For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரர் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் எந்த பக்கம் திரும்பினாலும் வெற்றிதான்...

வார ராசிபலன்கள் 11.6.18 to 16.6.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்

weekly predictions

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 11.6.18 to 16.6.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் உள்ளவர்களிடம் கோபமாகப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். புதிய புதிய முயற்சிகளை சோதனையாக செய்து பார்ப்பீர்கள். ஆனால் அது வெற்றியடைவதற்கு முன்பாக உங்களுக்கு சில சோதனைகளைக் கொடுக்கும். கவலைப்படத் தேவையில்லை. இறுதியில் உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். வீடு மற்றும் மனை வாங்கும் விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். பெரியவர்களிடம் ஆசிவார்தம் கிடைக்கும். எதிர் பாலினத்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாகவே இருக்கும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். தொழிலில் இருக்கும் போட்டிகளை மிக எளிமையாக சமாளிப்பீர்கள். பங்காளிகள் வழி உறவு முறையினரால் நன்மைகள் உண்டாகும். இந்த வாரம் முழுக்க பெருமாளை வழிபட்டு வந்தால் இன்பங்கள் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்களுடைய வேகத்தைக் குறைத்துக் கொண்டு விவேகமாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். புதுப்புது முயற்சிகளை சோதனை செய்து பார்த்தாலும் அதன் மூலம் தாராளமான பணவரவு உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சொத்துக்கள் வாங்கும் யுாகம் உண்டாகும். மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். வீண் செலவுகளை நீங்களாக தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆன்மீகுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் கொஞசம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த இடங்களில் கடனுதவிகளும் கிடைக்கும். தொழில் விருத்திக்குப் பயன்படுத்துங்கள். நண்பர்குள் மூலம் பயன் பெறுவீர்கள். மகாலட்சுமியை வழிபடுங்கள். செல்வ கடாட்சம் உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் உண்டாகும். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். சிறுசிறு உடல் நலக் கோளாறுகள் வந்து போகும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். சிறுசிறு தடங்கல்கள் ஏற்படும். பின் மெதுவாக பலன் தரும். வெளியூா் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். தொழில் சம்பந்தமாக புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். கூட்டுத் தொழிலில் உங்களுக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் அமையும். தொழிலில் புதிய புதிய சிந்தனைகள் உண்டாகும். சிவபெருமானை வணங்கி வந்தால் இடைஞ்சல்கள் நீங்கி, மனதில் நிம்மதி உண்டாகும்.

கடகம்

கடகம்

வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பொது இடங்களில் மற்றவர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் மூலமாக, நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் பெரியோர்களிடமி இருந்து பெறுவீர்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் பொறுப்புகளும் பணிச்சுமையும் அதிகரிக்கும். எந்த செயலைச் செய்தாலும் அதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். ஸ்ரீராமரை வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

சிம்மம்

சிம்மம்

புதிய புதிய சூழல்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான புதிய இலக்குகளைத் தீர்மானிப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கோபத்தைக் குறைத்து கனிவாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த தன வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். வுலை செய்யும் இடங்களில் மன நிறைவான சூழல்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்திடுங்கள். வீட்டில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். தந்தைவழி உறவு முறைகளால் அனுகூலம் உண்டாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது துன்பங்களைத் தீர்த்து நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி

சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் சாதகமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களுடைய விவாதத் திறமையாலும் திறமையான பேச்சின் மூலமும் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் வழியாக லாபகரமான விஷயங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். நண்பர்களுக்கு இடையில் மனக்கசப்புகள் தீரும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் நெருக்கம் ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். தன்னம்பிக்கை பெருகும்.

துலாம்

துலாம்

தொழிலை மேம்படுத்துவதற்கான பல புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்தாலும் இனி விரைவாக பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் கொஞ்சம் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் கூட அதிக லாபத்தைப் பெறுவீர்கள். புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். வீட்டில் நீங்கள் எதிர்பார்க்காத உறவினர்களின் வருகையினால் குதூகலம் பெருகும். மாணவர்களுக்கு புதுவிதமான நல்ல சூழல்கள் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுவீர்கள். வெளியுலகில் உங்கள் மீதான மதிப்புகள் உயரும். ஆஞ்சநேயரை வழிபடுங்கள். தன்னம்பிக்கையும் வெற்றியும் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் அதை தைரியத்துடன் எதிர்கொண்டு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். நினைத்த காரியங்களை திட்டமிட்டு செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். குடும்ப உறவினர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டில் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் மேன்மை உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களின் உதவியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். விநாயகரை வழிபடுங்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

தனுசு

தனுசு

தொழிலில் புதிய புதிய முயற்சிகளை முயுற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு எளிமையாக வெற்றியைத் தேடித் தரும். உறவினர்களால் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் வெற்றியை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். உடன் பிறந்த சகோதரர்களால் பெரும் ஆதரவு உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். மாணவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பெற்றோர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகளை நீக்க முயுற்சிகளை மேற்கொள்வர்கள். ஐய்யப்பனை வழிபட்டு வந்தால், உங்களுக்கு சிறந்த பலன்கள் உண்டாகும்.

மகரம்

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முக்கியமான உத்தியோகத்தில் இருப்பவர்கள்.உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தமாக புதிய முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக குதூகலத்தில் மிதப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்புகள் உயரும். வீட்டில் கால்நடைகள் ஏதேனும் இருந்தால் அதன்மூலமும் லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. மனைவி வழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயமான சூழல்கள் உண்டாகும். சனீஸ்வரனை வழிபடுங்கள். மேன்மை உண்டாகும்.

கும்பம்

கும்பம்

உயர் அதிகாரிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள். புதிய நபர்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகளைப் பெற கொஞ்சம் காலதாமதமாகும். தொழில் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிறிது கடன் வாய்ப்புகள் அதனால் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீடு, மனை வாங்கும் விஷயங்களில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். வெளியூா பயணங்களில் கால தாமதம் ஏற்படலாம். வீட்டில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடைமைகளில், பொருள்களைப் பாதுகாப்பதில் கவனம் வேண்டும். துர்க்கையை வழிபட்டு வந்தால் நன்மைகள் பெருகும்.

மீனம்

மீனம்

பணிபுரியும் இடங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த சில சமயங்களில் எதிர்பாராத சில தாமதங்கள் ஏற்படும். பொன் மற்றும் பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுவீர்கள். அது கொஞ்சம் மனநிம்மதியைத் தரும். உடன் பிறந்தவர்களால் ஆதாயங்கள் உண்டாகும். கடன் பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.வர்த்தகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்தால் லாபம் பெருகும். குரு பகவானை வழிபட தடைகள் நீங்கி, நன்மை உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

weekly predictions 11.6.18 to 16.6.18 what says you should know according your astro signs

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Desktop Bottom Promotion