Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் இந்த வார ராசிபலன்கள்
இந்த வாரத்தினுடைய ராசி பலன்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இதைப் படித்து பயன் பெறுங்கள்.
பொதுவாக நம்மில் ஏராளமானோருக்கும் ராசி பலன்களை காலையில் எழுந்தவுடன் பார்க்கின்ற பழக்கம் இருக்கும்.

அதிலும் ஒரு வாரத்துக்கு உரிய ராசி பலன்களை படிக்கும் பொழுது, அதன்மூலம் சில முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் பலவற்றோடு செயல்பட்டு, நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

மேஷம்
மனதுக்குள்ளே நினைத்து வைத்திருந்த காரியங்கள் அத்னையும் நிறைவேறும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். கண் சம்பந்தப்ப்ட்ட சின்ன சின்ன பிரச்னைகள் வந்துபோகும். வீட்டினுடைய பொருளாதாரம் கிடுகிடுவென உயரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சேர்ந்து பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதனால் புகழ் பெறுவீர்கள். வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

ரிஷபம்
தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சி பெருகும். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் உங்களுககு சாதகமாகவே அமையும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிக்கான வாய்ப்புகள் வந்து போகும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விவாதங்களில் உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகள் வரும். அதனால் செலவு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களினால் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

மிதுனம்
மனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்கள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பணிகளில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதுிய முயற்சிகளுக்கு பெற்றோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு தன லாபங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும்.

கடகம்
உங்களுடைய உடன் பிறப்புகளினால் உங்களுக்கு ஆதரவற்ற சூழல்களே உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். புதிய ஆட்கள் யாரிடமும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது சற்று கவனமாக இருங்கள். கால்நடைகளின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உடல் சோர்வு அதிகரிக்கும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் சுப செலவுகள் உண்டாகும்.

சிம்மம்
வழக்கத்தை விடவும் உங்களுடைய செயல்பாடுகிளல் வேகம் கொஞ்சம் அதிகாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். புதிய பொருள்களை வீட்டுக்காக வாங்கிச் சேர்ப்பீர்கள். மாணர்களுக்கு கல்வியில் சிறிது கவனம் தேவை. எதையும் தைரியத்துடன் கையாண்டு புதிய முடிவுகளைச் சிறப்பாக எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய புத்திக் கூர்மையினால் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் கலந்து கொள்ளும் போட்டிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். திருமண வரன்கள் அமையும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் உண்டாகும்.

கன்னி
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். நீங்களே எதிர்பார்க்காத தன அதிர்ஷ்டத்தினால் தனவரவு உண்டாகும். புதிய நபர்களுடன் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் சுபச் செய்திகள் உண்டாகும். தாய்மாமனுடைய உறவுகளில் ஏற்பட்ட பிரச்னைகளை நீங்கி, உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் அமையும். நிர்வாகத் திறமையினால் உங்களுக்கு இந்த வாரம் மேன்மை உண்டாகும்.

துலாம்
குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவுகள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் வாக்குவாதங்களின் மூலமாகவும் லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தப்பட்ட முதலீட்டில், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உயரம் அதிகமான இடங்களில் பணிபுரிகின்றவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நட்பும் நெருக்கமும் உங்களுககுக் கிடைக்கும். உங்களுடைய நற்செயல்களால் உங்களுக்குப் புகழ் உண்டாகும். இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு சுப செலவுகள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளுக்கு உதவி செய்துமனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல்கள் உருவாகும். கலைஞர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய புதிய நுட்பமான வித்தைகளைக் கற்றுக் கொள்வீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்து சேர்க்கைகள் உண்டாகும்.

தனுசு
சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலன்களும் லாபங்களும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான முயுற்சிகள் கைகூடும். உங்களுடைய நிர்வாகத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு, அதை செயல்படுத்தி பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய பயணங்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகளால் பெருமைகள் அடைவீர்கள்.

மகரம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, கொடுத்து மகிழ்வீர்கள். உங்களுடைய தொழில் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட கடன் வாய்ப்புகள் அமையப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

கும்பம்
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுடைய பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானங்கள் தேவை. வழக்குகளில் உங்களுக்கு மந்தத்தன்மை உண்டாகும். ஜவுளி வியாபாரத்தில் நீங்கள் எண்ணிய லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கோவில் சம்பந்தப்பட்ட திருப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

மீனம்
பணிபுரியும் இடங்களில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் உண்டாகும் பழுதுகளைச் சரிசெய்வீர்கள். உங்களுடைய நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். நண்பர்களுடன் சேர்ந்து செய்கின்ற அறச்செயல்களினால் உங்களுக்குப் புகழ் உண்டாகும். மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்கும். புனித யாத்திரைகளை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.



Click it and Unblock the Notifications











