணந்து விடக்கூடாது என்று முடிவெடுத்தார் அப்சல் கான். எனவே தன் 63 மனைவிகளையும் கொல்ல திட்டமிட்டார். எனவே அவர்கள் அனைவரையும் தன்னுடைய கல்லறைக்கு அருகிலேயே கொன்று புதைக்க முடிவெடுத்தார். அந்த காலத்தில் மன்னர்கள், தளபதிகள் தாங்கள் உயிருடன் இருக்கும்போதே சமாதி கட்டி கொள்வது ஒரு மரபாக இருந்தது.

மனைவிகளை கொல்லுதல்
அப்சல் கான் தன் மனைவிகளை எப்படி கொன்றார் என்ற சரியான தகவல்கள் இல்லை. சில குறிப்புகள் அனைவரையும் கிணற்றில் தள்ளி கொன்றார் எனவும், வேறு சில குறிப்புகள் தன் வீரர்களை வைத்து ஒரே நேரத்தில் வாளால் வெட்டி கொன்றார் எனவும் கூறப்படுகிறது. எதுவாக இருப்பினும் அவரின் 63 மனைவிகளும் கொல்லப்பட்டது மட்டும் உண்மை. அவர்கள் அனைவரும் அப்சல் கானின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டனர்.

அப்சல் கான் மரணம்
மனைவிகளை கொன்ற அப்சல் கான் போருக்கு புறப்பட்ட சென்றார். ஜாதகத்தாலோ அல்லது சிவாஜியின் வீரத்தாலோ தெரியவில்லை அப்சல் கான் போரில் கொல்லப்பட்டார். போரில் கொல்லப்பட்ட அப்சல் கானின் உடலை அவருடைய மகனை எடுத்து செல்ல அனுமதித்தார் சிவாஜி .

சாட் கபார்
கர்நாடகாவில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் இன்றும் அந்த 63 சமாதிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது கர்நாடக மாவட்டத்தின் முக்கிய அடையாள சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சாட் கபார் என்றால் 60 சமாதிகள் என்று அர்த்தம். இந்தியாவின் மிக கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications