இந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது?... ஏன்?

வார ராசிபலன்கள் 18.6.18 to 24.6.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

weekly predictions 18.6.18 to 24.6.18

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 18.6.18 to 24.6.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உயரிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய வேலை காரணமாக, பணியிட மாற்றத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீடு மற்றும் மனை வாங்கல், விற்பனை விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழலே உண்டாகும். உங்களுடைய மேலதிகாரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களுடன் சுற்றுலா, பார்ட்டி என்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மனதை குதூகலமாக வைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு போதிய முன்னேற்றம் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புதிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும்போது, நிதானமாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்களுடைய திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். பண விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள். பணம் கடன் கொடுக்கல், வாங்கலில் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு மேற்கொள்ளும் பயணங்களால் உங்களுககு அனுகூலமான பலன்கள் உண்டாக வாய்ப்புண்டு. மனதில் தேவையற்ற வீண் கவலைகளை வளர்த்துக் கொள்வதால் மனச்சோர்வு அதிகமாகும். வீட்டுக்கு புதிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அதிகமாகும். சக நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மிகத் தலங்களுக்கு பயணங்கள் சென்று வந்தால், மனம் லேசாகும். கவலைகள் தீரும். இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் வெற்றியுடன் நிறைவடையும். வீட்டில் பெரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக பேச வேண்டும். நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். புது செல்போன் வாங்கும் யோகம் இந்த வாரத்தில் உண்டாகும். வெள்ளிக்கிழமை தோறும் தனலட்சுமியை வழிபட்டு வாருங்கள். வீட்டில் செல்வம் பெருகும்.

மிதுனம்

மிதுனம்

உங்களுடைய சிறப்பான பணியினைக் கண்டு உங்களுடைய உயர் அதிகாரி பாராட்டுவார். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணியிலும் தொழிலும் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த சிறுசிறு உடல்பாதைகள் தீரும். வீட்டில் உள்ள பெரியோர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் பற்றி குறை சொல்வதை நிறுத்துங்கள். குடும்ப உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகலாம். வீட்டில் சுப செய்திகள் வந்து சேரும். அதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிர்பார்த்ததை விட தனவரவு அதிகரிக்கும். கடவுள் நம்பிக்கை பெருகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் வினைகள் தீரும்.

கடகம்

கடகம்

வேலையில் கொஞ்சம் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்து போகும். அதனால் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். திட்டமிட்ட அத்தனையையும் நினைத்ததைவிடவும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வெளியுலகத்தினரின் அனுபவங்களைப் பெறுவீர்கள். பெண்களின் மூலமாக ஆண்களுக்கும் ஆண்களின் மூலமாக பெண்களுக்கும் அனுகூலங்கள் உண்டாகும். வெகு நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணவரவு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களைக் கவர்வீர்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுங்கள். உங்களுடைய முழு பலமும் வெளிப்படும்.

சிம்மம்

சிம்மம்

வீட்டிலோ வெளியிலோ நண்பர்களிடத்திலோ தேவையற்ற வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகமாக்கத் தொடங்குவீர்கள். பொது நலன்களில் அக்கறை செலுத்துவீர்கள். வெளியுலகில் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை ஏதாவது இழுபறி நிலை இருந்து வந்தால், அவையெல்லாம் சிறிது சிறிதாக விலக ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவால் சாதகமான சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். சுயதொழில் செய்பவர்கள் அது சம்பந்தமாக எதிர்பார்த்துக் காத்திருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். வேலையிடத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். அதன்மூலம் மற்றவர்களிடத்தில் உங்களுடைய மதிப்புகள் உயரும். தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சிறந்த பலன்களைத் தரும். அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, குதூகலம் அடைவீர்கள். புதன்கிழமை தோறும் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

கன்னி

கன்னி

நீங்கள் திட்டமிட்டு செய்து கொண்டிருந்த காரியங்கள் உங்கள் திட்டப்படியே சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளின் மூலமாக, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களின் பரிபூரண முழு ஆசிர்வாதங்களும் உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலமாக, உங்களுக்கு சாதகமான சூழ்நிலை பணியிடங்களில் உண்டாகும். வீட்டில் மனைவி, பிள்ளைகளுக்கு ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பீர்கள். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் தகுதிக்கேற்ற சாதகமான வேலை வாய்ப்புகள் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களின் முழு ஆதரவும் உங்களுடைய முயற்சிக்குக் கைகொடுக்கும். சங்கிதம் சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் மறையும். உறவினர்களையும் நண்பர்களையும் புரிந்து நடந்து கொள்வீர்கள். சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபடுங்கள்.

துலாம்

துலாம்

அரசாங்கம் சம்பந்தப்பட்ட இதுவரை தள்ளிப்போய்க் கொண்டே இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி, நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களின் உதவியோடு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவினர்களிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். உங்களுடைய தொழில் நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து வந்தால், உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பொதுவாகப் பார்த்தால் மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். வெள்ளிக் கிழமை நாட்களில் துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள். நன்மை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வேலை செய்யும் இடத்தில் ஆரவாரமின்றி அமைதியாக செயல்படுங்கள். தானாக உங்களை உயர் அதிகாரிகள் திரும்பிப் பார்ப்பார்கள். உடன் பணிபுரிபவர்களிடமோ வீட்டிலோ தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் கனிவாகவும் அன்பாகவும் பழகுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடும் அளவுக்கு பணவரவுகள் உண்டாகும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வரவு இருக்கும். அவர்களிடம் பொறுமையாகப் பேசுங்கள். அரசு அதிகாரிகளால் எதிர்பார்த்த பணிகள் முடிவடைய கால தாமதம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்படுங்கள். உடன் பிறந்தவர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். தினமும் நாளை தொடங்கும்போது, விநாயகரை வழிபடுங்கள். இன்னல்கள் தீரும்.

தனுசு

தனுசு

உங்களுடைய தொழில், குடும்ப உறவு ஆகியவற்றுக்கு உறவினர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால், தொழிலில் லாபங்கள் கிடைக்கும். வீட்டில் உறவினர்களிடம் இருந்து சுப செய்திகள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களுடன் விழாக்களில் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால், எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனங்களைப் பராமரிப்பதற்கான புதிய செலவுகள் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான திறமையான பேச்சுக்களின் மூலமாக புகழ் பெறுவீர்கள். கால பைரவரை வழிபட்டு வாருங்கள். நிச்சயம் நன்மை உண்டாகும்.

மகரம்

மகரம்

சுயதொழில் செய்பவர்கள் தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் மேற்கொள்வார்கள். தொழில் போட்டிகளில் வெற்றிக்கான சூழல் உண்டாகும். பணியில் உள்ள மேலதிகாரிகளுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். ஆன்மீனத்தில் மனம் ஈடுபடும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய அறிமுகம் இல்லாத நபர்களிடம் விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்தத் தன்மை நீங்கி, வியாபாரம் சூடு பிடிக்கும். வீட்டில் குழந்தைகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். வாக்குவாதங்களில் ஈடுபடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். சனீஸ்வரனை வழிபட்டு வாருங்கள். தடைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.

கும்பம்

கும்பம்

வாகனங்களில் பயணம் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். அதனால் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் புதிய நண்பர்களுடைய வரவால் பொருள் சேர்க்கை உண்டாகும். புதுப்புது திட்டங்களை தொழில் வளர்ச்சிக்காக முயற்சி செய்து பார்ப்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது அவசியம். எந்த காரியமாக இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாக சிறிது காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இளைய உடன் பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். துர்க்கையை வழிபட்டு வாருங்கள்.

மீனம்

மீனம்

தொழில் முன்னேற்றத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களின் வழியாக சேமிப்பின் இருப்பை அதிகரிக்கச் செய்வீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதில் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். மனதில் புதுப்புது வித்தியாசமான எண்ணங்கள் உண்டாகும். கையில் எடுத்த காரியத்தை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்கள் பெரும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். அரசுப் பணிகளில் இருப்பவர்கள் வேலையில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். தொழிலுக்காக அரசு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன்மூலம் பெரும் லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகப் பணிகளில் நல்ல அனுகூலம் உண்டாகும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, June 18, 2018, 16:20 [IST]
Desktop Bottom Promotion