Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ராதையின் மரணத்திற்கு பிறகு கிருஷ்ணர் என்ன செய்தார் தெரியுமா?
நாம் சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருக்கும் காதல் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற காதல் கதை என்றால் அது கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதைதான்.
நாம் சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருக்கும் காதல் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற காதல் கதை என்றால் அது கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதைதான். இந்த காதல் கதை இன்றும் அழியாமல் இருக்க காரணம் கிருஷ்ணர் கடவுள் என்பதால் மட்டுமல்ல, அவர்களின் காதலில் இருந்த தூய்மையான அன்பும், அவர்களுக்கு இடையே இருந்த மகத்துவமான காதலும்தான். அவர்களின் காதல் அனைத்தையும் கடந்தது.

காதல் என்பதை காட்டிலும் அவர்களுக்கு இடையே பவித்திரமான நட்பும், அவர்களின் ஆன்மாவிற்குள் இருந்த பவித்திரமான இணக்கமும்தான் அவர்களின் உறவை உலகம் போற்றும் ஒன்றாக மாற்றியுள்ளது. அவர்களுக்குள் இருந்த அன்பு ராதையின் மரணம் தாண்டியும் தொடர்ந்தது. ராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் இருந்த அன்பிற்கு ஆதாரமாக இருந்தது. அந்த புல்லாங்குழலை கிருஷ்ணர் ஏன் தன் கைகளாலேயே உடைத்து எறிந்தார் தெரியுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிருஷ்ணர்
கம்சனை வதம் செய்ய கிருஷ்ணராய் அவதரித்த திருமால் தன் பால்ய பருவத்தையும், பதின்ம பருவத்தையும் பிருந்தாவனத்தில் கழித்தார். கிருஷ்ணரின் சேட்டைகளை அனைவரும் ரசித்தாலும் அனைவருக்கும் மேலே கிருஷ்ணர் மீது அதிக அன்பு வைத்து அவரை நேசித்தது ராதைத்தான். அந்த காலக்கட்டத்தில் கிருஷ்ணர் தனக்கு முக்கியமானதாக நினைத்தது இரண்டைத்தான் ஒன்று அவரின் புல்லாங்குழல் மற்றொன்று அந்த புல்லாங்குழலை விரும்பும் அவரின் அழகிய ராதை.

ராதையின் நேசம்
கிருஷ்ணரின் சாகசங்கள், வசீகரம், சேட்டைகள் என அனைத்துமே மற்றவர்களை கவர்ந்தாலும் ராதையை கிருஷ்ணரை நோக்கி ஈர்த்தது அவரின் குழலில் இருந்து எழும் இனிமையான இசைதான். கிருஷ்ணர் எப்போதும் கையில் குழலுடன் இருக்க காரணமும் ராதைதான்.

புல்லாங்குழல்
சில காலத்திற்கு பிறகு கிருஷ்ணரும், ராதையும் பிரிந்துவிட்டாலும் அந்த புல்லாங்குழல் எப்பொழுதும் கிருஷ்ணருடன்தான் இருந்தது. சூழ்நிலைகள் அவர்களை பிரித்தாலும் அந்த குழலின் இசை அவர்களின் ஒருவர் மீதான ஒருவரின் நேசத்தை அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.

கிருஷ்ணரின் திருமணம்
கிருஷ்ணர் அவரின் இளமைக்காலம் முழுவதும் தன் மனதார விரும்பிய அதேசமயம் திருமணம் செய்துகொள்ள முடியாத ராதைக்கு பிடித்த புல்லாங்குழலுடன்தான் காட்சியளிப்பார். 8 பிரதான மனைவிகள், 16000 கோபியர்களை மணந்த பின்னரும் கூட ராதையின் மீதான அவரின் அன்பு அப்படியேதான் இருந்தது.

கிருஷ்ணரின் மதுரா பயணம்
கம்சனின் வதத்திற்கு பின் கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் இருந்து மதுராவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மதுரா கிளம்பிய தருணத்தில் ராதைக்கு யாதவ குலத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ராதையுடன் மீண்டும் இணைய முடியாது அறிந்தாலும் கிருஷ்ணர் தன் புல்லாங்குழலை தன்னுடன் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார். அதன்பின்னர் ராதை ஒரு மனைவியாக தன் கடமைகளை சரியாக செய்துகொண்டிருந்த அதேநேரம் கிருஷ்ணர் தன் தெய்வீக கடமைகளை செவ்வனே செய்துவந்தார்.

ராதையின் வருகை
தனது கடமைகளையெல்லாம் முடித்தபின் வயதான காலத்தில் ராதை தன் உள்ளம் விரும்பும் கண்ணனை இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். தன் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணரை பிரிந்திருந்தாலும் அவர்களின் ஆன்மா எப்பொழுதும் இணைந்துதான் இருந்தது.

ராதையின் முடிவு
ராதை கிருஷ்ணரை சந்திக்க துவாரகையை அடைந்த போது கிருஷ்ணர் பாமா மற்றும் ருக்மணியை திருமணம் செய்துகொண்ட தகவலை அறிந்தார். ஆனால் அதற்காக அவர் வருத்தப்படவில்லை. அனைத்தும் அறிந்த கிருஷ்ணர் தன் ராதையின் வருகையையும் உணர்ந்தார். மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரமாய் ராதையை வரவேற்றார். ராதையோ கிருஷ்ணருக்கு பணிவிடைகள் செய்ய அவரின் அரண்மனையிலேயே தங்க முடிவுபண்ணினார்.

பிணைப்பின்மை
கிருஷ்ணருடன் ஒரே அரண்மனையில் இருந்த போதும் கூட தனக்கு கிருஷ்ணருடன் முன்பு இருந்த ஆன்மாரீதியிலான பிணைப்பு இல்லாததை ராதை உணர்ந்தார். இறுதியில் அவர் கிருஷ்ணரை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தார். அப்படி சென்றால் அந்த பிணைப்பு மீண்டும் வரும் என அவர் நம்பினார்.

மீண்டும் பிணைப்பு
கிருஷ்ணர் தன்னை பின்தொடர்வதை அறியாத ராதை அடர்ந்த வனத்திற்குள் சென்றார். அப்போது அந்த பிணைப்பு மீண்டும் உண்டானதை ராதை உணர்ந்தார். எனவே அங்கேயே தனியாக தங்க முடிவெடுத்தார். காலங்கள் கடக்க ராதை மிகவும் பலவீனமாக மாறினார்.அவரின் இறுதி தருணங்களில் கிருஷ்ணர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

ராதையின் கடைசி ஆசை
அவர்கள் தங்களுடைய நட்பு, பாசம்,மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கிருஷ்ணர் கேட்டபோது தன் இளமைக்காலத்தில் எந்த குழல் இசை தன்னை பரவசமாக்கியதோ அதே இசையை மீண்டும் கேட்கவேண்டும் என்று கூறினார் ராதை.

ராதையின் மரணம்
அந்த தெய்வீக புல்லாங்குழலின் சக்தியால் அவர்கள் இருந்த இடத்தை யாரும் தொந்தரவு செய்யவில்லை. இரவு பகலாக ராதையின் ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணர் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார். ராதையை மரணம் நெருங்கி அவர் கிருஷ்ணரின் ஆன்மாவுடன் இணையும்வரை அந்த இசை தொடர்ந்தது.

அன்பின் சின்னம்
ராதையின் மரணத்திற்கு பிறகு அவர்களின் அன்பு நித்தியத்தன்மையை அடைந்தது. கடவுளாக இருந்தாலும் ராதையின் பிரிவையோ, மரணத்தையோ கிருஷ்ணரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவர்களின் அன்பின் சின்னமாக அந்த புல்லாங்குழலை நிறுத்தி,அவரின் காதலை முடிவுக்கு கொண்டுவர எண்ணினார் கிருஷ்ணர். தனது புல்லாங்குழலை உடைத்து அதனை தூக்கியெறிந்தார். அன்றிலிருந்து தன் மரணம் வரை கிருஷ்ணர் எந்த கருவியையும் வாசிக்கவேயில்லை.



Click it and Unblock the Notifications